எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) ஜாதகம் கணிப்பு - புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி...


எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) ஜாதகம் கணிப்பு - புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி...

கருநாடக இசையின் பாட்டுத்துறையில் பலரின் ஈர்ப்பு பெற்ற குரலும் மற்றும் இசைஞானமும் கொண்ட கலைஞர் இவர். பல மொழிகளில் இவர் பாடியும் அந்நிகழ்ச்சிகளால் பலரிடம் புகழும் அது போக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி உள்பட சங்கீத கலைகளுக்கான பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவரும் ஆகும்


எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) ஜாதகம்
நவாம்ச சக்கரம்
கடுமையான அல்லது திக்கற்ற குடும்ப கலாச்சார சூழல் பின்னணியில் இருந்து வந்தவர் இவர் அது இவரின் ஜாதகத்திலேயே ஒரளவு தெரிகிறது லக்னாதிபதி சுக்கிரனும் மேலும் பூர்வ பாரம்பரிய பின்னணியை காட்டும் சனியும் சேர்ந்து தனக்கு பகை தரும் இராசியில் அமர்ந்ததுடன் கேதுவுடனும் சேர்ந்து அமர்ந்துள்ளது மேலும் அம்சத்திலும் சனி பகை தரும் இராசிக்கு போய் உள்ளது. குடும்ப ஸ்தானாதிபதி செவ்வாய் தன் ஸ்தானத்திற்கு 12ல் மறைந்துள்ளது மட்டுமல்லாமல் இராகுவின் சாரம் பெற்று அம்சத்தில் இராகுவுடனே அம்சத்தை பகிர்ந்துள்ளது இது போன்ற காரணங்களால் தனது இளமையில் மிக சிரமங்களை சந்தித்தார்.

சங்கீதத்துறையின் பாட்டுத்துறையில் நல்ல குரல்வளம் இறைவன் தர வேண்டும் அத்துடன் அந்த குரல் ஒலி பலரையும் ஈர்க்கும் நிலையில் இருக்க வேண்டும் மேலும் அந்த இசை ராகம் போன்றவற்றில் தன்னை கரைத்துக் கொள்ளும் பாவமும் இருக்க வேண்டும்.

எமக்கு பல குருமார்கள் உண்டு அதில் ஒரு முறை எனக்கும் எனது ஒரு குருவுக்கும் இடையில் ஒரு உடையாடல் நடந்தது

நான் கேட்டது : - என்னுடைய பலமாக எதை நீங்கள் கருதுகிறீர்கள்
அவர் சொன்னது  : - இந்த உலகத்தில் பலவற்றை நீ கற்றுக்கொண்டும் பயிற்சியின் மூலம் தேர்ச்சி அடைந்து விடலாம் ஆனால் ஜோதிடம், கவிதை, இசை போன்ற கலைஞானமான விஷயங்கள் பிரம்மன் படைத்து தரும்போதே அமைக்கபட்டிருக்க வேண்டும் அப்படி உள்ள கலை விஷயங்களில் சில உனக்கு இறைவனால் அமைந்தது தான் உனது பலம். என்றார்

இதை விளக்குவது என்றால் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் எத்தனையோ சீடர்கள் படித்திருக்கலாம் ஆனால் நல்ல குரல்வளம், பலரையும் ஈர்க்கும் நிலையில் உள்ள குரல் ஒலி, தன்னை இசையில் கரைக்கும் பாவம் இவைகள் இறைவனால் அமைத்து தரப்பட்டால் தான் பாடகர் யேசுதாஸ் போன்ற சில முத்துகள் அவரிடம் இருந்து வரமுடியும்.

தியாகராஜ சுவாமிகள் இராமனின் பக்தி தரிசனத்ததால் அபூர்வமான இராக கீர்த்தனைகளை இயற்றியிருப்பரா அல்லது இவரது இராக கீர்த்தனைகளுக்கு மயங்கியதால் இராமர் தரிசனம் தந்தாரா என்று கேட்க தோன்றும் அளவுக்கு தனித்தன்மை பெற்றவர். அது போலவே தமிழிசையில் முத்துத் தாண்டவர் தில்லை நடராசனை தனது கண்களால் கண்டதால் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனைந்து கடைசியில் நடராஜப் பெருமானிடமே கலந்து விட்டதாக வரலாறு சொல்லுகிறது அப்படியானால் அவரது சங்கீதம் அவருடையதா அல்லது தில்லை நடராசனுடையதா என்று கேட்க வைக்கும் அது தான் சொன்னேன் கலைஞானம் என்பது இறைவனால் அமைத்து தருவது என்று. இவர்கள் எல்லாம் அவர்கள் காலத்துக்கு பின்னாளில் அத்துறையின் பெரும் மேதைகளாக அடையாளம் ஆனார்கள்.

இப்போது எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ஜாதக சிறப்புகளை பார்ப்போம் குரல் வளத்தை காட்டும் 2 ஆம் ஸ்தானம் அந்த அதிபதி லக்னத்திலேயே அமர்ந்துள்ளது சங்கீத வளத்தை காட்டும் 3 ஆம் ஸ்தானம் அந்த அதிபதி குரு பகவான் லக்னத்திற்கு ஏழில் அமர்ந்து லக்னத்தை பார்வை செய்வதுடன் குரல் வளத்தை காட்டும் 2 ஆம் ஸ்தானாதிபதியையும் பார்வை செய்வது ஆகியன சிறப்பு ஆகும். மேலும் இவரின் இராசி சக்கரத்தில் ஒரு குறிபிட்ட இராசி பாகைக்கு எதிர் எதிர் ஆகவே ஒரே அமைப்பாக மூன்று முக்கிய யோகங்கள் சேர்ந்து அமைந்துள்ளன அது குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகம், குருசந்திர யோகம்

சந்திரமங்கள யோகம் - சந்திரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று அதாவது ஒரு கிரகத்தை ஒரு கிரகம் பார்த்துக் கொண்டால் சந்திர மங்கள யோகம் உண்டாகும்.

குருமங்கள யோகம் - குருவும் செவ்வாயும் ஒன்றை ஒன்று அதாவது ஒரு கிரகத்தை ஒரு கிரகம் பார்த்துக் கொண்டால் சந்திர மங்கள யோகம் உண்டாகும்.

குருசந்திர யோகம் - குருவும் சந்திரனும் இணைந்து ஒரே இராசியில் சேர்ந்து கொண்டால் குருசந்திர யோகம் உண்டாகும்.

இந்த மூன்று முக்கிய யோகங்களும் சங்கீத பாட்டுத்துறை வளத்தை காட்டும் 2, 3 ஆம் ஸ்தானங்களுக்கிடையே அமைந்ததுடன் அத்துடன் 10 ஆம் ஸ்தானமான தொழில் ஸ்தானத்து அதிபதியும் இணைந்து கொண்டது இதனால் சங்கீத பாட்டுத்துறையே தனது கர்ம மார்க்கமாக கொண்டு அதில் புகழும் சாதனையும் புரிந்தார். மேலும் அம்சத்திலும் குருவும் உச்ச இராசி மற்றும் செவ்வாயும் உச்ச இராசி, சந்திரனும் செவ்வாயின் அம்ச இராசி ஆகி இந்த கூட்டணிக்கு மேலும் வலுசேர்த்து உள்ளது.

2, 7 ஆம் வீட்டிற்கு அதிபதி லக்னத்தில் இருந்து, லக்னாதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டின் அதிபதி 7ல் இருந்து லக்னத்தை பார்த்து, சந்திரன் சுக்கிரன் நவாம்சத்தில் ஒரே அம்சத்தை அடைந்து இருப்பதால் தனது வாழ்க்கை துணையால் திரைப்படத்துறைக்கும் அறிமுக படுத்தபட்டு 10ல் உள்ள கேதுவின் பலத்தால் திரைப்படத்துறையில் ஒரளவுக்கு மேல் ஈடுபட முடியாமல் போனது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) ஜாதகம் கணிப்பு - புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி..."

கருத்துரையிடுக

Powered by Blogger