கைரேகையும் ஜோதிடமும் பகுதி 5 - குரு மேடு…


கைரேகையும் ஜோதிடமும் பகுதி 5 - குரு மேடு

மனித வாழ்வை காலந்தொட்டு கணிக்க உதவும் வேத ஜோதிடத்திற்கு பிறகு அடியேனால் மிக மதிக்கபடும் கணிதங்கள் கைரேகை ஜோதிடம் மற்றும் நாடிஜோதிடம் ஆகும். இதில் கைரேகை ஜோதிடத்தில் மற்றும் நாடிஜோதிடத்தில் எனக்கு பெரிய படிப்பும் மற்றும் அனுபவமும் இல்லையேன்றாலும் வேத ஜோதிடத்தை ஒட்டிய ஒப்பீடு ஆன சில கருத்துகளை படித்துள்ளேன்  அதில் வேத ஜோதிடத்தில் எப்படி நவகிரகங்கள் இருக்கின்றனவோ அது போல கைரேகையிலும் இராகு கேது தவிர சப்தகிரகங்களின் தொடர்பு இருக்கிறது அதை கைரேகையில் கிரக ஆதிக்க மேடுகள் என்று அழைக்கப்படுகிறது அந்த சப்தகிரக மேடுகளுடன் நமது  வேத ஜோதிட கிரக மற்றும் ஸ்தான காரகத்துவங்களையும் சேர்த்து ஒப்பிட்டு இந்த பதிவை படித்த மற்றும் அனுபவ அறிவையும் இணைத்து எழுதுகிறேன்

குரு மேடு -

கைரேகையில் குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு கீழ் உள்ள பகுதி தான் குரு மேடு என்று அழைக்கப்படுகிறது ஐந்து விரல்களில் சிறப்பு வாய்ந்த விரலாக ஆள்காட்டி விரல் உள்ளது அதாவது ஆட்களையும் சுட்டிகாட்டுவதும் மற்றும் தனது அதிகாரம் அல்லது தனது திறமைகளை சுட்டிகாட்டவும் பயன்படுவது இதற்க்கெல்லாம் மேலாக ஒருவர் தன்னை நான் என்று சுட்டிகாட்ட பயன்படும் விரலும் இது தான் இதில் நிறைய ஆன்மீக தத்துவங்கள் நிறைந்துள்ளன மற்றும் சின்முத்திரை தத்துவத்திலும் இந்த விரலுக்கு முக்கியத்துவம் உண்டு. குருவின் காரக பலமாக இருப்பது பொது அறிவு, நினைவாற்றல், வியாபாரம், நிதியியல், கலை சார்ந்த வித்தை, கணக்கு, பாண்டித்தியம், ஜோதிட ஞானம், மந்திர தந்திரம், மந்திரித்துவம், ஆன்மீகம், உயர்கல்வி, வழிபாடு, உபதேசம் ஆகியவை ஆகும். இதை ஜாதக மற்றும் கைரேகையோடு ஒப்பிட்டு அமைத்து பார்க்கும் போது ஜாதகத்திலும் மற்றும் கைரேகையிலும் இந்த குரு இருப்பு நன்றாக அமைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறப்பான முறையில் அமையும். அதாவது கைரேகையில் இந்த குரு மேடு பருத்து பரந்து நல்ல மேல் நோக்கிய சுருள் உடன் மேலும் நல்ல குறிகளுடனும் (நட்சத்திரம், சதுரம்...) அமைந்தால் நல்லது. அதே போல ஜாதகத்தில் குருவும் மற்றும் அதன் ஸ்தானங்களில் முக்கியமாக 9,12 ஆம் ஸ்தானமும் மற்றும் அதற்கு அடுத்து 3, 4, 7, 8, 11, 12 ஆம் ஸ்தானமும் குருவின் பலத்தை பிரதிபளிக்கும் ஸ்தானங்கள் ஆகும். இவ்வாறு உள்ள அமைப்புகள் ஜாதகத்தில் நல்லவிதமாக அமைய குருவின் காரக பலம் வாழ்வில் பலப்படும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கைரேகையும் ஜோதிடமும் பகுதி 5 - குரு மேடு…"

கருத்துரையிடுக

Powered by Blogger