திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 10 - கேது திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…

திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 10 - கேது திசாபுத்தியின் காலக்கட்டங்கள்

இந்திய ஜோதிட கணித சாஸ்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஜோதிட கணித முறைகளில் இந்த திசா கணிதமுறை ஜோதிட பலன்களை நிர்ணயிப்பதில் திசாபுத்தி கணக்கிட்டு அறிவது என்பது பிரதானமானது, இந்த திசாபுத்தி கணக்கிட்டு பலன் அறியாமல் மற்ற பலன்கள் சொல்வது என்பது காலில்லாத உடலுக்கு சமம் என்று சொல்லாம், காரணம் ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின் படிதான் நடைபெறுகிறது. நவகிரகங்களும் தங்களின் பலாபலன்களை அவர் அவர்க்குரிய திசாபுத்தி காலக்கட்டங்களில் தான் வழங்குகின்றன எனவே தான் சொன்னேன் திசாபுத்தி அறியாது பலன் சொல்வது காலில்லாத உடலுக்கு சமம் என்று. இதன் படி நாம் இப்போது பார்க்க இருப்பது ஒவ்வொரு கிரகத்தின் திசா மற்றும் அதன் புத்தியின் காலக்கட்டங்களின் அளவுகள்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும் உதாரணமாக ஒருவர் அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் ஒருவர் பிறந்தால் அவருக்கு கேது திசை முதலாவதாக கொண்டு திசாபுத்தி வயது காலகட்டங்கள் தொடங்கும் அதில் தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருந்த காலத்தை கேது திசையில் கழித்து மீதி கேது திசை நடக்கும் அதனால் கேது திசை முதலாவது திசையாக தொடங்கினால் அது முழுமையாக ஏழு ஆண்டுகள் நடப்பில் இருக்காது.

கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் திசையின் ஆண்டுகள் -

நட்சத்திரம்
நட்சத்திரத்திற்கு உரிய கிரக திசைகள்
கிரக திசையின் ஆண்டுகள்
அசுவினி
கேது திசை
7 ஆண்டுகள்
மகம்
கேது திசை
7 ஆண்டுகள்
மூலம்
கேது திசை
7 ஆண்டுகள்

கேது திசையில் கேது உள்ளபட மற்ற கிரகங்களின் புத்திகள் கால அளவுகள் -

எந்த கிரகத்தின் திசை தொடங்குகிறதோ அந்த கிரகத்தின் புத்தி தான் முதலாவதாக வரும்.

கேதுவின் திசை 7 ஆண்டுகள் = 2520 நாட்கள் = 60480 மணி நேரம்

கேது
திசை
2520
7 வருடம், 0 மாதம், 0 நாட்கள்
கேது
புத்தி
147
0 வருடம், 4 மாதம், 27 நாட்கள்
சுக்கிரன்
புத்தி
420
1 வருடம், 2 மாதம், 0 நாட்கள்
சூரியன்
புத்தி
126
0 வருடம், 4 மாதம், 6 நாட்கள்
சந்திரன்
புத்தி
210
0 வருடம், 7 மாதம், 0 நாட்கள்
செவ்வாய்
புத்தி
147
0 வருடம், 4 மாதம், 27 நாட்கள்
ராகு
புத்தி
378
1 வருடம், 0 மாதம், 18 நாட்கள்
குரு
புத்தி
336
0 வருடம், 11 மாதம், 6 நாட்கள்
சனி
புத்தி
399
1 வருடம், 1 மாதம், 9 நாட்கள்
புதன்
புத்தி
357
0 வருடம், 11 மாதம், 27 நாட்கள்

ஒருவருக்கு புதனின் திசை நடப்பு திசையாக இருந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த திசையின் 17 ஆண்டுகள் முடிந்தால் அடுத்ததாக அவர் அப்போது இருக்கும் வயதில் இருந்து தொடங்கி கேது திசையின் 7 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.

உதாரணமாக கேது திசை ஒருவருக்கு அவரின் வயது 60 வருடம், 08 மாதம், 17 நாட்களில் ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவருக்கு தொடந்து நடக்கும் புத்திகளின் வயது காலகட்டங்கள் விவரம் பின்வருமாறு காலகட்டங்களில் வரும்.

கேது
திசை
2520
21857
60 , 8 , 17
கேது-திசை-கேது-புத்தி
புத்தி
147
22004
61 , 1 , 14
கேது-திசை-சுக்கிரன்-புத்தி
புத்தி
420
22424
62 , 3 , 14
கேது-திசை-சூரியன்-புத்தி
புத்தி
126
22550
62 , 7 , 20
கேது-திசை-சந்திரன்-புத்தி
புத்தி
210
22760
63 , 2 , 20
கேது-திசை-செவ்வாய்-புத்தி
புத்தி
147
22907
63 , 7 , 17
கேது-திசை-ராகு-புத்தி
புத்தி
378
23285
64 , 8 , 5
கேது-திசை-குரு-புத்தி
புத்தி
336
23621
65 , 7 , 11
கேது-திசை-சனி-புத்தி
புத்தி
399
24020
66 , 8 , 20
கேது-திசை-புதன்-புத்தி
புத்தி
357
24377
67 , 8 , 17

திசாபுத்தி கணிதத்தில் சிலர் வருடத்திற்கு 360 நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு நான் மேலே கொடுத்து வருவது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணிதம் சிலர் வருடத்திற்கு 365  நாட்கள் என்று கணக்கிடுபவர்களும் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "திசாபுத்தி கணிதமுறையின் பகுதி 10 - கேது திசாபுத்தியின் காலக்கட்டங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger