எனது ஜோதிட நூல்கள்
ஜோதிடத்தில் ஜாதகத்தில் சந்திரனே மனோகாரகன் ஆகும் எனவே ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலிமையாக அமைந்தாலும் அல்லது குரு மற்றும் சுக்கிரன் வலிமையாக அமைந்தாலும் அவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக அமையாவிட்டால் என்னதான் புதன், சுக்கிரன், குரு வலிமையாக அமைந்தாலும் அதனால் முழு பயனை அடைய முடியாது அந்த ஜாதகர் இதுதான் சந்திரனின் மிகப்பெரிய பலம், அதேபோல சூரியனிலிருந்து வரும் ஜீவாத்மா பலம், பூர்வ புண்ணிய பலம் போன்றவற்றை சந்திரனின் மூலமாகவே மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் இதனாலும் சந்திரனுக்கு மிகப்பெரிய பலம் உண்டு ஜோதிடத்தில்.
இப்படிப்பட்ட சந்திரனை வைத்து பார்க்கப்படும் பலன்களை அதாவது எனக்கு எனது பிறந்த ராசி மட்டும்தான் தெரியும், எனக்கு நான் பிறந்த நட்சத்திரம் மட்டுமே தெரியும் என்று உள்ளவர்களுக்கு இந்த புத்தகத்தில் அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு உண்டான பலன்களைக் காணமுடியும், மேலும் அடிப்படை ஜோதிட அறிவு மட்டும் தெரிந்த அன்பர்களுக்கு தங்கள் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் பலாபலன்களை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும், மேலும் தனித்துவமாக ஒரு ராசியில் ஆண் பிறந்தால் எப்படிப்பட்ட மன அமைப்பு அமையலாம் அதே ராசியில் ஒரு பெண் பிறந்தால் எப்படிப்பட்ட மன அமைப்பு அமையலாம், சந்திரனோடு கிரகங்கள் சேர மட்டும் பார்ப்பதால் ஏற்படும் பொது பலன்கள் என இதுபோன்ற எல்லாம் இந்த நூல் மூலமாக தெரிந்து கொள்ளலாம், சுருக்கமாக சொல்வதென்றால் நவகிரகங்களில் மன காரகன் ஆகவும் உடல் காரகன் ஆகவும் திகழ்கின்ற சந்திர பகவானை வைத்து பார்க்கப்படும் பலன்களை பெருமளவில் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவியாக இருக்கும் என்று கருதி தங்களிடம் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
கோள் ஸ்தான பலன் - சாதக பாதக கிரக ஸ்தான பலன் (எனது ஜோதிட தமிழ் நூல்) - சிவதத்துவ சிவம்
ஜனனம் என்ற லக்ன தேகத்தில் தொடங்கி, குடும்பம் என்ற அங்கத்தில் கலந்து, சகோதரம் என்ற துணையை சேர்த்து, வீடு என்ற கூட்டில் வாழ்ந்து, புத்தி என்ற அறிவாய் மலர்ந்து, எதிர்ப்பு என்ற நிலையை எதிர்கொண்டு, இல்லறம் என்ற இயக்கத்தில் கலந்து, ஆபத்து என்ற சிதைவை கண்டு, தர்மம் என்ற புனிதத்தை கடைபிடித்து, கர்மம் என்ற வேலையில் மூழ்கி, லாபம் என்ற முத்தை எடுத்து, அந்தம் என்ற கடைசியையும் கண்டு முடியும் வாழ்க்கை சக்கரம் என்ற 12 ஸ்தானங்களில் நவகிரகங்களும் சேர்ந்தோ அல்லது தனி தனியாகவோ அமரும் போது உண்டாகும் நவரசமான பலன்களும் அந்த பலன்களை ஒவ்வோரு கிரகமும் சாதகமாக ஒரு ஸ்தானத்தில் அமரும் போது எந்த விதமான சாதகமான அடிப்படை பலன்களை தரும் அதே கிரகம் பாதகமாக ஒரு ஸ்தானத்தில் அமரும் போது எந்த விதமான பாதகமான அடிப்படை பலன்களை தரும் என்பதை இந்த புத்தகத்தில் படிக்கலாம், ஒரு ஸ்தானத்தில் ஒரு கிரகம் சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதை அனுபவ பூர்வமாகவே உணர்ந்து கொள்ள முடியும் இருந்தாலும் கிரகங்களின் நிலைமை அதாவது ராசி சக்கரம், நட்சத்திரம், பாதம், கிரக சேர்க்கை, கிரக பார்வை, கிரக அவஸத்தை, யோகம், பாகை இருப்பு, நவாம்சம் உள்பட உள்ள வர்க்க சக்கரம் நிலைமை இது போன்ற ஜோதிட அமைப்புகளில் எப்படி உள்ளது என்று கண்டு அறிய தெரிந்தவர்களுக்கு இதில் சொல்ல பட்ட சாதக பாதக பலன்களை பிரித்து அறிய முடியும்.
Amazon Kindle - Tamil E-Book - கோள் ஸ்தான பலன் - சாதக பாதக கிரக ஸ்தான பலன் (எனது ஜோதிட தமிழ் நூல்) - சிவதத்துவ சிவம்
ஜோதிட ராஜயோகங்கள் அறுபது விதியும் பலனும் (தமிழ் மின்நூல்) : - https://www.amazon.in/dp/B0916CTK7B
யோகம் என்ற வார்த்தைக்கு இணைத்தல், அனுப்புதல், தொடர்பு கொள்ளல் என்றெல்லாம் பொருள்படும் ஜோதிடத்தில் இந்த யோகம் என்ற சொல் கிரகங்களின் இணைவு அல்லது தொடர் கொள்ளல் என்று பொருள் கொள்ளபடும், கிரகங்கள் குறிப்பிட்ட பாகை அமைப்பில் இணைந்து அமையும் போதோ அல்லது கிரகங்களின் கதிர் வீச்சி மற்றும் கிரகங்களின் அலைவீச்சு குறிப்பிட்ட பாகை இடைவெளியில் தொடர் கொள்ளும் படி அமையும் போதோ அதை கிரக யோகம் என்ற அழைக்கபடுகிறது, இப்படி அமையும் யோகங்களால் நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுகிறது உலகத்திற்கு, அதே போல ஒரு நபரின் வாழ்க்கையிலும் நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுவதை எடுத்துக்காட்டுகிறது, இப்படி அமையும் யோகங்கள் நன்மை தருவதாக இருந்தால் அதை சுபயோகம் என்றும் அதுவே தீமை தருவதாக இருந்தால் அதை அவயோகம் என்றும் அழைப்பார்கள், இந்த புத்தகத்தில் பெரும்பாலும் சுப யோகங்களை தான் பார்க்க போகிறோம் இந்த சுப யோகங்களை ராஜயோகங்கள் என்று சிறப்பித்து அழைப்பது வழக்கம் ஆகும் அந்த வகையில் ஜோதிட கலையின் பழைய நூல்களில் சொல்லப்பட்ட ராஜயோகங்கள் மற்றும் அடுத்த வந்த ஜோதிட கலையின் முன்னோர்கள் சொல்லி சென்ற ராஜயோகங்கள் மற்றும் எனது அனுபவத்தில் கண்ட ராஜயோகங்கள் என ஒரு தொகுப்பாக இந்த புத்தகத்தில் படிக்கலாம், இதில் சொல்லபட்ட ராஜயோகங்களின் பலன்கள் அந்த நூல்களில் சொல்லபட்டதுடன் எனது கணிப்பில் கண்ட பலன்களை சேர்த்து தான் எழுதி இருக்கிறேன், மேலும் ஒவ்வொரு ராஜயோகத்திற்கும் அதற்கான விதியும் பலனும் அத்துடன் அதற்கான உதாரண ராசி சக்கர அல்லது அம்ச சக்கர படத்துடன் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தங்கள் ஜாதகத்தில் இதில் சொல்லபட்ட யோகங்கள் அமைய பெற்றவர்களுக்கும் அதறக்கான பலனை அறிந்த கொள்ள இந்த நூல் உதவும் மேலும் ஜோதிடத்தை விரும்பி படிப்பவர்களுக்கும் ராஜயோகத்தின் விதியை பலன்களை அறிய இந்த நூல் உதவும்.
இதய குகையில் உறையும் அருமை தெய்வமாம் முருகப்பெருமானின் மீது கொண்ட அன்பினால் மற்றும் பக்தியினால் இந்த முயற்சியை செய்துள்ளேன் என்னைப் போன்ற மேலும் உள்ள பல முருக பக்தர்களுக்கு அவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு முருகப்பெருமானின் பெயர்களை சூட்டி அனுதினமும் நாவார முருகப்பெருமானின் திருநாமத்தை கூப்பிட்டு மகிழ அவர்களுக்காக முருகனின் திருநாமங்கள் சுமார் 600 பெயர்களை சேகரித்து இந்த சிறிய புத்தக வடிவில் தந்துள்ளேன், இந்த பெயர்களை தமிழின் எழுத்து வரிசையில் அமைத்து தந்துள்ளேன் இதுபோக நிறைய பெயர்கள் முருகப்பெருமானுக்கு இருந்தாலும்கூட அதில் பல பெயர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு பொருந்தி வருவதாக இல்லாததால் அந்த பெயர்களையெல்லாம் விட்டுவிட்டேன் உதாரணமாக சாண்மாதுரன் என்ற முருகனின் பெயர் எடுத்துக் கொள்வோம் இந்த பெயரின் பொருள் அகப்பட்டது ஆறு தாய்மார்களால் (கார்த்திகை) வளர்க்கப்பட்டவன் என்று அர்த்தம் தரும் பெயர் இந்த பெயர் முருகனுக்கு மட்டுமே உகந்த பெயராக உள்ளது இப்படிப்பட்ட பெயர்களை தவிர்த்துள்ளேன் அதுபோக சில முருகப்பெருமானின் பெயர்கள் மிக உயர்ந்த பெயராக இருந்தாலும் அந்த பெயர்கள் சன்யாச குருமார்களுக்கு சூட்டுவதற்கு உகந்த பெயராக உள்ளது அதனால் அப்படிப்பட்ட பெயர்களை தவிர்த்துள்ளேன் உதாரணமாக ஞானச்சித்தன், சித்தாசனன் இவ்வாறான பெயர்கள் அதில் அடங்கும், இது போக தொகுத்துள்ள பெயர்களை இதுல காணலாம் மேலும் சிலர் பெயர்களுக்கான அர்த்தங்களையும் தந்துள்ளேன்.
முருகக் கடவுளின் திருப்பெயர்கள் 600: ஆண் குழந்தைகளுக்கு முருகனின் பெயர்களை சூட்ட பயன்படும் (Tamil Edition)
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் C.Com - 97893 12306, 94894 32309
Do.No. 9/15-8, Saravana Nagar, Perur Pachaaplayam
Perur, Coimbatore – 641010, Tamil Nadu | India
Web - www.jodhishsivam.com
Youtube Channel Name - Sivathathuva Sivam