ஜாதகத்தில் எந்த கிரகம் எங்கு இருப்பவர்களிடம் யோசனை கேட்க கூடாது, கருத்து கேட்க கூடாது...

யாரிடம் யோசனை கேட்க கூடாது, யாரிடம் கருத்து கேட்க கூடாது, ஜாதகத்தில் எந்த கிரகம் எங்கு இருப்பவர்களிடம் யோசனை கேட்க கூடாது, கருத்து கேட்க கூடாது...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கேது 2, 5, 8, 11 பணபர வீடுகளில் பலமாக நல்லவிதமாக இருக்க பலன், Ketu Graha in 2,5,8,11 House in Tamil

கேது 2, 5, 8, 11 பணபர வீடுகளில் பலமாக நல்லவிதமாக இருக்க பலன், Ketu Graha in 2,5,8,11 House in Tamil...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஒரே ராசி ஒரே லக்னம் - ஜென்ம ராசியே ஜென்ம லக்னமாக ஒருவருக்கு அமைந்தால் அதனால் உண்டாகக்கூடிய பலன்கள்..

ஒரே ராசி ஒரே லக்னம் - ஜென்ம ராசியே ஜென்ம லக்னமாக ஒருவருக்கு அமைந்தால் அதனால் உண்டாகக்கூடிய பலன்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மீன ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Meena Rasi Guru Peyarchi Palan 2022 to 2023...

மீன ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Meena Rasi Guru Peyarchi Palan 2022 to 2023....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கும்ப ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Kumbha Rasi Guru Peyarchi Palan 2022 to 2023

கும்ப ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Kumbha Rasi Guru Peyarchi Palan 2022 to 2023..


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மகர ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Makara Rasi Guru Peyarchi Palan 2022 to 2023..

மகர ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Makara Rasi Guru Peyarchi Palan 2022 to 2023....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

தனுசு ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Dhanusu Rasi Guru Peyarchi Palan 2022 to 2023

தனுசு ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Dhanusu Rasi Guru Peyarchi Palan 2022 to 2023...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ரமண மகரிஷி அருளிய அக்ஷரமணமாலை - Arunachala Aksharamanamalai 52 Song Tamil Commentary

அக்ஷரமணமாலை - Arunachala Aksharamanamalai 52 Song Tamil Commentary ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை 52 ஆம் பாடல் விளக்கம் - Ramana Maharishi's Arunachala Aksharamanamalai 52 Song Tamil Commentary by Sivathathuva Sivam


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

விருச்சிக ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Vrchika Rasi Guru Peyarchi Palan 2023...

விருச்சிக ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Vrchika Rasi Guru Peyarchi Palan 2023....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

துலாம் ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Thulam Rasi Guru Peyarchi Palan 2022 to 2023...

துலாம் ராசி 2022 - 2023 ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள், Thulam Rasi Guru Peyarchi Palan 2022 to 2023...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சுபகிருது வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்…

சுபகிருது வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்

தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது அதில் 36-வது ஆண்டின் பெயர் சுபகிருது ஆகும், ஒவ்வொரு ஒரு தமிழ் வருடத்தில் ராஜா, மந்திரி, சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, ரஸாதிபதி, தான்யாதிபதி,மேகாதிபதி மற்றும் நீரஸாதிபதி ஆகிய ஒன்பது ஆதிபத்தியங்களைப் பெறும் அதை ஏழு கோள்களில் அதிபதிகளாக கொண்டு கணிதம் செய்து அந்த அந்த வருட நவ நாயகர்களாக யார் வருகிறார்கள் என்பதைக் கணித்து அதை கொண்டு அந்த வருடப்பலன்களை நம் முன்னோர்கள் நிர்ணயித்துள்ளனர்.

இந்த சுபகிருது வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள் -

 

கிரகம்

பதவி

இதனால் உண்டாகும் பலன்கள்

சனி

ராஜா

இந்த வருடத்தில் கர்மகாரன் ஆன சனி கவான் அரசன் ஆகியிருப்பதால் இந்த வருடத்தில் வலுவான தீவிரமான பெருங்காற்று அடிக்கடி எதிர்பார்க்கலாம், கார்மேக திரட்சி அதிகமாக இருக்கும் ஆனால் மலைகள் மற்றும் காடுகளில் அதிக மழை எதிர்பார்க்கலாம் மற்ற இடங்களில் மழை அளவு குறைவாக இருக்கலாம், சோழமண்டலத்தில் புயல் காற்று அதிக சேதம் உண்டாக்கலாம்.

அதிகமாக உழைக்க வேண்டும் என்பதை மக்களே விரும்பக்கூடிய வருடமாக இந்த வருடம் இருக்கும். காற்றில் கடுமையாக மாசுபாடு அதிகரிக்கும், இயந்திர தொழில்நுட்ப உற்பத்திக்கு பயன்படும் மூலப் பொருள்களின் விலைகள் ஏற்றம் காணும், தொழிற்சாலைகள் பெருகும். தகுதியில்லாதவர்கள் அதிகாரத்தில் அமர்ந்து செய்யும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும். முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் முடிவெடுப்பதில் அதிக காலதாமதம் பண்ணலாம். பாரபட்சம் இல்லாமல் தவறுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். கட்டுமானப் பணிகள் அதிகம் நடைபெறலாம்.

நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீரான முன்னேற்றமாக இருக்கும். பல நாடுகளில் தலைமைக்கு எதிராக கலகங்கள் உண்டாகலாம், ஆடம்பர பொருட்கள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் சார்ந்த சந்தைகள் பலவீனமாக காணப்படும். நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டி அதிகரிக்கும், ஏப்ரல் 28 க்குப் பிறகு யுத்தம் செய்யும் நாடுகள் இடையே யுத்தம் மிக கடுமையானதாக மாறும் மே மாதம் 16 வரை செய்யும் நாடுகள் இடையே யுத்தம் மிக கடுமையானதாக இருக்கலாம் அதற்குப் பிறகு யுத்தம் செய்த நாடுகள் கடும் பஞ்சம் சந்திக்கலாம்.

குரு

மந்திரி

இந்த வருடத்தில் தானிய விளைச்சல் நல்ல விதமாக அமையும். கால்நடைகளின் தேவை பால் உற்பத்தி போன்றவை அதிகரிக்கும். அனைத்து விதமான பயிர்களும் சமமான அளவில் அபிவிருத்தி அடையும். நாட்டின் பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு அக்கறையும் அறிவார்ந்த பார்வையும் அதிகரிக்கும். மானியமோ அல்லது சலுகைகளோ மக்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. கோயில்களில் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகரிக்கும். திருமணங்கள் அதிகரிக்கும். நாட்டில் பொறுப்பான புதிய திட்டங்கள் எதிர்பார்க்கலாம். தங்கத்தின் தேவை மற்றும் தங்கம் சார்ந்த வர்த்தகம் நாடுகளிடையே அதிகரிக்கலாம். நிதி மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு அதிகபட்ச பொறுப்புகள் ஏற்படும். நாடுகளுக்கிடையே நாணய மதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகலாம்.

புதன்

சேனாதிபதி

இந்த வருடத்தில் போர் சூழலுக்கு சமசர முயற்சிகள் முன்னெடுக்கபடும். அரசை ஆள்வோர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது அதிகமான மறைமுக புலனாய்வு கண்காணிப்புகள் இருக்கும். நிதி மற்றும் வரி சார்ந்த சீர்திருத்தங்கள் அல்லது புதிய ஒழுங்குமுறை சட்டங்கள் நிறைவேற்றப்படலாம். இந்த வருடம் முழுக்க காலையில் குளிர் அதிகமாக  காணப்படும். ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி பேச்சு அல்லது போதனை அதிகரிக்கலாம். கல்விக் கோட்பாடுகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் புதிதாக புனரமைக்கப் படலாம்.

புதன்

அர்க்காதிபதி  (தான்யங்களை மதிப்பீடு செய்யும் அதிபதி)

இந்த வருடத்தில் தானியங்களை அதிகமாக சேமித்து வைப்படும் காலமாக இருக்கும் அதனால் பதுக்கல் இல்லாமல் அரசுகள் கண்காணிக்க வேண்டும். தேவையான காலத்தில் தேவையான மழை மட்டுமே பெய்யலாம். இந்த வருடத்தில் பொதுவாக காய்கறிகள் அபிவிருத்தி நன்றாக இருக்கும் இருந்தாலும் பயிர்கள் தானியங்ள் அளவாகவே விளையும் அதேபோல அரசாங்கமும் மற்றும் குடும்பத்தார்கள் தானியங்கள் பயிர்களுக்கு மிகவும் கணக்காகவே பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டி வரும். விளைச்சலின் ஒரு சிறு பகுதியை கோயிலுக்கு தானம் தருவதால் புண்ணிய பலன்கள் மிகும். இந்த வருடத்தில் உள்விளையாட்டு, திரைப்படம், கேளிக்கை, பொழுதுபோக்கு சார்ந்த துறைகள் வளர்ச்சி அடையலாம்.

சனி

ஸஸ்யாதிபதி (காய்கறி, பயிர், தான்யங்களின் விளைச்சல் அதிபதி)

கருப்பு மற்றும் நீல நிற தானியங்கள் காய்கறிகள் பழங்கள் நன்கு விளையும். மது விற்பனை அதிகரிக்கலாம். நீண்ட காலப் பயிர்கள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் செழித்து வளரும். ஆயுதங்கள், நெடுஞ்சாலை, பொதுப்பணி, வேளாண் மற்றும் கால்நடைகள் சார்ந்த நிர்வாகிகள் அல்லது அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்படலாம் அல்லது இடம் மாற்றி நியமிக்கப்படலாம்.

ந்திரன்

இரஸாதிபதி

இந்த வருடத்தில் எண்ணெய் வித்துக்களுக்கும் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கும் தேவை அதிகரிக்கலாம். இந்த வருடத்தில் பால், எண்ணெய் போன்ற திரவ பொருட்களின் விலை மாற்றங்கள் அதனால் ஆளும் வர்க்கத்திற்கு சுமையோ அல்லது மக்களின் எதிர்ப்போ அதிகரிக்கலாம். நீர்ச்சத்து காய்கறிகள் பழங்கள் மற்றும் பழச்சாறுக்கு உபயோகப்படுத்தப்படும் பழ வகைகள் தேவை அதிகரிக்கலாம். தேங்காய்க்கும் சந்தை தேவை அதிகரிக்கலாம். குளிர்காலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கலாம்.   

சுக்கிரன்

தான்யாதிபதி

இந்த வருடத்தில் சர்க்கரை வகைகள், வெல்லம், தேன் மற்றும் திராட்சை சந்தை தேவை அதிகரிக்கலாம். பதப்படுத்தப்பட்ட பழங்கள், முந்திரி பாதாம் போன்ற விலை உயர்ந்த பருப்பு வகைகள் உற்பத்தியும் தேவையும் அதிகரிக்கலாம். நாட்டிற்கு ஆடை, நூல் தயாரித்தல் மற்றும் விற்பனையால் லாபம் அதிகரிக்கலாம். இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் வைரம் சீர்படுத்துதல் மற்றும் வைர ஆபரணத் தொழில் வளர்ச்சி மந்தமாக இருக்கலாம்.

புதன்

மேகாதிபதி

இந்த வருடத்தில் குளிர்காலம் மிகும், குளிர்காலம் மிகுதியாக இருக்கும், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும், மேகங்களின் உற்பத்தி இந்த வருடம் பெரும்பாலும் வடக்கிலிருந்து உற்பத்தியாகும் காற்றோடு மழை பெய்யும் அதேசமயம் புதன் பகவான் சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆகும்போது மழை மேகங்களை எதிர்பார்க்க முடியாது வறண்ட மேகங்களே தென்படும். குறுணி அளவு தான் இந்த ஆண்டு மழை பெய்யும் குறுணி என்றால் அளவான மழைதான் பெய்யும் என்று அர்த்தம் (ஒரு மரக்கால் மழை). புதன் பகவான் வக்ர அஸ்தங்கம் அடைந்து இருக்கும் பொழுது பெருங்காற்று பெருமழை எதிர்பார்க்கலாம்.

சனி

நீரஸாதிபதி

இந்த வருடத்தில் மழை மறைவுப் பிரதேசங்களில் வறட்சி தொடரும், கொஞ்சமேனும் பயிர்கள் வாடிய பிறகுதான் மழை பெய்ய ஆரம்பிக்கும். ஆதார அடிப்படை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலுக்காக தொழிலாளர்கள் இடமாறுதல் அதிகரிக்கும். நீர் ஆகாரங்கள், பழச்சாறுகள், எழுமிச்சை, தர்பூசணி போன்றவையின் தேவை அதிகரிக்கும். உலக அளவில் இரும்பு போன்ற அடிப்படை உலோகங்களில் தேவை அதிகரிக்கும் , இரும்பு உலோகம் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

 - ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger