மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....


மிதுன லக்னம் பற்றிய அடிப்படை :-
மிதுனம்  உபய லக்னம்
மிதுனம்  காற்று லக்னம்
மிதுனம் ஆண் லக்னம்
மிதுனம்  காம லக்னம்
மிதுனம்  மேற்கு லக்னம்
மிதுனம் சூத்திர லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்.... 

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி புதன் ஆவார் அவரே  நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார், புதனே 1,4 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் கேந்திரங்களில் 1,4,7,10 அமரும் போது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு அதை பின்னே பார்ப்போம், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் தீமையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, மற்ற வீடுகளில் நல்லவிதமாக அமரும் போது நல்ல பலன்களையே தருவார், அதனால் புதனை பொருத்தளவில் சுபர், பாவர் என்பது மேலே சொல்ல பட்டதை பொருத்து நிர்ணயத்து கொள்ள வேண்டும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி சந்திரன் ஆவார் இவரை பொருத்தே குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி, பொருளாதார ஸ்தர தன்மை காண முடியும்,  மிதுன லக்ன ஜாதகருக்கு சந்திரன் நடுநிலையான மேலும் முக்கியமானவரும் ஆவார், மேலும் வளர்பிறை சந்திரனானால் சுப தன்மை அதிகமாகவும், தேய்பிறை சந்திரனானால் அசுப தன்மை அதிகமாகவும் இருக்கும் அதை பொருத்தும் நிர்ணயத்து கொள்ள வேண்டும்.

 மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். தைரியம் துணிவு முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற காரகத்துவம் பெற்றவர் சூரியன் ஆவார் அதனால் 60 % சுபதன்மையுள்ள சுபர், 40 % அசுப தன்மையுடையவர்.
  
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியும், பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், தண்டனை, மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியும் ஆனவர் சுக்கிரன்,  ஒரு திரிகோண ஸ்தானத்திற்கு ஆதிபத்தியம் பெற்றாலும் 12 க்குடைய  ஆதிபத்தியமும் பெறுவதாலும் 70 % சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழவில் 70% நன்மையான பலன்களும் 30% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே சுக்கிரன்  திசையில் முதலில் 70% நன்மையான பலன்களும் பிற்பாதியில் 30% தீமையான பலன்களையும் தரவல்லார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதியும்,  பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் செவ்வாய் ஆகும் சிறுகடன்கள், வியாதிகளுக்கும் காரகத்துவம் பெற்றவரும் வருமானம், லாபம், வாங்கும் சக்தி ஆகியவற்றையும் தீர்மானிக்கும் காரகத்துவம் பெற்றவரும், உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுன லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் எனவே மாரக ஸ்தான ஆதிபத்தியமும் பெற்றவரும் செவ்வாயே அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் ஆனதால் ஜாதகரின் வாழவில் 40% நன்மையான பலன்களும் 60% தீமையான பலன்களையும் தரவல்லார், மிக சுபமாக அமர்ந்திருந்தால் பொருளாதார நன்மைகளை தருவார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார் இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் கேந்திரங்களில் 1,4,7,10 அமரும் போது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு அதை பின்னே பார்ப்போம், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் தீமையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் மிதுன லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் மாரக ஸ்தான ஆதிபத்தியமும் பெறுகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் குருவே அது போக மிதுன லக்னத்திற்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாக அமைகிறது அதாவது பாதகங்களை ஏற்படுத்த கூடியவரும் குருவே எனவே ஜாதகரின் வாழவில் 35% நன்மையான பலன்களும் 65% தீமையான பலன்களையும் தரவல்லார், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் இன்னும் அதிக தீமையான பலன்களையும் தரவல்லார்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும், திரிகோண ஸ்தானமாம் ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 65% நன்மையான பலன்களும் 35% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே சனி திசையில் முதலில் 35% தீமையான பலன்களையும் பிற்பாதியில் 65% நன்மையான பலன்களும் தரவல்லார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


8 Response to "மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்.... "

  1. Unknown says:

    குரு பாதாகாதிபதி, அவர் கெட்டுபோனால் நல்லது அல்லவா? பாதகாதிபதி குரு, கேந்திரத்தில் இருந்தால் , 4ல், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் பாதக தன்மை போய் விடும் அல்லவா? சரியா ஐயா ?

    பாதகாதிபதி அதிகமாக கெட்டுபோய் விட கூடாது.
    உக்கிரமான மிருகத்தை கூண்டில் அடக்க வேண்டுமே தவிர கொன்றுவிடக்கூடாது பின்னாளில் உக்கிரமான மிருகம் தேவைபடலாம்.

    Unknown says:

    மிதுன லக்கினம் குரு நீச்சம் ஆனால் என்ன பலன் அய்யா

    Unknown says:

    குரு வக்கிரம் அல்லது வர்கோத்மம் ஆனால் நன்மை செய்வார் ஐயா

    mithuna lagnam 12l puthan sukkran nallatha kettatha

    Unknown says:

    மிதுன லக்னம் கன்னிராசி 10 ல் புதன் சூரியன் 11 ல் குரு பலன் என்ன அய்யா..?

    Unknown says:

    ஐயா மிதுனம் லக்னம் இரண்டில் செவ்வாய் கேது மகரத்தில் ராகு குரு பலன் ஐயா

    ஐயா,1968, நவம்பர் 5,10.16 இரவு, சேலம் மாவட்டம் பிறந்தேன்,
    மிதுன லக்னம்... குரு திசை நடைபெற்று வருகிறது.. நிம்மதி இல்லை,காப்பாற்றுங்கள்,...நான் எந்த ஸ்தலம் செல்லவேண்டும்
    மெயில்-sensika88@gmail.com. நன்றி ஐயா....

கருத்துரையிடுக

Powered by Blogger