நடிகர் சூர்யா (Actor Surya Sivakumar) ஜாதகம் கணிப்பு - தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக...
நடிகர் சூர்யா (Actor Surya Sivakumar) ஜாதகம் கணிப்பு - தமிழ்த் திரையுலகின் முன்னணி
நடிகராக...
நடிகர் சிவக்குமாரின் மகனாக பிறந்து சாதராணமாக தனது
திரைபட வாழ்க்கையை தொடங்கியவர் எல்லாரும் போல ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து
பின் திரைபடத்துறையில் நடிகருக்கு தேவையான நடிப்பு, நடனம், கதை தேர்ந்தெடுத்தல், இயக்குநரை தேர்ந்தெடுத்தல் என எல்லா
விஷயங்களிலும் தன்னை தகுதி படுத்தி கொண்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக
இருமுகங்களே ஆட்சி செய்த தமிழ் திரைபட வரலாற்றை மாற்றி முக்கிய முன்று முகங்களாக
மாற்றி காட்டினார் (விஜய், அஜீத், சூர்யா). நடிகர் சூர்யாவின் ஜாதகத்தில் சிறப்பான யோகங்களை
பற்றி சற்று காண்போம்.
நடிகர் சூர்யா (Actor Surya Sivakumar) ஜாதகம்
பொதுத்தளத்தில் எழுதுவதால் பெரும்பாலும் அவரின் ஜாதக
சிறப்புகளை மட்டும் அதிகமாக பதிவு செய்கிறேன், திரைபடத்துறையை பொருத்தமட்டில் வாரிசு யோகம், தனித்திறமையில்லாமல் இருந்தாலும் கூட்டுத் திறமையால் ஜெயிப்பது மற்றும்
பாரம்பரிய பலத்தால் ஜெயிப்பது என்பதெல்லாம் மிகமிக கொஞ்சம் தான் நடக்கும்
திரைபடத்துறையை பொருத்தமட்டில் சரியான
வாய்ப்பு + தனித்திறமை + கூட்டு உழைப்பு
+ புதுமை + அதிர்ஷடம் இவைகள் பொருந்திவர வேண்டும்,
தந்தை ஸ்தானத்திற்கு அதிபதியான 9க்குடைய சனி பகவான் 5க்குடைய ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து 2ல் வர்கோத்தம பலத்துடன் வலுப்பெற்றது மேலும் அந்த சனி பகவான் 3ஆம் பார்வையாக லக்னாதிபதி சுக்கிரனை பார்ப்பது. மேலும் தந்தை ஸ்தானத்திற்கு நட்சத்திராதிபதியான
செவ்வாய் ஆட்சி பெற்று லக்னாதிபதி சுக்கிரனின் ஆதிபத்திய பரணி நட்சத்திரத்தில்
இருப்பதாலும் சிறந்த நடிகரே தனக்கு தந்தை வாய்த்தது.
மேலும் தந்தை ஸ்தானாதிபதியான சனி பகவான் மத
பொறுப்புகள் அல்லது சமூக ஒழுக்க கட்டுப்பாடுகளுக்கு சிறப்பு பெற்ற புனர்பூச
நட்சத்திரத்தில் சுப வலிமையாக அமர்ந்ததால் பொறுப்புகள் மற்றும்
ஒழுக்ககோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் காட்டும் தந்தையை பெற்றார் மேலும் சனி
பகவான் சற்று அஸ்தங்க தோஷம் அடைந்துள்ளதால் பாதகாதிபத்தியம் கெட்டதால் நன்மை
அடைந்தது ஆனால் அதுவே தனது தொழிலுக்கு தந்தையின் நேரடி உதவியையும் இழந்தது அதனால்
என்ன தான் பெரிய நடிகரின் பிள்ளை ஆனாலும் நேரடியாக களத்தில் போராடியே வித்தை கற்க
வேண்டிய படி ஆனது.
பிரபலங்கள் ஜாதகங்களில் அடிக்கடி இந்த சுப வர்கோத்தம
பலம் வர்கோத்தம பலம் என்று அடிக்கடி நான் குறிபிடுவதை நீங்கள் பார்க்க முடியும்
இராசி சக்கரத்தில் ஒரு இராசியில் அமர்ந்துள்ள ஒரு கிரகம் மற்ற வர்க்க சக்கரத்தில் அதே இராசியை அடையும் போது
வர்கோத்தம பலம் ஏற்படும் இதை ஜோதிட முன்னோர்கள் பலர் குறிபிட்டு உள்ளனர் அந்த
ஒவ்வொரு அதிகபடியான வர்கோத்தம பலத்திற்கு என்று ஒவ்வொரு தனிதனியாக பெயரையும்
கொடுத்துள்ளனர் இப்படிபட்ட உயர்ந்த வர்கோத்தம பலம் நடிகர் சூர்யாவின் ஜாதகத்தில்
சிறப்பாக சுப வர்கோத்தம பலமாக அமைந்துள்ளதை பார்க்க முடியும்,
அதாவது இராசி சக்கரத்திற்கு அடுத்து அனைவராலும் உபயோக
படுத்தபடுவது நவாம்ச கட்டம் இராசி சக்கரத்தில் ஒரு இராசியில் அமர்ந்துள்ள ஒரு
கிரகம் நவாம்ச கட்டத்திலும் அதே இராசியில் வலிமை அடைய அடிப்படையான வர்கோத்தம பலம்
கிடைக்கும் இவரின் இராசி சக்கரத்தில் நவகிரகங்களில் சுமார் நான்கு கிரகங்கள்
அதாவது சந்திரன், குரு, சனி, சுக்கிரன் இராசியில் அமர்ந்துள்ள அதே இராசியில் நவாம்ச கட்டத்திலும்
அமர்ந்துள்ளது. மேலும் மற்ற
வர்க்க சக்கரத்திலும் பல இடங்களில் அதே
இராசியை அடைந்துள்ளது இதில் குரு பகவான் அதிக தடவை நட்பு இராசியான மேஷத்திலேயே
அமர்ந்துள்ளார் இதெல்லாம் கூடுதல் பலம் ஆகும்.
நான் ஏற்கெனவே எழுதியதன் படி பிரபல திரைப்பட நடிகராக
திகழ்வதற்கும், திரைப்படகலைகள்
சம்பந்தப்பட்ட நடிப்புதுறையில் சிறந்து விளங்க சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் அதுபோக லக்னத்திற்கு லக்னம் 2,5,7,9 ஆம் ஸ்தானாதிபதிகளும் மிகவும் முக்கியமாகும் இதை
சற்று விளக்கமாக கூறுவதானால்
லக்னம் = முகப்பொலிவு, தோற்றம்
2 ஆம் ஸ்தானம் = கண் அழகு, வசனங்களை சொல்லும் விதம்
5 ஆம் ஸ்தானம் = நடிப்பு ஆளுமை திறன்
7 ஆம் ஸ்தானம் = திரைப்படம் ஒரு கூட்டுக்கலை அதனால் இதில்
மற்றவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு
9 ஆம் ஸ்தானம் = திரைப்பட புகழ் அதிர்ஷடம் வெற்றி
சுக்கிரன் = வசீகரம், சந்திரன் = கதையை உள்வாங்கல், கதை தேர்ந்தெடுத்தல் மற்றும் முக்கியமாக வெற்றி திரைகதைகள் அமைவது, புதன் = நடிப்பு திறமை மற்றும் சாதுர்யமான தேர்வு.
லக்னாதிபதியே சுக்கிரனாக அமைந்து அவர் தனது ஆதிபத்திய
பூரம் நட்சத்திரத்தில் இருப்பது அது பகை இராசி என்பதால் ஆரம்பத்தில் சிரமபட்டார்
இருந்தால் சுக்கிரன் வலிமையாக 7ஆம்
பார்வையாக 10ம் தொழில் ஸ்தானத்தை
பார்ப்பது உடன் 10ம் தொழில்
ஸ்தானாதிபதியான சனி யாலும் பார்க்க படுவது பலமாகும்.
2 ஆம் ஸ்தானம் மற்றும் அதன் 5 ஆம் ஸ்தானம் ஆகியவற்றின் அதிபதியாக புதனே
ஆவதால் புதன் தனது 2 ஆம்
ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று உயர்வை அடைந்துள்ளார் உடன் 9,10
க்குடைய சனி பகவானை சேர்த்து சிறப்பான ராஜயோகம்
உருவாக்கபட்டுள்ளது.
7 ஆம் ஸ்தானாபதி செவ்வாய்
தனது 12 ஆம் ஸ்தானத்திலேயே ஆட்சி
பெற்று லக்னாதிபதி சுக்கிரனின் ஆதிபத்திய பரணி நட்சத்திரத்தில் இருப்பது மேலும்
குருவுடன் சேர்ந்து குரு மங்கள யோகத்தையும் ஏற்படுத்தி உள்ளார் மேலும் 8 ஆம் பார்வையாக தனது 7 ஆம் ஸ்தானத்தையும் பார்ப்பது மேலும் கூடுதல் பலமாகும்.
9 ஆம் ஸ்தானாபதி சனி பகவான் 2 ஆம் ஸ்தானம் மற்றும் அதன் 5 ஆம் ஸ்தானத்தின் அதிபதியான ஆட்சி பெற்ற
புதனுடன் உள்ளது திரேக்காணம், பஞ்சாம்சம், சஷ்டாம்சம், திரிம்சாம்சம் ஆகியவற்றில் ஆட்சி, உச்சம் பெற்றும் உள்ளார்.
தன்னுடன் நடித்த ஜோதிகாவையே காதலித்தார் பல
போராட்டங்களுக்கு பிறகு 5 ஆம்
ஸ்தானத்தின் அதிபதியாக உள்ள புதன் தனது 2 ஆம் ஸ்தானத்திலேயே குருவின் நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று இருப்பதாலும். 7 ஆம் ஸ்தானாபதி செவ்வாய் தனது 12 ஆம் ஸ்தானத்திலேயே குருவுடன் சேர்ந்து ஆட்சி பெற்று இருப்பதும் மேலும் 12 ஆம் வீட்டில் இருப்பதால் தனது மரபில் இருந்து
மாறி புது மரபில் காதல் திருமணத்தை செய்தார்.
சுக்கிரன் பகை இராசியில் இருந்தாலும் தனது ஆதிபத்திய
நட்சத்திரத்தில் இருப்பதும். புதன் மற்றும் செவ்வாயும்
நவாம்சத்தில் சுக்கிரன் அம்சத்தை அடைந்து குருவுடன் தொடர்பு பெற்றிருப்பதால்
கடைசியாக அவரின் காதல் கதை இவரின் காதல் ஸ்தானத்திற்கு நட்சத்திராதிபதியான இராகு
களத்திர ஸ்தானமான 7ல்
அமர்ந்திருப்பதால் இராகு திசையில் கேது புத்தியில் கல்யாணம் சுமூகமாக நடந்தேறியது.
நான்காம் ஸ்தானாதிபதி சூரியன் 3ல் நின்று தைரிய வீரிய 3ஆம் ஸ்தானாதிபதி சந்திரனால் தனது 3ஆம் ஸ்தானமே பார்க்க படுவதால் விடாத முயற்சி மற்றும் போர்குணத்துடன்
போராடும் வலிமை கொடுக்கும் மேலும் தன்னை பட்டை தீட்டி கொள்ளவும் யோகத்தை
கொடுக்கும் அதனால் தான் தனது ஆரம்ப படங்களில் சதாரண அப்பாவியை போல முகத்துடன்
களமிறங்கிய சூர்யாவின் புகைபடத்தையும் தற்போது வெளிந்த சிங்கம் படத்தின்
புகைபடத்தையும் ஒப்பிட்டால் தெரிந்து விடும் எவ்வளவு 3ஆம் ஸ்தானாதிபதிக்கும் 3 ஆம்
இடத்திற்கும் அமைந்த சந்திர சூரிய பார்வையினால் பௌர்ணமி யோகத்தால் அவர் எந்தளவு
தன்னை பட்டை தீட்டிக் கொள்ளும் படி ஆக்கியது என்பதை காணமுடியும்.
பாக்யம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான 9,10 க்குடைய சனி பகவானின் சார ஆதிபத்திய
நட்சத்திரமான அனுஷத்தில் அமர்ந்த இராகுவின் திசையில் இராகுவின் புத்தியில் தான்
தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். நடிகர் சூர்யா திரையுலக பயணத்தில் முக்கிய வெற்றி படங்களை பெற்றதும்
இராகுவின் திசையில் சனியின் புத்தியில் தான். அதற்கு அடுத்த வந்த ஆட்சி பெற்று மிக உயர்வை அடைந்துள்ள 2 ஆம் ஸ்தானம் மற்றும் அதன் 5 ஆம் ஸ்தானம் ஆகியவற்றின் அதிபதியான புதனின்
புத்தியில் அடுத்த பரந்த வெற்றிகள் கிடைத்தது. சமீபத்தில் வந்த குரு திசை குரு புத்தியில் சற்று சரிவுகள் சந்தித்தாலும்
குரு புத்தி முடிந்து விட்டாதால் சனி புத்தி தொடங்கி உள்ளதால் பழைய படி வெற்றிகளை
சுவைக்க ஆரம்பிப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
அய்யா தங்களுக்கு புணியமாக போகும் சூர்யாவின் பிறந்த நேரம் கூறமுடியுமா ?