தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி - தசாம்சம் கிரக ராசி பலம்…


தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி - தசாம்சம் கிரக ராசி பலம்


நம் முன்னோர்கள் வகுத்துகொடுத்த வர்க்க அம்சங்களில் தொழிலின் நிலை அறிந்து கொள்ள கொடுக்கபட்ட வர்க்க முறைதான் தசாம்சம் கணிதம் ஆகும் இதை கணிக்க இரு மூன்று வழிகள் பின்பற்றபடுகின்றன அப்படி கணிக்கபடும் தசாம்ச கட்டத்தில் அதன் சுப பலத்தை அறிந்துகொள்ள எளிமையான சில வழிகளை ஜோதிட விதிகளின் மூலமாக தருகிறேன்,

எப்போதும் மறக்க கூடாத விதி இராசிக்கட்டமே நமது தாய் கட்டம் அதனால் அதனோடு சேர்த்து தான் எந்த வர்க்கத்தின் பலனையும் அறிய வேண்டும், அப்படி உள்ள ஒருவரின் இராசி கட்டத்தில் பணபர ஸ்தானங்கள் என்ற பணபலத்தை காட்டும் ஸ்தானங்களை முதன்மையாக எடுத்துக்கொள்ளாமல் தொழில் மதிப்பு திறமை துறையை காட்டும் கேந்திர ஸ்தானங்கள் ஆன 1, 4, 7, 10 ஆம் ஸ்தானங்களின் பலத்தை கொண்டு ஒருவரின் தொழிலின் மதிப்பு திறமை துறையை புரிந்து கொள்ள முடியும்.

பலருக்கு தோன்றலாம் தொழில் திறமை இருந்தால் பணபலம் வந்து விடுமே என்று அது உண்மையாக இருக்கலாம் இருந்தாலும் இறைவனின் படைப்பானது பல வித்தியாசமான கலவைகளை கொண்டதாக இருக்கிறது அதனால் தான் என்னவோ ஒரு பழைய பாடலில் கண்ணதாசன் அவர்கள் இப்படி எழுதியிருப்பார் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லைஎன்று அதனால் சில சமயங்களிலில் திறமையும் பணமும் சம்பந்தமில்லாத மனிதர்களிடமும் ஒன்று குறைந்து ஒன்று மிகுந்து என முரண்பட்டு இருப்பதை உலகில் காண முடிகிறது சரி இப்போது இராசிகட்டத்தில் கேந்திர ஸ்தானங்கள் ஆன 1, 4, 7, 10 ஆம் ஸ்தானங்களின் அதிபதிகள் தசாம்ச கட்டத்தில் வலுவான தொடர்பு அம்சங்கள் கொள்ளும் போது விளையும் தொழில் மதிப்பு திறமை துறைகளை மேலோட்டமாக சிலவற்றை பார்ப்போம்
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

1 Response to "தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி - தசாம்சம் கிரக ராசி பலம்…"

  1. ஐயா,நான் ரிஷபலக்னம், துலாம்ராசி. லக்னப்படியும் ராசிப்படியும் சனியே யோகராக வருகிறார். என் ஜாதகத்தில் ஏழில் அமர்ந்து பதினொன்றிலுள்ள குருவின் பார்வை பெறுகிறார். ஆனாலும் பாகைகளின் அடிப்படையில் அவர் விருச்சிகத்தில் 29°அளவில் உள்ளதாலும் எட்டில் நுழைந்துள்ள சூரியனால் (1°) அஸ்தங்கமும் அடைகிறார். இந்நிலையில் பத்தாமாதியாக இவர் இருப்பதாலேயோ என்னமோ எனக்கு இன்னும் நிரந்தர தொழில் அமையவில்லை. ஆனாலும் அவரின் காரகத்துவங்களில் ஒன்றான கம்பியூட்டர் புரோகிராமர் ஆகவே நான் இதுவரைக்கும் இருந்துவருகிறேன். ஆனால் எந்த உத்தியோகத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது. மேலும் நான்காமாதியாக சூரியனும் அமைவதாலும் இதுவரை நான் அனேக உத்தியோகங்களை கைவிட்டமை எனது தாயின் தூண்டுதலாலேயே நிகழ்ந்தன. எனக்கு சனிதசை 2023லே தான் ஆரம்பமாகின்றது.

    உங்களிடம் கேட்க உள்ள கேள்வி என்னவென்றால்,
    சனியை பலப்படுத்துவதற்காக நான் நீலக்கல் மோதிரம் அணிந்தால், அது நன்மையளிக்குமா அல்லது விபரீதமாகிவிடுமா..? ஏனென்றால் ஜாதகப்படி எனது மாத்ருஸ்தானாதிபதி சூரியன் மற்றும் களத்திரஸ்தானாதிபதி செவ்வாய் இவர்களிருவருக்கும் சனி பகைவராவதால் நீலக்கல் மோதிரத்தால் எனது தாய்க்கோ மனைவிக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்திடுமோ என்றும் பயமாக உள்ளது. ஏனெனில் ஜாதகப்படி சூரியன் எட்டிலும் செவ்வாய் ஆறிலும் மறைகின்றனர். சனி செவ்வாயின் வீட்டிலிருந்து கொண்டு மாத்ருஸ்தானத்தையும் பார்க்கின்றார்..!
    நீலக்கல் மோதிரம் அணியலாமா வேண்டாமா..? பதில் கூறுவீர்களா..?

கருத்துரையிடுக

Powered by Blogger