கைரேகையும் ஜோதிடமும் பகுதி 7 - சனி மேடு…

கைரேகையும் ஜோதிடமும் பகுதி 6 - சனி மேடு…



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

காதல் ஜாதகம் - காதலர்களிடம் வார்த்தைகளால் வரும் வளர்ச்சியும் அல்லது வம்பும் பகுதி 5…

காதல் ஜாதகம் - காதலர்களிடம் வார்த்தைகளால் வரும் வளர்ச்சியும் அல்லது வம்பும் பகுதி 5…

ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும்வதும் பின் அது வளர்வதும் கண்களாலும் மற்றும் உரையாடல்களாலும். அதில் கண்களை பொருத்தமட்டில் அதனால் காதல் பெரும்பாலும் வளரவே பயன்படுகிறது. ஆனால் காதல் பேச்சு மற்றும் உரையாடலால் வந்த மற்றும் வளர்ந்த காதல் ஆனது கெட்டிப்படுவதும் அல்லது உடைபடுவதும் பெரும்பாலும் இந்த பேச்சு மற்றும் உரையாடலால் தான். சிலருக்கு தனது காதல் துணையின் உணர்ச்சியை புரிந்துகொள்ளாத தவறான பேச்சு மற்றும் உரையாடலால் காதல் முழுமையாக முறிந்தே போகலாம், மேலும்...


https://www.youtube.com/watch?v=gdDQXP50flQ
இந்த ஜோதிட காணொளியில் (Video) வரும் பாடல் வரிகள் - 


நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும் - கண்ணதாசன்

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் காக்க
கனவாய் நீ மாறிடு - தாமரை

ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை  - கண்ணதாசன்

தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய் - தாமரை

Love the person, But give the person total freedom

Love the person, But from very beginning

Make it clear that you are not selling your freedom - OSHO

இந்த ஜோதிட காணொளியில் (Video) வரும் எனது கவிதை வரிகள் -  

தர்க்க ரீதியான சண்டைகளை
செய்து செய்து என் மனம் போர்களமாக உள்ளது

உன் நினைவுகளை மட்டுமே
ஊற்றி ஊற்றி என் நரம்பு வேர்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன

உணர்ச்சி வெள்ளங்கள் வந்து எனக்குள்
மோதி மோதி என் கட்டுப்பாட்டு எல்லைகளை உடைக்க பார்க்கின்றன

நட்சத்திரங்களையும் கோள்களையும் இழந்து
உன்னை மட்டுமே காட்டும் வானத்தை பார்க்கிறேன் - சிவதத்துவ சிவம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

இறைவனை வழிபடும் அன்பர்களின் இரண்டு அமைப்புகள்…

இறைவனை வழிபடும் அன்பர்களின் இரண்டு அமைப்புகள்

இறைவனை வழிபடும் பொருட்டு அன்பர்கள் கோயிலுக்கோ அல்லது இறைத்தன்மை மிகுந்த இடங்களுக்கோ சென்று அந்த இறைவனுக்கு தங்கள் தங்கள் முறையில் வழிபாடு செய்வார்கள் அப்படி வழிபாடு செய்வதில் நான்கு விதங்கள் இருப்பதாக உபநிஷத்துகள் மற்றும் தமிழ் பக்தி இலக்கியங்கள் சொல்லும் அவை

1) புகழ், அன்பு மற்றும் நன்றி நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises)
2) தேவை, வேண்டுதல் மற்றும் காரிய நிமித்தமாக வழிபாடு செய்வது (Prayers)
3) தொண்டு, ஊழியம்  மற்றும் திருப்பணி நிமித்தமாக வழிபாடு செய்வது (Duties)
4) மௌனம் வழிபாடு செய்வது (Silence)

இதில் முதல்தரமான உயர்வை உடையது மௌனம் வழிபாடு என்று உபநிஷத்துகள் மற்றும் தமிழ் பக்தி இலக்கியங்கள் சொல்லும் மற்றதெல்லாம் இதற்கு கீழ் தான் வரும், அதில் மௌனம் வழிபாடு என்பது எல்லாராலும் செய்ய கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கு அடுத்து தொண்டு மற்றும் திருப்பணி என்பதும் அதிக பேர்களால் செய்ய கூடியதாக இல்லாமல் இருக்கிறது காரணம் தற்காலத்தில் 8 முதல் 10 மணி வரை மேலும் சிலர் அதற்கு மேலும் ஒரு நாளில் பல மணி நேரங்களை வேலையில் செலவிடும் அளவு தற்போது வேலைச்சுமை உள்ளது அதனால் திருப்பணி என்பதும் அதிக பேர்களால் செய்ய கூடியதாக இல்லாமல் இருக்கிறது. இவற்றை கழித்த பின்பு மீதி உள்ள புகழுதல் (Praise) மற்றும் வேண்டுதல் (Prayer) என்ற இந்த இரண்டு வழிபாட்டு முறைகள் தான் எளிதாகவும் பெரும்பான்மை ஆன்மீக அன்பர்களால் வழிபாட்டு முறையாக கையாளப்படுகிறது. இந்த இரண்டுமுறையில் வழிபடும் அன்பர்களின் ஜாதகத்தில் இதற்கு உண்டான ஜோதிட இரு அமைப்புகளை மட்டும் சிறிது பார்ப்போம்

புகழுதல் (Praise) க்கான ஸ்தானமாக 9ஆம் ஸ்தானமும்
வேண்டுதல் (Prayer) க்கான ஸ்தானமாக 5ஆம் ஸ்தானமும் இருக்கிறது

முதலில் ஒருவரின் ஜாதகம் ஆன்மீக அம்சங்கள் உள்ள ஜாதகமாக அமைந்திருக்க வேண்டும் அதற்கு பல ஜோதிட அமைப்புகள் பொருந்தி வந்து அதற்கு பிறகு தான் நான் சொல்லும் இந்த அமைப்புகளை அவரின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டும் அப்படி இல்லாமல் வெறும் இந்த அமைப்புகள் மட்டும் இருந்தால் அவ்வளவாக பலனகள் பொருந்தி வராது.

1) 5 ஆம் ஸ்தானத்தில் அல்லது 9 ஆம் ஸ்தானத்தில் குரு பகவான் இருக்க அதனால் குருவுக்கு சிறப்பு சுப பார்வையாக 5 மற்றும் 9 இராசி பார்வை இருக்கின்ற காரணத்தால், 5ல் அல்லது 9ல் இருக்கும் குரு பகவான் தனது 5 மற்றும் 9 சுப பார்வையால் 5 ஆம் ஸ்தானத்தை அல்லது 9 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது அதனால் நான் மேலே சொன்ன புகழுதல் (Praise) மற்றும் வேண்டுதல் (Prayer) என்ற இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் ஒருங்கே செய்யும் ஆற்றல் அருள் உண்டாகிறது.

2) லக்னத்தில் (1ல்) குரு பகவான் இருக்க அதனால் குருவுக்கு சிறப்பு சுப பார்வையாக 5 மற்றும் 9 இராசி பார்வை இருக்கின்ற காரணத்தால் லக்னத்தில் இருக்கும் குரு பகவான் தனது 5 மற்றும் 9 சுப பார்வையால் 5 ஆம் ஸ்தானத்தை அல்லது 9 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது அதனால் நான் மேலே சொன்ன புகழுதல் (Praise) மற்றும் வேண்டுதல் (Prayer) என்ற இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் ஒரளவுக்கு சரிசமமாக செய்யும் ஆற்றல் அருள் உண்டாகிறது.

5ல் சுக்கிரன், சந்திரன், புதன் இருக்க தேவை, வேண்டுதல் மற்றும் காரிய நிமித்தமாக வழிபாடு செய்வது (Prayers) என்ற அமைப்பு சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டு. 9ல் சுக்கிரன், சந்திரன், புதன் இருக்க புகழ், அன்பு மற்றும் நன்றி நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises) என்ற அமைப்பு சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டாகிறது.

5ல் 9ல் அதிபதிகளுடன் சேர்ந்து முக்கியமாக குரு, சுக்கிரன் பின்பு சந்திரன், புதன் நல்ல சுப வலுவான தொடர்பை ஜாதகத்தில் பெற்று இருந்தால் அதனாலும் தேவை, வேண்டுதல் மற்றும் காரிய நிமித்தமாக வழிபாடு செய்வது (Prayers) என்ற அமைப்பே அல்லது புகழ், அன்பு மற்றும் நன்றி நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises) என்ற அமைப்பே சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டாகிறது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

நவகிரகங்களும் அதன் சமையலறை பொருட்களும்…


நவகிரகங்களும் அதன் சமையலறை பொருட்களும்
நவகிரகங்களின் காரகத்துவமான சமைலறை பொருட்கள் பற்றி பல நூல்களில் கூறப்பட்ட குறிப்புகளில் இருந்து சில இதில் கொடுக்கபட்டுள்ளது -

கோள்கள்
சமையலறை பொருட்கள்
சூரியன்
கோதுமை, பருப்பு, வெள்ளை மிளகு, இஞ்சி, இலாச்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, சோளம்
சந்திரன்
அரிசி வகைகள், உப்பு, பால், உளுந்து, தேங்காய், வரகு, சாமை, தினை, கீரைகள்
செவ்வாய்
மிளகாய், வெங்காயம், பூண்டு, கொள்ளு, ராகி, கேழ்வரகு
புதன்
பச்சை பயிறு, ஏலக்காய், சோம்பு, கம்பு, வாசனை கீரைகள்
வியாழன்
தேன், நெய், மஞ்சள், கடலை பருப்பு, எலுமிச்சை, குங்குமப்பூ,
சுக்கிரன்
சர்க்கரை, பழம், சாறு, கொழுப்பு பால், வாசனைலைகள்
சனி
நல்லெண்ணெய், கடுகு, காபி, காய்ந்த இலைகள் (தேநீர்), எள்
இராகு
கெட்டுப் போன அல்லது நாள்பட்டு போன பொருட்கள்
கேது
கெட்டுப் போன அல்லது நாள்பட்டு போன பொருட்கள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger