12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியன் கிரகம் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் வீடுகள்..


12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியன் கிரகம் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் வீடுகள்..




- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு...

நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு...


குரு - வியாழன், ப்ரஹஸ்பதி, தேவகுரு, பரவித்யாதரன் என்றெல்லாம் அழைக்கபடும் குரு பகவான் வேதஜோதிடத்தின் படி ஞானக் களஞ்சியமாக திகழ்பவர், வேத வித்தகன், பெரிய அறிவாளி, பிரார்த்தனை அல்லது பக்தியின் காரகன், இவரின் எண்ணங்களே கடவுளர்களின் செயலாகும் என்று வேதஜோதிடம் குருவை சிறப்பிக்கும்.

இன்னும் சொல்வதானால் வியாழன் என்ற பெரிய கோளைத் தான் நாம் குரு என்று ஜோதிட படி அறிவிக்கிறோம், குரு என்பது உயரிய, பெரிய, கனமான பளுவான என்றும் அர்த்தபடுகிறது, இது அக புற அறிவுக்கு மிக முக்கியத்துவம் தரப்படுகிற கிரகம், மேலும் குரு ஏன்றால் ஆன்மீக ஆசிரியர், ஆசான், மரியாதை தரதக்கவர், பரந்த உணர்வு மற்றும் அறிவு இருக்க்கூடியவர், கு + ரு = குரு ஆனது இதில் குஎன்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ருஎன்றால் வழிகாட்டி என்று பொருள் அதாவது உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள், ஒருவருக்கு மிக நல்ல நிலையில் இருந்தால் மோட்சத்துக்கு வழிகாட்டி கூட்டிப்போகிறவரும் இவரே.

ஜோதிடத்தில் குரு முக்கியம் அது போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் குரு என்பவர் முக்கியமான தேவை ஆகும் சமஸ்கிருதம் மாதா பிதா குரு தெய்வம் என வரிசைபடுத்துகிறது, குருமார்களின் பரம்பரைக்கு போற்றி சொல்லியே அத்தனை பாடங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்பதை மரபாகவைத்திருக்கின்றனர் இன்றும் நம் பெரியோர்கள் அது போல தமிழில் குருவின் பெருமையை திருமூலர் இவ்வாறு கூறுகிறார் -

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

குருவே சிவம் என்று கூறுகிறார் அதாவது ஒருவருக்கு மாதா அன்பை போதிப்பார் தன் வீட்டளவில் தான், தந்தை அறிவை போதிப்பார் தன் சுற்றத்தாரின் அளவிற்கு தான் ஆனால் குருவோ அன்பையும் அறிவையும் சேர்த்து போதிப்பார் உலக அளவிற்கு ஆம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார் குரு, குருவின் பெருமை இவ்வளவு உயர்வாக இருந்தாலும் காலம் கலியின் காலமாக இருப்பதால் அதாவது கலியின் காலம் என்றால் எதற்கும் அளவுக்கு மீறி ஆசை படுதல் மற்றும் தர்மங்களை மீறிய ஆசைபடுதல் செயல்படுதல் இது தான் கலியின் காலம் என்பர் சான்றோர்கள் எனவே அறிவையும் படிப்பையும் போதிக்கும் குருவானாலும் சரி ஆசிரியர்கள் ஆனாலும் சரி தற்காலத்தில் நன்கு ஆராய்ந்து தான் ஒருவரை ஆசிரியராக வேலைக்கு சேர்க்க வேண்டி உள்ளது அது போல நன்கு ஆராய்ந்து தான் ஒரு பள்ளியிலேயே பிள்ளைகளை சேர்க்க வேண்டியும் உள்ளது.

அது போலவே ஆன்மீக கல்வி அறிவை போதிக்கும் ஞான குருவை அணுக நினைத்தாலும் நன்கு ஆராய்ந்து தான் அணுக வேண்டும் இதையும் திருமூலரே கூட கூறுகிறார் -

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக என்கிறார் வாழ்க்கை பாடம் ஆனாலும் சரி அல்லது ஆன்மீக பாடம் ஆனாலும் சரி நன்கு ஆராய்ந்து நல்ல குருவை சென்று அடைய வேண்டும் என்று கூறுகிறார் மேலும் தமிழ் மரபுவழி கல்வி முறை என்பது வெறும் ஆசிரியர் போதிக்க புத்தகங்களை பார்த்து படிப்பது அதற்கு விளக்கத்தை ஆசிரியரிடம் கேட்பது மட்டும்  தமிழ் மரபுவழி கல்வி முறை அல்ல அதாவது பார்த்து படிப்பது மட்டும் பத்தாது ஆசிரியரை அல்லது குருவை பார்த்து பழகவும் வேண்டும் குருவும் செயல்முறையாக தனது வாழ்க்கையை தர்மத்தை அறிவை வெளிப்படுத்தும் வகையில் அமைத்து கொள்ள வேண்டும்.

சரி நல்ல குரு வாழ்வில் அமைய ஜாதகத்தில் அடிப்படையாக என்ன என்ன அம்சங்கள் சிறந்து இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

லக்னம், 5, 9 ஆகிய ஸ்தானங்கள் குருவிற்கும் நல்லவிதமாக அமைந்திருக்க வேண்டும் சிடருக்கும் நல்லவிதமாக அமைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் தர்மம் பலப்படும் மற்றும் அப்போது தான் பாரம்பரிய மரபும் நல்லவிதமாக தொடரும். தர்மத்தை போதிப்பவனே மெய்யான குரு என்ன சார் எதற்கெடுத்தாலும் தர்மம் தர்மம் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்க உங்களுக்கு தோன்றலாம் அதாவது கடவுளை கூட ATM மெஷின் மாதிரி பார்க்க ஆரம்பித்தவிட்ட காலம் ஆகிவிட்டது எத்தனை கேட்டாலும் கடவுள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் இந்த மாதிரியான காலத்தில் தர்ம படி வாழ், அதிகமாக ஆசைபடாதே என்று சொல்லுவது நல்ல குருமார்கள் தான்.

நல்ல குருவிற்கு அல்லது நல்ல குரு அமைவதற்கு சில அமைப்புகளை இப்போது மேலும் பார்க்க காணொளி (video) யில் -  


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


நவகிரகங்கள் வலிமையடையும் நாளின் கால பொழுதுகள்...

நவகிரகங்கள் வலிமையடையும் பொழுதுகள்...

நவகிரகங்கள் ஒரு நாளில் வரும் கால பொழுதுகளில் எந்த எந்த பொழுதுகளில் எந்த எந்த கிரகங்கள் வலிமையடையும் என்பதை விளக்கும் காணொளி (video)...



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger