12 வீடுகளின் காரக பெயர்கள் அந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி - 1

12 வீடுகளின் காரக பெயர்கள் அந்த வீட்டில் ஆட்சி பெறும் கிரகங்களுக்கு வழங்கும் பெயர்கள் பகுதி - 1


விருச்சிம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…


விருச்சிம் இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான சுலோக தமிழ் பொருளாக இங்கே தொடர்ந்து பதிவாக தரப்பட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த விருச்சிகம் இராசி பல கால்கள் கொண்ட இராசி
இது துளைகளை கொண்டிருக்கும் இராசி பிராமண தன்மை சார்ந்த ராசி
இது வடக்கு திசையை சார்ந்த இராசி பகல் நேரத்தில் வலுவாகும் இராசி
இது சிவப்பு பழுப்பு கலந்த நிறத்தையும் நீரை தாங்கிய நிலத்தையும் குறிக்கும் இராசி
இது மிகவும் உணர்ச்சி கூர்மையான (கூரிய புலனாற்றல், உணர்ச்சிகரமான, very sharp) இராசி
இது ஒடுங்கிய தேக அமைப்பு மற்றும் வளமான மயிரிழைகள் பிரதிபலிக்கும் இராசி
இது செவ்வாயை ஆட்சியாளராக கொண்ட இராசி



- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 54 - மந்திரவாக்கு யோகம் விதியும் பலன்களும், ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய யோகம்..

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.



மந்திரவாக்கு யோகம் -
ஒருவருக்கு ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் லக்னங்களை ராசி சக்கரத்தில் உள்ள பிரிவுகளில் ஒன்றான ஸ்திர, சர, உபய ராசிகளை பொருத்து ஸ்திர, சர, உபய லக்னங்களாக பிரித்துள்ளார்கள் ஜோதிட ரிஷி முன்னோர்கள் இதில் சர லக்னங்களுக்கு அதிக ராஜயோகங்கள் இருப்பதாக சொல்வதுண்டு அதே போல ஸ்திர லக்னங்களுக்கு அமைய கூடிய சில சிறப்பு யோகங்களும் உண்டு அதில் இந்த ராஜயோகமும் ஒன்று இந்த ராஜயோகத்தை மந்திரவாக்கு யோகம் என்று அழைப்பார்கள். இந்த மந்திரவாக்கு யோகம் ஸ்திர லக்னங்களான அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தை லக்னமாக கொண்டு பிறந்தவர்கள் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 5ஆம் ஸ்தானமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குரு மற்றும் புதன் ஆட்சி பலத்தை அடைந்தால் இந்த மந்திரவாக்கு யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
சக்தி வாய்ந்த வார்த்தைகள் அல்லது வாசகங்கள் சொல்லக் கூடியவர்கள், திட்டமிடுவது மற்றும் ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள், அரச சபைகளில் இடம் பிடிப்பார்கள், அறிவியல் அல்லது ஆன்மீக சாஸ்திரங்களில் நல்ல பயிற்சி, பொதுக் கணக்கீடுகளிலும் வல்லவர்கள், அமைச்சருக்கு உண்டான புத்திபலம் பலமிருக்கும், உபதேசகலைஞர், கலைஞானம் இருக்கலாம், தனது பேச்சினால் நாலு பேருக்கு சகாயம் பண்ணக் முயற்சிக்க கூடியவர்கள், இதில் மிகச் சிலர் வேதம் உபநிடதம் மந்திரோபதேசம் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருப்பார்கள். ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 1

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கவுரை - பாகம் 1

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary 



 1 – அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அ) 2 – அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ) 3 – அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ) 4- ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ) 5 – இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா ! (அ) 6 – ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா ! (அ) 7 – உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அ) 8 – ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அ)


எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…


எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…

ஒரா சாஸ்திரத்தில் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 1, 4, 7, 10 ஆம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய அந்த ஸ்தானங்களில் எந்த எந்த ஸ்தானங்கள் எந்த எந்த ராசிகளாக அமையும் போது அந்த ஸ்தானங்கள் வலுவாகும் என்று ஒரா சாஸ்திரத்தில் கூறப்பட்டதை பார்க்கலாம்.
கேந்திர ஸ்தானங்கள்
ராசி பிரிவுகள்
வலிமையாகும் ராசிகள்
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
நர ராசிகள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
4 ஆம் வீடு - சதுர்த்த கேந்திரம்
நீர் ராசிகள்
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி
7 ஆம் வீடு - சப்தம கேந்திரம்        
கிட ராசி
விருச்சிகம்
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
சதுஷ்பாத ராசிகள்
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி


கேந்திர ஸ்தானங்கள்
ராசி பிரிவுகள்
வலிமை குறையும் ராசிகள்
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
கிட ராசி
விருச்சிகம்
4 ஆம் வீடு - சதுர்த்த கேந்திரம்
சதுஷ்பாத ராசிகள்
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி
7 ஆம் வீடு - சப்தம கேந்திரம்        
நர ராசிகள்
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
நீர் ராசிகள்
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger