இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் பற்றி ஒரு சிறு ஆய்வு…

இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் பற்றி ஒரு சிறு ஆய்வு

இந்து என்றால் சந்திரன் என்றும் பொருள் வரும் சந்திர பிறையை தலைக்கு அணிந்ததால் தான் சிவபெருமானுக்கு இந்துசிகாமணி என்றும் ஒரு சிறப்பு பெயர் உண்டு அதாவது சந்திரனை தலைக்கு மணியாக சூடியவன் என்று பொருள் எனவே இந்து லக்னம் என்றால் சந்திர கதிர் புள்ளி என்று அர்த்தம் அதாவது ஜென்ம லக்னம் என்ற சூரிய கதிர் புள்ளியும் ஜனன இராசிக்கான இந்த சந்திர கதிர் புள்ளியும் சேர்ந்து விழும் எதிர்கதிர் வீச்சு இராசியே இந்து லக்ன இராசியாகும்.

இதற்கு கணக்குகள் உண்டு அது இப்போது வேண்டாம் இதை எளிமையாக காண கீழே உள்ள இணைப்பை (link) சொடுக்கவும் (Click) செய்யவும்

எளிதாக இந்து லக்னம் என்ற மகாலட்சுமி லக்னம் ஆன்லைனில் காண...


இதற்கு கணக்குகள் உண்டு அது இப்போது வேண்டாம் அதை எளிமையாக கீழே படமாக கொடுத்துள்ளேன்
 
இதை படத்தில் உள்ளதை எவ்வாறு காணுவதென்றால் உதாரணமாக ஒருவர் மேஷ லக்னமாகவும் மேஷ இராசியாகவும் இருக்கிறார் என்றால் இந்த ஜென்ம லக்னம் மேஷம் கட்டமும், ஜென்ம இராசி மேஷ இராசி கட்டமும் ஒன்று சேர்ந்து பார்க்க வரும் விருச்சிகம் இராசி தான் அவரது இந்து லக்னமாகும்.

இன்னும் ஒரு எடுத்துகாட்டாக

பில் கேட்ஸ் (Bill Gates) ஜாதகம்

 
இந்த இராசி கட்டத்தில் இவரின் லக்னம் மிதுன லக்னமாகவும் இராசி மீன இராசியாகவும் இருக்கிறார் என்றால் இந்த ஜென்ம லக்னம் மிதுனம் கட்டமும் ஜென்ம இராசி மீனம் இராசி கட்டமும் ஒன்று சேர்ந்து பார்க்க வரும் கன்னி இராசி தான் அவரது இந்து லக்னமாகும். இதில் இவருக்கு இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் என்று வரும் கன்னி லக்னத்தின் அந்த லக்னாதிபதி புதன் அந்த இந்து லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமைவது மேலும் சிறப்பு ஆகும்.

சரி இந்து லக்னம் எதற்க்காக பார்க்க வேண்டும் சில நூல்களில் இதை பற்றி கூறப்பட்டுள்ளதாக பெரியோர்கள் கூறுவார்கள் இதை கொண்டு ஒருவரின் செல்வ வளத்தையும், ஈட்டிய செல்வத்தின் சேர்க்கை, கோடீஸ்வர அமைப்பும் காண இந்த லக்னம் உதவும் என்றும், தன் வாழ்வில் முக்கியமான பணம் சம்பந்தமான நடவடிக்கை எடுக்கும் போது இந்த லக்னத்தில் எடுப்பது நல்லது என்றும் சொல்லப் படுகிறது.

இந்து லக்னம் எவ்வாறு வலுப்பெறும் : - 

1)  இந்து லக்னத்தில் இராசி கட்டத்தின் 2,11,9 ஆம் அதிபதிகள் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.
2) இந்து லக்னாதிபதி இந்து லக்னத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.
3)  இந்து லக்னாதிபதியும் இராசி கட்டத்தின் 1,5,9 ஆம் அதிபதிகளும் ஒருவருக்கொருவர் நட்பு பெற்று நட்பு ஸ்தானங்களில் அமர்வது.
4) இந்து லக்னாதிபதியும் இராசி கட்டத்தின் 4,7,10 ஆம் அதிபதிகளும் ஒருவருக்கொருவர் நட்பு பெற்று நட்பு ஸ்தானங்களில் அமர்வது.
5)  இந்து லக்னாதிபதி இந்து லக்னத்தை பார்வை செய்வது.

என பலவழிகளில் வலுப்பெறும் அதே நேரத்தில் இப்படி வலுப்பெற்று அமர்ந்தாலும அதற்கு உரிய திசாபுத்தி காலங்களில் தான் அது பயன் தரும் மற்றவகையில் தோஷப்படாமலும் இருக்க வேண்டும்.

சரி எனது அனுபவம் என்னவென்றால் ஒரு ஜாதகத்தில் இயல்பாகவே பணபர ஸ்தானங்களான 2,5,8,11 ஆகிய ஸ்தானங்கள் வலுவடைந்து அதுபோக நவாம்ச மற்றும் மற்ற சில அம்சங்களும் வலுப்பெற்று பின் இந்த இந்து லக்னம் வலுப்பெற்றால் தான் மேலே சொன்ன செல்வத்தின் சேர்க்கை, கோடீஸ்வர யோக அமைப்புகள் கூடி வரும் எனவே வெறும் இந்து லக்னாதிபதி வலுத்தாலே செல்வ வளம் சேர்ந்து விடாது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


1 Response to "இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் பற்றி ஒரு சிறு ஆய்வு…"

  1. இந்து லக்னத்தில் ராகு இருந்தால் அவர் சுபபலம் பெற்றால் என்ன பலன் சுபத்துவமின்றேல் என்ன பலன்?

கருத்துரையிடுக

Powered by Blogger