கேந்திர ஸ்தானங்களும் விவசாய காரிய நன்மையும்...
கேந்திர ஸ்தானங்களும் விவசாய காரிய நன்மையும்...
இந்தியாவில்
விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் வேளாண்மை தொழிலை சார்ந்து நிறைய பேர் வாழ்ந்து
வருகிறார்கள். காலகணிதம் என்ற
பஞ்சாங்கத்தின் பயன்கள் பெருமளவு விவசாயிகளின் நன்மை கருதி அமைக்க பட்டிருப்பதை
காண முடியும் அதாவது மழையளவு, மழை
வரும் திக்கு, எந்த மாதிரியான
பயிர்கள் போன்ற அறிவுரைகள் வரை கூறப்பட்டிருக்கும் அதே போல பஞ்சாங்கத்துடன் சார்பு
பந்தபட்டுள்ள ஜோதிடத்திலும் விவசாயிகளின் ஜாதகத்தில் வேளாண்மை சார்ந்த பார்வையுடன்
காரகங்கள் கூறப்பட்டுள்ளது. அதாவது
ஒரு விவசாயின் ஜாதக இராசி சக்கரத்தில்
அவரின் லக்னமும் லக்னாதிபதியும் அந்த உழவனை (பயிரிடுகிறவர்) சுட்டுகாட்டும்.
அவரின் 4ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவன் பயிரிடும் நிலத்தையும், கால்நடைகளையும்
சுட்டுகாட்டும்.
அவரின் 7ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவனின் வேளாண்மை (சாகுபடி) வளர்ச்சியின் பயிர் பிடிப்பை சுட்டுகாட்டும்.
அவரின் 10ஆம் வீடும் அதன் அதிபதியும் அந்த உழவனின் விளைச்சலின் வளர்ச்சியில் கிடைத்த பயிர்களை (சாகுபடி பலன்) சுட்டுகாட்டும்.
இதை கொண்டு
பல பலன்களை காண்கிறார்கள் உதாரணமாக
ஒரு
விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களுக்கிடையே சுப பரிவர்த்தனையை அந்த கிரகங்கள்
அடைந்தால் வேளாண்மை விளைச்சல் சாதகப்படும்.
ஒரு
விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகள் சுப பலத்தை அடைந்து அந்த
கிரகங்களின் திசாபுத்தி காலமும் நடைபெற்றால் வேளாண்மை விளைச்சல் சாதகப்படும்.
ஒரு
விவசாயின் இந்த கேந்திர ஸ்தானங்களின் அதிபதிகள் சுப பலத்தை அடைந்து இருந்தாலும்
அந்த கிரகங்களின் திசா காலகட்டமும் இருந்தாலும் அதில் ஒரு வலுவான பாப கிரகத்தின்
புத்தி நடைபெற்றால் அந்த காலகட்டத்தின் வேளாண்மை விளைச்சல் குறைவுபடும்.
ஒரு
விவசாயின் லக்னமும் லக்னாதிபதியும் பாப கிரகங்களுக்கிடையே சூழ்ந்தால் பயிர்கள்
திருடர்களின் திருஷ்டியால் பாதிக்கபட வாய்ப்பு உண்டாகும்.
இவ்வாறாக
பல விதிகள் சொன்னாலும் வேளாண்மை என்பது வெப்பம், காற்றுக்கும் மழைவளத்திற்கும் (நீருக்கும்) நேரடி தொடர்பு
பெற்றால் காலகணிதமான பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம் இங்கு அதிகம். காலகணிதமான இயற்கை நமக்கு எப்போது நன்மை
செய்யாவிட்டாலும் இப்போது வரை நம்மை காத்து கொண்டி தான் வருகிறது அதன் சுபாவம் அது, அதுவே நாம் அதை எதிர்த்து இயற்கை அழித்து அதை
மீறி நடந்தால் தண்டனை தருவதிலும் இயற்கை ஈவு இரக்கம் காட்டாது எமது கவிதை ஒன்றில்
இவ்வாறு எழுதி இருப்பேன் -
"மலையும் மழையும் வேளாண்மையின் வளங்கள்
மலையை வெட்டி கற்களை கடத்தினார்
மழையை தடுத்து நீரை கடத்துகின்றார்
நிலமும் மலமும் வேளாண்மையின் களங்கள்
உரத்தை நிறைத்து கழனியை கசடாக்குகிறார்
மலத்தை பிரித்து மண்ணை வீணாக்குகிறார்
நீரை செவ்வாயிலும் வாழ்விடத்தை வீண்ணிலும்
தேடும் மதி கொண்ட மானிடரே
எல்லாம் வியாபாரமானால்
எல்லாமே லாபத்திற்குமானால்
வாழ்க்கை நட்டத்தில் முடியும்" - சிவதத்துவ
சிவம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "கேந்திர ஸ்தானங்களும் விவசாய காரிய நன்மையும்..."
கருத்துரையிடுக