துலாம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

துலாம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த துலாம் இராசி தலையில் இருந்து உதயமாகும் ராசி (முகப்பிலிருந்து உயரும் ராசி அதாவது முன்புறத்திலிருந்து அந்த ராசி உதயமாகும் rising in front, rising in upper part, rising at top)
இது பகலில் வலிமையாகி கருப்பு வண்ணமும் ராஜோ குணமும் கொண்ட இராசி
இது மேற்கு திசையை சார்ந்த இராசி சமவெளி நிலத்தை குறிக்கும் இராசி
இது தராசு சின்னம் மற்றும் வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இராசி
இது அடித்தள தொழிலாளர் இராசி மற்றும் நடுத்தர உருவ உடல் இராசி
து இரண்டு கால் இராசி
இது சுக்கிரனை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 53 - சமுத்திர யோகம்… - வெளிநாட்டு யோகங்களில் ஒன்றான



ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 53 - வெளிநாட்டு யோகங்களில் ஒன்றான சமுத்திர யோகம் விதியும் பலன்களும்

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

போன பதிவில் -

சமுத்திர யோகம் -
ஒருவருக்கு ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 7 கிரகங்களும் 2 வது, 4 வது, 6 வது, 8 வது, 10 வது மற்றும் 12 வது வீடுகளில் அமைந்துள்ள போது சமுத்திர யோகம் உருவாகிறது. இவைகள் ஒன்றிற்கு ஒன்று இணை எதிர் வீடுகள் ஆகும். இதில் இந்த யோகம் சுப பலன்களை தருகின்றனவா அல்லது தீய விளைவுகளை தருகின்றனவா என்பது அமைந்துள்ள கிரகங்களின் சுப அல்லது அசுப நிலையை பொறுத்தது தான் அமையும்...



ஒரு ராசி சக்கரத்தின் 12 வீடுகளில் எந்த வீடு எதனால் காப்பாற்றப்படும் - ஜோதிட துணுக்குகள் பகுதி

ஒரு ராசி சக்கரத்தின் 12 வீடுகளில் எந்த வீடு எதனால் காப்பாற்றப்படும் - ஜோதிட துணுக்குகள் பகுதி



நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகரீதியான பார்வையின் படி அவரின் 2019 முதல் 2024 வரையான ஆட்சிமுறையும் எப்படி இருக்கும்…

நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகரீதியான பார்வையின் படி அவரின் 2019 முதல் 2024 வரையான ஆட்சிமுறையும் எப்படி இருக்கும்




சுவாதி (ஸ்வாதி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..


சுவாதி (ஸ்வாதி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...Svati, Swathi, Swati

நட்சத்திரம் - சுவாதி (ஸ்வாதி)
சுவாதி நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - ராகு
சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதை  - வாயு தேவா, சரஸ்வதி
சுவாதி நட்சத்திரத்தின் யோனி - ஆண் எருமை
சுவாதி நட்சத்திரத்தின் கணம் - தேவ கணம்
சுவாதி நட்சத்திரத்தின் பூதம் - வாயு (காற்று), நீர்
சுவாதி நட்சத்திரத்தின் இராசி இருப்பு - துலாம் ராசியின் விண்மீன் மண்டலத்தில் பிரகாசமான பொன்னிற ஒளிர்வு கொண்ட பெரிய ஒரு நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
சுவாதி நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - துலாம் ராசியின் பாகை 186:40:00 முதல் பாகை 200:00:00 கலை வரை இருப்பாக உள்ளது.
சுவாதி நட்சத்திரத்தின் இராசி நாதன் - சுக்கிரன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு சுவாதி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி துலாம் ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையான ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கபட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதினைந்தாவது நட்சத்திரமாக இருக்கும் சுவாதி நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் பலதரபட்ட மனிதர்களோடும் நல்ல தொடர்பை வைத்திருக்க கூடியவர், விரும்பி உணவை உண்பதில் பிரியங்கள் உள்ளவர், சுதந்திரமானவர், வித்தை உடையவர், இடுப்பு அல்லது தொடை பகுதிகளில் மறுக்கள் உள்ளவர் என்று ஜாதக... மீதி காணொளியில்


கேது கிரகத்தின் ஆட்சி, உச்ச ராசிகள் எவை என்பது பற்றிய ஒரு நூலில் வரும் பாடலின் விளக்கம்…

கேது கிரகத்தின் ஆட்சி, உச்ச ராசிகள் எவை என்பது பற்றிய ஒரு நூலில் வரும் பாடலின் விளக்கம்…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ராகு கிரகத்தின் ஆட்சி, உச்ச ராசிகள் எவை என்பது பற்றிய ஒரு நூலில் வரும் பாடலின் விளக்கம்…

ராகு கிரகத்தின் ஆட்சி, உச்ச ராசிகள் எவை என்பது பற்றிய ஒரு நூலில் வரும் பாடலின் விளக்கம்…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்காது, யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்கும் - ஜோதிட துணுக்குகள் பகுதி


ஜோதிட துணுக்குகள் பகுதி - யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்காது, யாருடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதையிருக்கும்… 

அவ்வையாரின் நல்வழி

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

ஒருவன் கல்லாதவனே அதாவது படிக்காதவனேயாயினும் அவனது கையிலே செல்வங்கள் பொருட்கள் மாத்திரம் இருக்குமானால் அவனை எல்லோரும் சென்று எதிர்கொண்டு மதிப்பு மரியாதை செய்வார்கள், அதே சமயம் செல்வங்கள் இல்லாதவனை இல்லாளும் வேண்டாள் அதாவது கட்டிய மனைவியே ஆயினும் அவனை விரும்ப மாட்டாள்; அது போலேவே அவனை பெற்று எடுத்த அன்னையும் விரும்ப மாட்டாள்; அவனது பேச்சுக்கும் மதிப்பு மரியாதையிருக்காது. அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால்

Even if a person does not educate, but he possessed wealth everyone will go toward honor and respect to him, while one does not have wealth that person's wife and mother do not like him, and also his speech will not be value and respect. 

இதில் இருந்து என்ன தெரிகிறது ஒருவனுக்கு செல்வங்கள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அவனை தேடி வந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரும் மதிப்பு மரியாதை செய்வார்கள் அவனுடைய பேச்சுக்கும் உடனே செவி சாய்த்து கேட்பார்கள் அவன் சொன்னபடி நடக்க முயற்சிப்பார்கள் இல்லையா சரி சார் நீங்கள் சொல்வது நன்றாகவே தெரிகிறது அதை ஜோதிடத்தோடு அமைப்போடு ஒப்பிட்டு சொல்லுங்க சார் என்கிறீர்களா சரி  ஒருவனுக்கு செல்வங்கள் இருக்க வேண்டும் அதாவது தன ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும், அப்போது தான் அவனை தேடி வந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரும் மதிப்பு மரியாதை செய்வார்கள் அதாவது  குடும்ப ஸ்தானம் நன்றாக  இருக்கும். மேலும் அப்படி இருப்பவனுக்கு அவனுடைய பேச்சுக்கும் உடனே செவி சாய்த்து கேட்பார்கள் அவன் சொன்னபடி நடக்க முயற்சிப்பார்கள் அதாவது அவனது வாக்கு ஸ்தானம் நன்றாகவே  இருக்கும் இல்லையா சரி இந்த தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம் மூன்றிற்கும் ஆதாரமான ஸ்தானம் எது  இரண்டாம் வீடே ஆக  இரண்டாம் வீடு நன்றாக இருப்பது எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா.

சரி சார் இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டுமானால் எப்படி இருக்க  வேண்டும் மீதி காணொளியில் (விடியோவில்)…


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஹர்சா யோகம், சரள யோகம், விமலா யோகம் என்னும் 6 ஆம் வீடு, 8 ஆம் வீடு, 12 ஆம் வீடு அதிபதி கிரகங்கள்..

ஹர்சா யோகம், சரள யோகம், விமலா யோகம் என்னும் 6 ஆம் வீடு, 8 ஆம் வீடு, 12 ஆம் வீடு அதிபதி கிரகங்கள் அந்த அந்த ஆட்சி வீட்டில் இருந்தால் பலன்கள்...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger