கேந்திர ஸ்தானங்களும் விவசாய காரிய நன்மையும்...

கேந்திர ஸ்தானங்களும் விவசாய காரிய நன்மையும்...

இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் வேளாண்மை தொழிலை சார்ந்து நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். காலகணிதம் என்ற பஞ்சாங்கத்தின் பயன்கள் பெருமளவு விவசாயிகளின் நன்மை கருதி அமைக்க பட்டிருப்பதை காண முடியும் அதாவது மழையளவு, மழை வரும் திக்கு, எந்த மாதிரியான பயிர்கள் போன்ற அறிவுரைகள் வரை கூறப்பட்டிருக்கும் அதே போல பஞ்சாங்கத்துடன் சார்பு பந்தபட்டுள்ள ஜோதிடத்திலும் விவசாயிகளின் ஜாதகத்தில் வேளாண்மை சார்ந்த பார்வையுடன் காரகங்கள் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு விவசாயின் ஜாதக இராசி சக்கரத்தில்

அவரின் லக்னமும் லக்னாதிபதியும் அந்த உழவனை (பயிரிடுகிறவர்) சுட்டுகாட்டும்.

அவரின் 4ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவன் பயிரிடும் நிலத்தையும், கால்நடைகளையும் சுட்டுகாட்டும்.

அவரின் 7ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவனின் வேளாண்மை (சாகுபடி) வளர்ச்சியின் பயிர் பிடிப்பை சுட்டுகாட்டும்.

அவரின் 10ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவனின் விளைச்சலின் வளர்ச்சியில் கிடைத்த பயிர்களை (சாகுபடி பலன்) சுட்டுகாட்டும்.

இதை கொண்டு பல பலன்களை காண்கிறார்கள் உதாரணமாக
ஒரு விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களுக்கிடையே சுப பரிவர்த்தனையை அந்த கிரகங்கள் அடைந்தால் வேளாண்மை விளைச்சல் சாதகப்படும்.

ஒரு விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகள் சுப பலத்தை அடைந்து அந்த கிரகங்களின் திசாபுத்தி காலமும் நடைபெற்றால் வேளாண்மை விளைச்சல் சாதகப்படும்.

ஒரு விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகள் சுப பலத்தை அடைந்து இருந்தாலும் அந்த கிரகங்களின் திசா காலகட்டமும் இருந்தாலும் அதில் ஒரு வலுவான பாப கிரகத்தின் புத்தி நடைபெற்றால் அந்த காலகட்டத்தின் வேளாண்மை விளைச்சல் குறைவுபடும்.

ஒரு விவசாயின் லக்னமும் லக்னாதிபதியும் பாப கிரகங்களுக்கிடையே சூழ்ந்தால் பயிர்கள் திருடர்களின் திருஷ்டியால் பாதிக்கபட வாய்ப்பு உண்டாகும்.

இவ்வாறாக பல விதிகள் சொன்னாலும் வேளாண்மை என்பது வெப்பம், காற்றுக்கும் மழைவளத்திற்கும் (நீருக்கும்) நேரடி தொடர்பு பெற்றால் காலகணிதமான பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம் இங்கு அதிகம். காலகணிதமான இயற்கை நமக்கு எப்போது நன்மை செய்யாவிட்டாலும் இப்போது வரை நம்மை காத்து கொண்டி தான் வருகிறது அதன் சுபாவம் அது, அதுவே நாம் அதை எதிர்த்து இயற்கை அழித்து அதை மீறி நடந்தால் தண்டனை தருவதிலும் இயற்கை ஈவு இரக்கம் காட்டாது எமது கவிதை ஒன்றில் இவ்வாறு எழுதி இருப்பேன் -

"மலையும் மழையும் வேளாண்மையின் வளங்கள்
மலையை வெட்டி கற்களை கடத்தினார்
மழையை தடுத்து நீரை கடத்துகின்றார்
நிலமும் மலமும் வேளாண்மையின் களங்கள்
உரத்தை நிறைத்து கழனியை கசடாக்குகிறார்
மலத்தை பிரித்து மண்ணை வீணாக்குகிறார்
நீரை செவ்வாயிலும் வாழ்விடத்தை வீண்ணிலும்
தேடும் மதி கொண்ட மானிடரே
எல்லாம் வியாபாரமானால்
எல்லாமே லாபத்திற்குமானால்
வாழ்க்கை நட்டத்தில் முடியும்" - சிவதத்துவ சிவம்

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் கார்த்திகை - திருமண நட்சத்திர பொருத்தம்...


பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் கார்த்திகை - திருமண நட்சத்திர பொருத்தம்...

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் கார்த்திகை அஸ்வினி நட்சச்திரம் வரை எண்ண 26 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் கார்த்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் கார்த்திகை நட்சச்திரம் எண்ண 26 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின்  கார்த்திகை நட்சச்திரம் எண்ண 26 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் கார்த்திகை நட்சச்திரம் மிருகப் பிரிவு ஆடு ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் மேஷ இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 11 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.
பெண் மிதுன இராசி ஆகி ஆண் ரிஷப இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 12 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் மேஷ இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனுக்கு செவ்வாய் சம உறவுமுறை மற்றும் செவ்வாயிக்கு புதன் பகை உறவுமுறை வருவதால் இராசி அதிபதி சம பொருத்தம் உண்டு.
பெண் மிதுன இராசி ஆண் ரிஷப இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனுக்கு சுக்கிரன் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் மேஷ இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.
இதில் பெண் மிதுன இராசி ஆண் ரிஷப இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் கார்த்திகை நட்சச்திரம் வயிறு ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் கார்த்திகை நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் கார்த்திகை நட்சத்திரம் சிலேத்தும நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் கார்த்திகை நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் கார்த்திகை 1ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் கார்த்திகை 2,3,4 ஆம் பாத நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 8 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


மிதுனம் & கடகம், மிதுனம் vs கடகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


மிதுனம் & கடகம், மிதுனம் vs கடகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ கடகம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & கடகம், மிதுனம் vs கடகம்




சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் ஹோரை சக்கரம்…

சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் ஹோரை சக்கரம்

சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளிலும் ஒரே மொழி குடும்பத்தில் இருந்து வந்தவை தான் இந்த மொழிகளுக்கிடையே பல ஒற்றுமைகளை அறிஞர்கள் சொல்லுகிறார் ஆங்கிலத்தில் உள்ள Hour என்ற சொல் சமஸ்கிருததில் உள்ள horā என்ற சொல் ஆகிய இரண்டு ஒரு மணி நேரம் என்ற பொருளை உடையன இந்த horā என்ற சொல்லில் இருந்து horoscope (ஜாதகம்) என்ற ஆங்கில சொல்லும் வந்துள்ளது.மணி நிலை பிரிவை காட்டும் ஹோரா என்ற சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் வர்க்க சக்கரமாக உள்ளது இந்த ஹோரை சக்கரம் (ஹோரா சக்கரம்). எப்போது இரண்டு கோஷ்டிகள் இருந்து கொண்டிருப்பதை அரசியல் மற்றும் நடிப்பு போன்ற துறைகளில் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் அது போல நவகிரகங்களையும் 12 இராசிகளையும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கி அந்த இரண்டு கோஷ்டிகளின் பலம் பலவீனத்தை பார்க்க பயன்படுத்துவது தான் ஹோரை சக்கரம். 12 இராசிகளில் 30 பாகை கொண்ட ஒவ்வொரு இராசியையும் 15 பாகையாக இரண்டு கோஷ்டிகளாக ஆக்கி மேலும் ஆண் இராசியானால் ஆண் ஹோரை 15 பாகை முதலாகவும் பெண் இராசியானால் பெண் ஹோரை 15 பாகை முதலாகவும் கொண்டு இரண்டு கோஷ்டிகள் பிரிக்கபடும்.

அடுத்து நவகிரகங்களில் சூரியனின் தலைமையில் ஒரு கோஷ்டி சந்திரனின் தலைமையில் ஒரு கோஷ்டி என்று பிரிக்கபடும். அதாவது

சூரியனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் செவ்வாய், குரு, கேது கிரகங்கள் அணி நிற்கும்
சந்திரனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் புதன், சனி, சுக்கிரன், ராகு கிரகங்கள் அணி நிற்கும்

இதில் புதனை நடுநிலையானவர் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. ஆக இவ்வாறு நம்மால் நவகிரகங்களிலும் 12 இராசிகளிலும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கப்படுள்ளது. இதில் சூரிய ஹோரையும் சூரிய கோஷ்டிகளும் ஆண்மைக்கான குணங்களான தைரியம், போராட்ட குணம், போட்டிகளில் பங்கேற்று வெல்லக்கூடிய ஆற்றல், கோபம், அசட்டு துணிவு, தேக பலம்... போன்றவைகளாகும். சந்திர ஹோரையும் சந்திர கோஷ்டிகளும் பெண்மைக்கான குணங்களான அழகு, கற்பனை, சுவை,உள்ளுணர்வு, உணவு, குளிர்... போன்றவைகளாகும். இதை இன்னும் ஆழமாக தெரிய முறையாக ஜோதிட கல்வி பயில வேண்டி வரும், இதை D-2 Chart என்று சுருக்கமாக அழைக்கிறார்கள், தன (செல்வம்) பலத்தையும் இதில் பார்க்கலாம் என்றும் சொல்லுகிறார்கள்.


இது ஒரு பிரபலமான பெண் ஜோதிடரின் ஜாதகம், இந்த பெண் ஜோதிடருக்கு ஹோரை சக்கரம் அமைந்த விதம்

{லம்}
சந்திர ஹோரை
சந்தி
சந்திர ஹோரை
சூரிய
சந்திர ஹோரை
புதன்
சூரிய ஹோரை
சுக்ரன்
சந்திர ஹோரை
செவ்
சந்திர ஹோரை
குரு
சூரிய ஹோரை
சனி
சூரிய ஹோரை
ராகு
சூரிய ஹோரை
கேது
சூரிய ஹோரை

ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்

சூரிய ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்
சந்திர ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
சனி
வியாழன்
சுக்கிரன்
கேது
ராகு
புதன் நடுநிலை

இவரின் ஹோரையின் கிரக நிலை

{லம்}
சந்திர ஹோரை
பொது நிலை
சந்தி
சந்திர ஹோரை
ஆதரவு நிலை
சூரிய
சந்திர ஹோரை
எதிர் நிலை
புதன்
சூரிய ஹோரை
பொது நிலை
சுக்ரன்
சந்திர ஹோரை
ஆதரவு நிலை
செவ்
சந்திர ஹோரை
எதிர் நிலை
குரு
சூரிய ஹோரை
ஆதரவு நிலை
சனி
சூரிய ஹோரை
எதிர் நிலை
ராகு
சூரிய ஹோரை
எதிர் நிலை
கேது
சூரிய ஹோரை
ஆதரவு நிலை
மாந்
சூரிய ஹோரை
எதிர் நிலை

இதில் ஆதரவு நிலை எடுத்த கிரகங்கள் ஜாதகத்தில் சுப பலமாக இருந்தால் சூரிய ஹோரையாக இருந்தால் சூரிய ஹோரைக்கு தக்க சுப பலன்களும், சந்திர ஹோரையாக இருந்தால் சந்திர ஹோரைக்கு தக்க சுப பலன்களும் தரும். உதாரண இந்த ஜாதகத்தில் ஒரு பெண்ணாக பிறந்த இவர் ஆண்கள் கை ஓங்கி உள்ள ஜோதிடத்துறையில் வரவேற்க்க தக்க பல முயற்சிகளை செய்து ஜோதிடத்தில் புத்தகங்கள் எழுதியதுடன் விருதுகளும் வாங்கி உள்ளார். லக்னாதிபதியும் ஜோதிடத்திற்கு முக்கிமான வாக்கு ஸ்தானாதிபதியும் ஆன சனி பகவான் 11ல் அமர்ந்து மூன்றாம் பார்வையாக தனது லக்னத்தை பார்த்துள்ளார் ஜோதிடத்துறையின் சம்பந்த கிரகமான புதனின் 7 ஆம் பார்வையும் பெற்றுள்ளார் பூர்வ புண்ணியத்தை தரக்கூடிய கேதுவுடனும் சேர்ந்துள்ளார் நவாம்சத்தில் சனி ஆட்சி அம்சமும் அடைகிறார் இப்படி பலமடைந்த சனி பகவான் தனக்கு ஹோரையில் எதிர் நிலையான சூரிய ஹோரையை அடைந்ததால் பெண்கள் தயங்கும் ஆண்கள் கை ஓங்கி உள்ள ஜோதிடத்துறையில் எதிர் நிலையாக நுழைந்து சிறப்பான அங்கீகாரங்கள் பெற்றுள்ளார். இப்படி சிலருக்கு ஹோரை சக்கரத்தில் ஆதரவான நிலையில் நின்று சில கிரகங்கள் பலம் தரலாம், எதிர் நிலையில் நின்றும் சிலருக்கு பலம் தரலாம், அதே போலத்தான் சிலருக்கு ஹோரை சக்கரத்தில் ஆதரவான நிலையில் பலவீனமாக நின்று தொந்தரவுகள் தரலாம் சிலருக்கு எதிரான நிலையில் பலவீனமாக நின்று தொந்தரவுகளும் தரலாம்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger