சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் ஹோரை சக்கரம்…

சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் ஹோரை சக்கரம்

சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளிலும் ஒரே மொழி குடும்பத்தில் இருந்து வந்தவை தான் இந்த மொழிகளுக்கிடையே பல ஒற்றுமைகளை அறிஞர்கள் சொல்லுகிறார் ஆங்கிலத்தில் உள்ள Hour என்ற சொல் சமஸ்கிருததில் உள்ள horā என்ற சொல் ஆகிய இரண்டு ஒரு மணி நேரம் என்ற பொருளை உடையன இந்த horā என்ற சொல்லில் இருந்து horoscope (ஜாதகம்) என்ற ஆங்கில சொல்லும் வந்துள்ளது.மணி நிலை பிரிவை காட்டும் ஹோரா என்ற சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் வர்க்க சக்கரமாக உள்ளது இந்த ஹோரை சக்கரம் (ஹோரா சக்கரம்). எப்போது இரண்டு கோஷ்டிகள் இருந்து கொண்டிருப்பதை அரசியல் மற்றும் நடிப்பு போன்ற துறைகளில் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் அது போல நவகிரகங்களையும் 12 இராசிகளையும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கி அந்த இரண்டு கோஷ்டிகளின் பலம் பலவீனத்தை பார்க்க பயன்படுத்துவது தான் ஹோரை சக்கரம். 12 இராசிகளில் 30 பாகை கொண்ட ஒவ்வொரு இராசியையும் 15 பாகையாக இரண்டு கோஷ்டிகளாக ஆக்கி மேலும் ஆண் இராசியானால் ஆண் ஹோரை 15 பாகை முதலாகவும் பெண் இராசியானால் பெண் ஹோரை 15 பாகை முதலாகவும் கொண்டு இரண்டு கோஷ்டிகள் பிரிக்கபடும்.

அடுத்து நவகிரகங்களில் சூரியனின் தலைமையில் ஒரு கோஷ்டி சந்திரனின் தலைமையில் ஒரு கோஷ்டி என்று பிரிக்கபடும். அதாவது

சூரியனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் செவ்வாய், குரு, கேது கிரகங்கள் அணி நிற்கும்
சந்திரனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் புதன், சனி, சுக்கிரன், ராகு கிரகங்கள் அணி நிற்கும்

இதில் புதனை நடுநிலையானவர் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. ஆக இவ்வாறு நம்மால் நவகிரகங்களிலும் 12 இராசிகளிலும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கப்படுள்ளது. இதில் சூரிய ஹோரையும் சூரிய கோஷ்டிகளும் ஆண்மைக்கான குணங்களான தைரியம், போராட்ட குணம், போட்டிகளில் பங்கேற்று வெல்லக்கூடிய ஆற்றல், கோபம், அசட்டு துணிவு, தேக பலம்... போன்றவைகளாகும். சந்திர ஹோரையும் சந்திர கோஷ்டிகளும் பெண்மைக்கான குணங்களான அழகு, கற்பனை, சுவை,உள்ளுணர்வு, உணவு, குளிர்... போன்றவைகளாகும். இதை இன்னும் ஆழமாக தெரிய முறையாக ஜோதிட கல்வி பயில வேண்டி வரும், இதை D-2 Chart என்று சுருக்கமாக அழைக்கிறார்கள், தன (செல்வம்) பலத்தையும் இதில் பார்க்கலாம் என்றும் சொல்லுகிறார்கள்.


இது ஒரு பிரபலமான பெண் ஜோதிடரின் ஜாதகம், இந்த பெண் ஜோதிடருக்கு ஹோரை சக்கரம் அமைந்த விதம்

{லம்}
சந்திர ஹோரை
சந்தி
சந்திர ஹோரை
சூரிய
சந்திர ஹோரை
புதன்
சூரிய ஹோரை
சுக்ரன்
சந்திர ஹோரை
செவ்
சந்திர ஹோரை
குரு
சூரிய ஹோரை
சனி
சூரிய ஹோரை
ராகு
சூரிய ஹோரை
கேது
சூரிய ஹோரை

ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்

சூரிய ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்
சந்திர ஹோரையில் பலம் கொண்ட கிரகங்கள்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
சனி
வியாழன்
சுக்கிரன்
கேது
ராகு
புதன் நடுநிலை

இவரின் ஹோரையின் கிரக நிலை

{லம்}
சந்திர ஹோரை
பொது நிலை
சந்தி
சந்திர ஹோரை
ஆதரவு நிலை
சூரிய
சந்திர ஹோரை
எதிர் நிலை
புதன்
சூரிய ஹோரை
பொது நிலை
சுக்ரன்
சந்திர ஹோரை
ஆதரவு நிலை
செவ்
சந்திர ஹோரை
எதிர் நிலை
குரு
சூரிய ஹோரை
ஆதரவு நிலை
சனி
சூரிய ஹோரை
எதிர் நிலை
ராகு
சூரிய ஹோரை
எதிர் நிலை
கேது
சூரிய ஹோரை
ஆதரவு நிலை
மாந்
சூரிய ஹோரை
எதிர் நிலை

இதில் ஆதரவு நிலை எடுத்த கிரகங்கள் ஜாதகத்தில் சுப பலமாக இருந்தால் சூரிய ஹோரையாக இருந்தால் சூரிய ஹோரைக்கு தக்க சுப பலன்களும், சந்திர ஹோரையாக இருந்தால் சந்திர ஹோரைக்கு தக்க சுப பலன்களும் தரும். உதாரண இந்த ஜாதகத்தில் ஒரு பெண்ணாக பிறந்த இவர் ஆண்கள் கை ஓங்கி உள்ள ஜோதிடத்துறையில் வரவேற்க்க தக்க பல முயற்சிகளை செய்து ஜோதிடத்தில் புத்தகங்கள் எழுதியதுடன் விருதுகளும் வாங்கி உள்ளார். லக்னாதிபதியும் ஜோதிடத்திற்கு முக்கிமான வாக்கு ஸ்தானாதிபதியும் ஆன சனி பகவான் 11ல் அமர்ந்து மூன்றாம் பார்வையாக தனது லக்னத்தை பார்த்துள்ளார் ஜோதிடத்துறையின் சம்பந்த கிரகமான புதனின் 7 ஆம் பார்வையும் பெற்றுள்ளார் பூர்வ புண்ணியத்தை தரக்கூடிய கேதுவுடனும் சேர்ந்துள்ளார் நவாம்சத்தில் சனி ஆட்சி அம்சமும் அடைகிறார் இப்படி பலமடைந்த சனி பகவான் தனக்கு ஹோரையில் எதிர் நிலையான சூரிய ஹோரையை அடைந்ததால் பெண்கள் தயங்கும் ஆண்கள் கை ஓங்கி உள்ள ஜோதிடத்துறையில் எதிர் நிலையாக நுழைந்து சிறப்பான அங்கீகாரங்கள் பெற்றுள்ளார். இப்படி சிலருக்கு ஹோரை சக்கரத்தில் ஆதரவான நிலையில் நின்று சில கிரகங்கள் பலம் தரலாம், எதிர் நிலையில் நின்றும் சிலருக்கு பலம் தரலாம், அதே போலத்தான் சிலருக்கு ஹோரை சக்கரத்தில் ஆதரவான நிலையில் பலவீனமாக நின்று தொந்தரவுகள் தரலாம் சிலருக்கு எதிரான நிலையில் பலவீனமாக நின்று தொந்தரவுகளும் தரலாம்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "சூரிய சந்திர கோஷ்டி பலத்தை காட்டும் ஹோரை சக்கரம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger