ஆன்மீகம் - இறைவனும் பரிகாரமும் அதன் பலமும்...


இறைவனும் பரிகாரமும் அதன் பலமும்...



பரிகாரம் பரிகாரம் என்று இறைவனிடம் கூவி அழைக்கிறோம் அவர் பரிகாரம் தருவதற்கு முன், அவர் பரிகாரம் தருவதற்க்கான நம் தகுதிகள் சில இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், அதை அறிவதற்கு முன் பரிகாரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் உதவுதல் என்ற பொருள் படும் அப்படி இறைவனிடம் மனிதர்கள் தங்களின் பிரச்சினைகள் தீர உதவக்கேட்கிறார்கள் அப்படி உதவி கேட்பதில் தப்பில்லை ஏன்னென்றால் அப்போது தான் மனிதர்கள் தங்களின் இயலாமையையும் இறைவனின் உயர் ஆற்றலையும் கருணையையும் உணரும் வாய்ப்பு கிடைக்கிறது.

தவமிருந்தாலே வரம் கிடைக்கும் அது போல இறைவன் தனது கருணையை காட்டி உதவவும் நம்மிடம் இருக்க வேண்டிய தகுதிகள் சில இருக்கின்றன. நம் கண்ணோட்டத்தில் இருந்தே நாம் இந்த பரிகாரம் (உதவி) கேட்கிறோம் மற்றும் பார்க்கிறோம் அதை சற்று மாற்றி இறைவனின் காண்ணோட்டத்தில் இருந்து பார்ப்போம். முதலில் இறைவனை மனிதர்கள் மூன்று காரணங்களுக்காக பெரும்பான்மையாக சந்திக்கிறார் அல்லது நினைக்கிறார்கள் அவையாவன

1) வழிபாடு (வணக்கம்) - வழிபாடு செய்ய - Worshiping
2)  வேண்டுதல் (கோரிக்கை) - தேவையானவற்றை கேட்க - Praying
3) புகழுதல் (துதி) - இறைவனை புகழுவதற்க்காக - Praising

இறைவன் கருணை கடல் அல்லவா அவர் அருளவும் தகுதிகள் உள்ளனவா என்று தோன்றலாம் இந்த தகுதி என்ற சொல்லுக்கு பதிலாக ஞானிகளும் மகான்களும் ஆன்மீக நூல்களும் பயன்படுத்திய சொல் பக்குவம், இந்த பக்குவம் என்ற சொல்லுக்கும் தகுதி என்ற சொல்லுக்கும் ஆன்மிகத்தில் பயன் அளவில் ஒரே அர்த்தம் தான். அப்படி பக்குவபட்ட பக்தனை அவன் இறைவனை நாடிச்செல்லும் காரணத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

1) முதல் நிலை பக்குவபட்ட பக்தன் இறைவனை புகழுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு கோயிலுக்கு செல்வபவனாக எப்போதும் நடந்து கொள்வான் அவனது தேவைகளை இடையில் தேவைபடும் போது மட்டும் தேவையான அளவு மட்டும் வேண்டுவான். More important given by Praising

2) இரண்டாம் நிலை பக்குவபட்ட பக்தன் இயல்பாக சாதாரணமாக இறைவனை வழிபட கோயிலுக்கு செல்வபவனாக நடந்து கொள்வார். நன்றியும் மற்றும் வணக்கமும் சொல்லி வழிபட்டு போவான். தனக்கு தேவைகள் ஏற்படும் தான் ஏற்கெனவே செய்த வழிபாட்டையும் செய்த தானத்தையும் சொல்லி காண்பித்து தனது தேவைகளை வேண்டுவான். More important given by Worshiping

3) மூன்றாம் நிலை பக்குவபட்ட பக்தன் தனது பிரச்சினைகள் தீர வேண்டி மட்டும் பெரும்பான்மையாக இறைவனை வழிபட கோயிலுக்கு செல்வபவனாக நடந்து கொள்வார். தனக்கு தேவைகள் பிரச்சினைகள் ஏற்படும் போது தான் அதுவும் மற்றவர்கள் கைவிட்ட பின்பு தான் வழிபாட்டை தொடங்குவார் தனது தேவைகளை அழுது புலம்பி வேண்டுவான் மேலே சொன்னவர்களின் அழுதல் புலம்பலுக்கும் இவரின் அழுதல் புலம்பலுக்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த பக்தர் அழுது புலம்பி வேண்டும் போது நான் மற்றும் எனது என்ற வார்த்தைகள் அதிகமாக வெளிப்படும். More important given by Praying

இதில் இறைவனின் கருணை பார்வை முதல் நிலை பக்குவபட்ட பக்தன் முதலிலும் பின் இரண்டாம் நிலை பக்குவபட்ட பக்தன் இரண்டாவதாகவும் பின் இறைவனின் கருணை பார்வை மூன்றாம் நிலை பக்குவபட்ட பக்தனின் மீது வரிசைபடி விழும். என்ன சார் நீங்க என்னமோ சொல்லுகிறீர்கள் இதை எப்படி எளிமையாக நம்புவது அல்லது புரிந்து கொள்வது என்று உங்களுக்கு தோன்றலாம் இதற்கு அடியேன் ஒரு எளிமையான உலகியல் உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

முதலாம் ஒருவர் மிகவும் நாணயமானவர் அவர் உங்களிடம் உங்களால் கொடுக்க கூடிய அளவில் கடன் கேட்டு வந்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம்.

இரண்டாம் ஒருவர் நாணயம் உள்ளவரா அல்லது இல்லாதவரா என்பது சரிவர தெரியாத நபர், அவர் உங்களிடம் உங்களால் கொடுக்க கூடிய அளவில் கடன் கேட்டு வந்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம்.

மூன்றாம் ஒருவர் நாணயம் குறைந்தவராக நடந்து கொண்டிருந்த நபர், அவர் உங்களிடம் உங்களால் கொடுக்க கூடிய அளவில் கடன் கேட்டு வந்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம்.

இதில் முதலாம் ஒருவருக்கு உங்களின் பதில் எவ்வாறு இருக்கும் வேண்டிய கடனை பெற்று கொள்ளுங்கள் ஆனால் எனக்கு இந்த காலகட்டத்திற்குள் திருப்பி தந்துவிட வேண்டும் என்று சொல்லி கடன் கொடுப்பீர்கள்.

இதில் இரண்டாம் ஒருவருக்கு உங்களின் பதில் எவ்வாறு இருக்கும் தற்சமயம் என்னிடம் பணம் இல்லை நீங்கள் போய் இரண்டு மூன்று தினங்களுக்கு பின் வாருங்கள் கடன் தரமுடியமா என்று பார்ப்போம் என்று சொல்லி அனுப்பி விடுவீர்கள் பின் அந்த நபரை பற்றி விசாரித்து அதற்கு ஏற்றாற் போல கடன் தர முடிவெடுப்பீர்கள்.

இதில் மூன்றாம் ஒருவருக்கு உங்களின் பதில் எவ்வாறு இருக்கும் தற்சமயம் நான் கடன் தரும் நிலையில் இல்லை எனக்கே பல பணம் தேவை உள்ளது என்றோ அல்லது பணம் வேண்டி பலரிடம் நானே விண்ணப்பித்துள்ளேன் என்று சொல்லி அனுப்பி விடுவீர்கள்.

இதில் கடன் கொடுக்க நாணயம் என்பது தான் அளவுகோல் அதை போல இறைவனிடம் கருணையை பெற உள்ளத்தின் பக்குவமே அளவுகோல்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஆன்மீகம் - இறைவனும் பரிகாரமும் அதன் பலமும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger