ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 15...
ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம் இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.
(15)
யாரும் மூளையை மாற்றலாம், இதயத்தை மாற்றலாம்
யாரும் நுரையீரலை மாற்றலாம், உறுப்புகளை மாற்றலாம்
யாரும் இரத்தத்தை ஏற்றாலாம், மாறாத தூயஉணர்வதை
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!
Anyone can change brain and also change heart
Anyone can change lung and also change organs
Anyone can transfusion of blood, enduring consciousness
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
தேவைபடும் யாரும் தனது பழுதுபட்ட உடலின் உறுப்புகளான
இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை மாற்றி அறுவை சிகிச்சை செய்து
கொள்ளலாம். மூளை மாற்று அறுவை சிகிச்சை தற்சமயத்தில் ஆராய்ச்சியில் உள்ளது ஒரு காலத்தில் அந்த ஆராய்ச்சியும்
வெற்றி பெற்று மூளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து
கொள்ளும் வாய்ப்பும் வரலாம்.
இப்படி உடலின் உறுப்புகளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும்,
இரத்தத்தை புதிதாக மாற்றி
உடலில் ஏற்றிக்கொண்டாலும் இவற்றினால் மாற்றம் காணாது ஒருவரின் தூய அறிவுணர்வானது
என்றும் மாறாது உள்ளத்தின் உள்ளே துலங்கி கொண்டிருக்கிறது அதை சார்ந்து பார்த்து
உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.
சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும்
பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை
இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும்
ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.
Heart என்பது
பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில்
இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம்
என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர்
விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும்
தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.
0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 15..."
கருத்துரையிடுக