சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - சித்திரை (சித்ரா)
சித்திரை நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - செவ்வாய்
சித்திரை நட்சத்திரத்தின் அதிதேவதை  - த்வஸ்தா தேவதா (விஸ்வகர்மா)
சித்திரை நட்சத்திரத்தின் யோனி - ஆண் புலி
சித்திரை நட்சத்திரத்தின் கணம் - ராக்ஷஸ கணம்
சித்திரை நட்சத்திரத்தின் பூதம் - நிலம் (மண்)
சித்திரை நட்சத்திரத்தின் இராசி இருப்பு - கன்னி ராசியின் விண்மீன் மண்டலத்தில் தொடங்கி துலாம் ராசியின் விண்மீன் மண்டலம் வரை நீளும் அழகான பிரகாசமான வண்ண ஒளிர்வுகள் கொண்ட முத்து மாலையை போல் அமைந்துள்ள ஸ்திர நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
சித்திரை நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கன்னி ராசியின் பாகை 173:20:00 முதல் பாகை 186:40:00 கலை வரை இருப்பாக உள்ளது.
சித்திரை நட்சத்திரத்தின் இராசி நாதன் - புதன், சுக்கிரன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி சித்திரை 1,2 ஆம் பாதத்தில் பிறந்திருந்தால் கன்னி இராசியாகும், சித்திரை 3,4 ஆம் பாதத்தில் பிறந்திருந்தால் துலாம் ஜென்ம ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையான ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கபட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதிநான்காவது நட்சத்திரமாக இருக்கும் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் சரீர பலம் உடையவர்கள், விரிந்த மார்பு மற்றும் வேகமான நடை உள்ளவர், மேலும் அரசாங்கத்திற்கு வேண்டியவனாக அல்லது மேலிடத்திடம் நல்ல தொடர்பு உள்ளவராக இருப்பார் என்று ஜாதக அலங்காரம் என்று நூல் எடுத்துரைக்கிறது. யவன ஜாதகம் என்ற நூல்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சப்த கிரகங்களின் மூலத்திரிகோண ராசி மற்றும் மூலத்திரிகோணத்தில் கிரகங்கள் நின்றால் வரும் பலன்கள்..


சப்த கிரகங்களின் மூலத்திரிகோண ராசி மற்றும் மூலத்திரிகோணத்தில் கிரகங்கள் நின்றால் வரும் பலன்கள்..

Bernard Arnault (பெர்னார்ட் அர்னால்ட்) ஜாதக சிறப்புகள் - உலகத்தின் நான்காவது பணக்காரராக இருக்கிற...


பெர்னார்ட் அர்னால்ட் ஜாதக சிறப்புகள் - உலகத்தின் நான்காவது பணக்காரராக இருக்கிற, கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி  Bernard Arnault (பெர்னார்ட் அர்னால்ட்)

இந்த முறை பார்க்க இருப்பது ஒரு வித்தியாசமான பெரும் கோடீஸ்வரின் ஜாதக சிறப்புகள் இவர் தற்போதைய நிலையில் உலத்தின் நான்காவது பணக்காரராக இருக்கிறார் இவர் ஜாதகத்தின் சிறப்புகளை பார்ப்பதற்கு முன் அனைவரும் ஆவலாக கேட்க விரும்புவது இவர் என்ன என்ன வியாபாரங்கள் செய்கிறார் என்பது தான் சொல்கிறான் ஆடை, ஒப்பனை பொருட்கள், அலங்கார ஆபரணங்கள், நகைகள், வாசனை திரவியங்கள், மதுபானம், கடிகாரங்கள், ஒயின், தோல் பொருட்கள் அது போக Department stores அதாவது பல்பொருள் அங்காடிகள் என பல, சுருக்கமாக சொன்னால் உலக அளவில் ஆடம்பர பல்பொருட்கள் கூட்டுறவு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சரி இவரது பெயர் என்ன என்று பார்க்கும் பொழுது (பெர்னார்ட் அர்னால்ட்) Bernard Arnault இவர் முதன்மையாக பங்குகள் வகிக்கும் அவரது நிறுவனங்கள் the largest luxury products companies in the world என்று கூறலாம். இது போக மிகவும் வெற்றிகரமான Real Estate Entrepreneur அதாவது வீடுநில அமைப்பாளர் ஆகவும் செயல்பட்டுயிருக்கிறார்.

இனி இவரின் ஜாதகத்தின் சிறப்புகளை பார்க்கலாம் இவரது ஜாதகம் கணிக்க சாவலான ஒரு ஜாதகம் நமது பக்கத்து வீட்டுகாரர் ஜாதகம் போல இருக்கும் அதாவது வெளிப்படையாக பலம் எதுவும் தெரியாது.  5 March 1949 பிறந்த இவர் இளம் பருவத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்துள்ளார் அதாவது சனியின் ராசியில் குருவின் பூரட்டாதி சாரம் பெற்று சூரியன் உடன் இணைந்து சனியால் பார்க்கபட்ட செவ்வாயால் பொறியியல் பட்டம் முடித்தவர் பின்பு தனது தந்தை நடத்தி வந்த கட்டுமானத்தறை நிறுவனத்தில் தன்னையும் இணைத்து 8 வருடங்கள் பணியாற்றிய பிறகு நிறுவனத்தில் தலைமை பொறுப்பிற்கு வந்தார் தனது நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்காக அவர் திட்டமிட்டார் அதற்க்காக கட்டுமானத்தறையில் இருந்து ரியல் எஸ்டெட் வணிகத்துறை நோக்கி இவரின் பார்வை செயல்பாடுகள் திரும்பியது தனது தொடர் திறமையான வியாபாரத்தால் அந்த ரியல் எஸ்டெட் வணிகத்துறையில் 40 மில்லியன் பிரெஞ்சு நாணய மதிப்பில் முதலீடுகளை தனது நிறுவனத்திற்கு ஈர்த்தார் குறிப்பாக விடுமுறை கால விடுதிகள் கட்டுவதில் வெற்றிகரமாக செயல்பட்டார் இவரது ஜாதகம் கணிக்க சாவலான ஒரு ஜாதகம் என்று சொன்னேன் அல்லவா ஏனென்றால் வெளிப்படையாக ஒரு கிரகம் கூட இவரது ஜாதகத்தில் ஆட்சியும் இல்லை உச்சமும் இல்லை நட்பு ராசிக்கு கூட அதிகமான கிரகங்கள் போய் இருக்கவில்லை இது போக மோலொட்டமாக பார்க்கும் போது குரு பகவான் ராசியிலும் நீசம் மற்றும் நவாம்ச சக்கரத்திலும் நீச நிலை தெரிகிறது இப்படிபட்ட ஜாதகம் எப்படி இந்த அளவு உயரத்தை அடைந்தது என்று இனி பார்ப்போம்....


Powered by Blogger