நவகிரகங்களை பற்றிய ஒரு சுலோகத்தின் பொருள்…
நவகிரகங்களை பற்றிய ஒரு சுலோகத்தின் பொருள்…
ஜோதிட
சாஸ்திரங்களை எழுதிய வட மொழி ரிஷிகளில் முக்கியமானவர் பராசரர் அவர் கிரகங்களின்
தன்மையை பற்றி எழுதிய ஒரு சுலோகத்தை எனக்கு தெரிந்த தமிழில் ஒரு கவிதை போல ஆக்கி
இருக்கிறேன்.
கதிரவனாம் ஆக்கும் தேவன் அனைத்து உயிருக்கும் மூலன்
மதியவனாம் ஆர்க்கும் மனத்தை வாங்கி தாங்கி நிற்பவன்
மங்களவனாம் அங்கத்தின் பலத்துக்கு ஆற்றலுக்கும் நாயகன்
புதனவனாம் ஒருவர் புத்திக்கும் அதன் பேச்சுக்கும் அதிபதி
குருவானவனால் ஞானம் உண்டாகும் புத்துணர்ச்சி வரும்
சுக்கிரனாம் அவர் உயிர்களின் வித்துக்கு வளர்ச்சிக்கு அதிபதி
சனீச்வரர் துக்கத்தையும் கர்மத்தையும் அளித்து சுழல்பவன்
இருநாக புகை வடிவங்கள் மாயை மயக்கத்திற்கு காரணர்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரகங்களை பற்றிய ஒரு சுலோகத்தின் பொருள்…"
கருத்துரையிடுக