ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சந்திரன்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - சாவித்திர தேவதா
ஹஸ்தம் நட்சத்திரத்தின் யோனி - பெண் எருமை
ஹஸ்தம் நட்சத்திரத்தின் கணம் - தேவ கணம்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் பூதம் - நீர்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - கன்னி ராசியின் விண்மீன் மண்டலத்தில் ஐந்து நட்சத்திரங்கள் (விரல்கள் போல்) கொண்டு காணப்படுகிற நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
ஹஸ்தம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கன்னி ராசியின் பாகை 160:00:00 முதல் பாகை 173:20:00 கலை வரை இருப்பாக உள்ளது.
ஹஸ்தம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு ஹஸ்தம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி கன்னி இராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையான ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கபட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதிமுன்றாவது நட்சத்திரமாக இருக்கும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் கல்வி உடையவர் அல்லது வித்தைகள் அறிந்தவர், படைப்பாற்றல் மிக்கவர், தாமச குணம் சற்று அதிகம், சாகச பிரியன், இளம் தீரன், காப்பாளன் என்றெல்லாம் நட்சத்திர சாரம் என்ற நூல் உரைக்கின்றது.  மேலும் பொதுவாக ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் உதவி செய்தல், சேவை செய்தல், ஊக்குவித்துதல் போன்ற குணங்கள்...




ராகுல் காந்தி ஜாதகம் (Rahul Gandhi Horoscope in Tamil) கணிப்பு - பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவரும், இந்திய தேசிய காங்கிரஸ்…


ராகுல் காந்தி ஜாதகம் (Rahul Gandhi Horoscope in Tamil) கணிப்பு - பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவரும், இந்திய தேசிய காங்கிரஸ்…

 இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆன மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு அதற்கு பின்பு வந்த இந்திரா, ராஜீவ் என பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் ராஜீவ் காந்திக்கு பிறந்தவரும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டள்ளவரும் ஆன ராகுல் காந்தி ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மற்றும் அவருக்கு உள்ள நல்ல வாய்ப்புகள் பற்றியும் பார்க்கலாம்.

19 Jun 1970  அன்று 2.28 pm பிறந்தார் என்பது தெரிய வருகிறது ராகுல் காந்தியின் ஜாதகம் வித்தியாசமான அதே சமயம் ஒரு எளிமையான ஜாதகம் ஆகும்  மிதுனத்தில் சூரியனும் தனுசு மூல நட்சத்திரத்தில் சந்திரனும் அமைந்த சுப பௌர்ணமி யோகத்தில் பிறந்துள்ளார் துலாம் லக்னத்திற்கு லாப ஸ்தான அதிபதியான சூரியனும் துலாம் லக்னத்திற்கு தொழிலில் கர்ம ஸ்தான அதிபதியான சந்திரனும் நேருக்கு நேர் பாரக்க கூடிய வகையில் மேலும் தலைமைக்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரியன் இருந்து  பரம்பரைக்குரிய மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து பார்த்துக் கொள்ளும் சுப பௌர்ணமி யோகத்தில் பிறந்துள்ளார் இதனால் ஆளும் தலைமுறை, செல்வாக்கு மற்றும் புகழ் போன்றவை அடிப்படையாக அவருக்கு அமைந்துள்ளது மேலும் சாவித்திரி யோகமும் அமைந்துள்ளது அதனால் கூட்டமைப்பின் இயக்கத்தை தூண்டிவிடுகிற, ஊக்குவிக்கிற மற்றும் உற்சாகபடுத்துகிற அடிப்படையான பலத்துடன் அமைந்துள்ளது...




நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக..

நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக..

வேற்றுமையும் பெரும் மக்கள் தொகையும் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து அரசியலில் போட்டியிட்டு இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வருவது என்பது மிக சாதனையான விஷயம் தான் அப்படி பிரதமர் என்ற மிக உயர்ந்த பதவியை கடந்த ஐந்தாண்டுகளாக தக்க வைத்து ஆட்சி புரிந்த நரேந்திர மோதி ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களையும் மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக இந்திய மக்களுக்காக அவர் செய்த பணிகளுக்கு தார்மீக அடிப்படையில் நன்றி அறிவிக்கும் விதமாகவும் மேலும் அவருக்கான அடுத்த வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றி சிறிய அளவில் இந்த பதிவின் வழியாக பார்ப்போம்

முதலில் நரேந்திர மோதி ஆட்சி வந்தவுடன் அவரது ஆட்சி முறை எப்படி இருக்குமென்று  ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015 அன்று  ஒரு கட்டுரை பதிவை எமது வலைதளத்தில் எழுதி இருந்தேன் அதை ஒரு முறை மறுபடியும் வாசித்து காட்டிவிட்டு மேலும் பதிவுக்கு செல்லுகிறேன் அந்த பதிவில் இவ்வாறு கூறியிருந்தேன் அதாவது இவரது ஆட்சி காலத்தில் முதல் பாதியில் எதிர்மறையான பணவீக்கங்கள், பண முடக்கங்கள் இருக்கும் பின் பாதிக்கு மேலான ஆட்சி காலங்களில் தான் பணபுழக்கம் அதிகரிக்கும், மேலும் இவரின் அயல்நாட்டு பயணங்களினால் அயல்நாட்டு உறவுகள் பலப்படும் ஆனால் வெளிநாட்டின் முதலீடுகள் எதிர்பார்த்த அளவுகளில் வராது. மேலும் ஆரம்பிக்கபடும் திட்டங்களில் ஆரம்பித்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் பின்பு அதை சரிசெய்த பின்பே திட்டங்களின் பலன்கள் ஒரளவு நல்லவிதமாக வரும், ஆடம்பரமாக ஆரம்பிக்கும் திட்டங்கள் போதிய வளர்ச்சி காணாது, நிர்வாகங்களில் சிக்கனம் இருக்கும், ஒரு சில மந்திரிகளின் துறைகள் சரியான செயல்பாடுகளின்றி இருக்கும் பிற்காலங்களில் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டி வரும். 2015, 2016 மற்றும் 2017 பாதி வருடம் வரை தொழிற் துறை வளர்ச்சி தளர்வாகவே இருக்கும், வெளி தேசங்களின் இயற்கை, பொருளாதார சூழல்களின் முடக்கம் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்திருக்கும் அது பின் 2017 பாதிக்கு மேலும் 2018, 2019 காலங்களில் எதிர்பார்த்த தொழிற் துறை வளர்ச்சிகள் ஏற்படும் குறிப்பாக பொறியியல் துறை, உலோகத்துறை, சுரங்கங்கள், மின்சாரத் துறை, நில கட்டிட துறைகள் வளரலாம். 2017 பாதிக்குள் மேல் வரும் மாநில அரசியல் தேர்தல் போட்டிகளில் அந்த அளவு சாதகமான வெற்றிகள் வராது இவ்வாறாக அந்த கட்டுரை பதிவில் கூறியிருந்தேன்

சரி கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமர் பதவியை தக்க வைத்து ஆட்சி புரிந்த நரேந்திர மோதி ஜாதகத்தின் சிறப்பு அம்சங்களை சிலவற்றை முதலில் இப்போது பார்க்கலாம் ஒருவரின் தலைவிதியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆன லக்னத்தில் இந்த பிறவியில் அனுபவிக்கும் பாக்கியங்களுக்கு ஸ்தானமான 9ஆம் ஸ்தான காரகனான சந்திரன் லக்னத்தில் நீசம் அடைந்து அந்த லக்னாதிபதி ஆட்சி அடைவதால் சந்திரனுக்கு நீச பங்க ராஜ யோகம் பெற்று சிறக்கிறது இவரது ஜாதகத்தில் மேலும்

லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதுடன் அதில்...



உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சூரியன்
உத்திரம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - ஆர்யமான்
உத்திரம் நட்சத்திரத்தின் யோனி - எருது
உத்திரம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம்
உத்திரம் நட்சத்திரத்தின் பூதம் - நெருப்பு, நிலம்
உத்திரம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - உத்திரம் 1 ஆம் பாதம் சிம்மம் ராசியின் விண்மீன் மண்டலத்திலும், உத்திரம் 2, 3, 4 ஆம் பாதம் கன்னி ராசியின் விண்மீன் மண்டலத்திலும் காணப்படுகிற பெரிய நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
உத்திரம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - சிம்ம ராசியின் பாகை 146:40:00 முதல் கன்னி ராசியின் பாகை160:00:00 கலை வரை இருப்பாக உள்ளது.
உத்திரம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - உத்திரம் 1 ஆம் பாதத்திற்கு சூரியன், உத்திரம் 2, 3, 4 ஆம் பாதத்திற்கு புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். உத்திரம் 1 ஆம் பாதமானால் ஜென்ம இராசி சிம்ம இராசியாகும். உத்திரம் 2, 3, 4 ஆம் பாதமானால் ஜென்ம இராசி கன்னி இராசியாகும். பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது....


Powered by Blogger