மிதுனம் & தனுசு, மிதுனம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & தனுசு, மிதுனம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ தனுசு இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & தனுசு, மிதுனம் vs தனுசு -


இந்த இரு மிதுன தனுசு ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது இந்த எதிர் எதிர் ராசிக்காரகளுக்குமிடையே ஆச்சரியமான பந்தத்தை உருவாக்கும் களமாக அது இருக்கலாம். அதனால் இந்த இருவரும் மிகவும் இணக்கமாக அதே நேரத்தில் மிகவும் வேறுபாடுகளையும் ருங்கே கொண்ட நட்பாக காதலாக இருக்கும் இதன் காரணமாக இவர்கள் நட்பில் அடிக்கடி சாவல்களை எதிர்கொள்கிற நேரலாம். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் ஆய்வாளர்கள் என்றும் மற்றும் துறை செயல்பாடுகளின் முன்னோடிகள் என்றும் புகழ் பெற்றவர்கள், அது போல மிதுன ராசிக்காரர்கள் புத்திஜீவி அணுகுமுறைக்கும் பல்வேறுபட்ட பரிமாண அனுபவங்களுக்கும் புகழ் பெற்றவர்கள். இருவரும் புதிய உணர்வு மற்றும் அறிவு தேடல்களுக்கு அனுமதி அளிப்பவர்கள் அதில் மிதுன ராசிகாரர் சற்று பரபரப்பாக ஆர்வத்துடன் அணுகவார்கள் இதனுடன் தனுசு இராசியை ஒப்பிட சற்று கவனமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்து அதில் தனக்கு உபயோகமானவற்றை நோக்கி அணுகவார்கள்.

இந்த இராசிகளில் இருவருக்கும் சந்திரன் பலமாக அமைந்திருந்தால் இவர்கள் ஒருவரையொருவர் ஒரளவு நன்கு புரிந்துகொண்டுருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன் மற்றும் உற்சாகத்துடன் அறிவார்ந்த கண்ணோட்டமாக பார்த்து இருவரின் நட்பு அல்லது காதலில் எடுக்கும் காரியங்களை முறையாக செய்து முன்னேடுப்பார்கள் அதனால் மிதுன மற்றும் தனுசு மிகவும் நல்ல நண்பர்களாக காதலர்களாக இருக்க வாய்ப்பு உண்டாகும். பலவித சிந்தனைகளை கொண்ட மிதுன ராசிக்காரரிடம் அவர்களின் சிந்தனைகளை அடக்கும் விதமாக தனுசு ராசிக்காரர் பேசாமல் இருப்பது நல்லது. வர்கள் இடையே பிரச்சினைகள் எழுந்தாலும் கூடவே மன்னிக்கும் மனப்பான்மையும் எளிதாக கொண்டிருப்பவர்கள். ஆனால் இருவரின் விவாதங்கள் விரைவாக வளரக்கூடியது மேலும் கோபங்களும் விரைவாக வளரக்கூடியது அது தடுக்க கூடியா அளவில் வைத்திருந்தாலே இந்த நண்பர்கள் அல்லது காதலர்களின் முதல் வெற்றி.

மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் தனுசு ராசிக்காரர் இராசிநாதன் குரு ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே சம உறவு வரக்கூடிய கிரகங்கள் இதில் வியாழன் என்ற குரு கிரகம் தத்துவம், அறிவுறுத்தல் மற்றும் புரிதல் போன்ற திறன்களுக்கு அதிபதி அதனால் அதன் முதல் ஆட்சி பீடமான தனுசு மேலே சொன்ன விஷயங்களை கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. புதன் விரைவான அறிவு, புதிய யோசனை மற்றும் கண்டுபிடிப்பு போன்ற திறன்களுக்கு அதிபதி அதனால் அதன் முதல் ஆட்சி பீடமான மிதுன ராசிக்கும் மேலே சொன்ன விஷயங்களை கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படைகளை கொண்ட ராசிகள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் தங்களது நண்பருடன் ஆராய்ந்து அவரின் கருத்து அறிந்து மேலும் காதலர்கள் ஆனால் ஒருவருக்கு ஒருவர் தங்களது காதலர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு தங்களது திட்டங்கள் மற்றும் எண்ணங்களை செயல்படுத்த வேண்டும்.

மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் தனுசு ஒரு நெருப்புத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இந்த கூட்டணி பேச்சு மற்றும் அதிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் எப்பொழுதும் மிகவும் சூடான மற்றும் உணர்ச்சிபூர்வமான நட்பாக அல்லது காதலாக இருக்க வாய்ப்பு அதிகம். இரு எதிர் துருவமுனை இராசிகள் என்பதால் சச்சரவுகள் மற்றும் பண்பில்லாத உணர்வுகள் ஏதேனும் ஏற்பட்டு விட்டால் மோசமான விளைவுகளையும் சந்திக்கும். யார் பொறுப்பில் இருப்பது என்றும் யார் முன்னோடியாக செயல்படுவது என்பதில் பிரச்சினைகள் எப்பொழுதும் வர வாய்ப்பு உண்டாகலாம்.  கருத்து வேறுபாடுகள் நீண்ட காலம் நீடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வது சற்று சவாலாக இருக்கலாம். இரக்கமான மற்றும் மரியாதையான நடத்தை மட்டும் இருவரை நன்கு பிணைத்து வைக்க முடியும்.

மிதுன ராசி தனுசு ராசி இருவருக்கும் உபய இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது அது இரண்டு வெவ்வேறு துறைகளில் சிறப்பான திறமைசாலிகளின் ஒரு கெட்டிகார கூட்டாக இருக்கலாம் அதாவது உபயம் என்றால் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் எந்த விதத்திலும் தங்களை மாற்றி அமைத்து நடந்துகொள்ளும் திறமை பெற்றவர்கள் என்ற அர்த்தம். அவ்வாறு அவர்கள் இருவரும் இருந்தால் தனுசு திட்டங்களை வழங்க அதை நிறைவேற்ற தேவையான யோசனைகளை மிதுன ராசி வழங்க சந்திரன் நன்றாக இருக்குமானால் சிறந்த குருவும் அவரின் சிறந்த சீடனும் சேர்ந்து எதிரிகளை சந்திக்கும் அமைப்பை போல ஏற்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாக்கும், அதுவே காதலாக இருந்தால் உதவும் தன்மையோடு இருவரும் அணுகி காதலை வளப்படுத்துவதுடன் உறவுகளும் பலப்படும்



0 Response to "மிதுனம் & தனுசு, மிதுனம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger