ஜீவபோத சுத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 15...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(15)
யாரும் மூளையை மாற்றலாம், இதயத்தை மாற்றலாம்
யாரும் நுரையீரலை மாற்றலாம், உறுப்புகளை மாற்றலாம்
யாரும் இரத்தத்தை ஏற்றாலாம், மாறாத தூயஉணர்வதை
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Anyone can change brain and also change heart
Anyone can change lung and also change organs
Anyone can transfusion of blood, enduring consciousness
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
தேவைபடும் யாரும் தனது பழுதுபட்ட உடலின் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். மூளை மாற்று அறுவை சிகிச்சை தற்சமயத்தில் ஆராய்ச்சியில் உள்ளது ஒரு காலத்தில் அந்த ஆராய்ச்சியும் வெற்றி பெற்று மூளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வாய்ப்பும் வரலாம். இப்படி உடலின் உறுப்புகளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும், இரத்தத்தை புதிதாக மாற்றி உடலில் ஏற்றிக்கொண்டாலும் இவற்றினால் மாற்றம் காணாது ஒருவரின் தூய அறிவுணர்வானது என்றும் மாறாது உள்ளத்தின் உள்ளே துலங்கி கொண்டிருக்கிறது அதை சார்ந்து பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(14)
யார் வலியை உணர்வார், யார் நோயை உணர்வார்
யார்! நான் என்றால், ஏன் தூக்கத்தில் உணரவில்லை
யாரும் தூக்கத்திலும், மயக்கத்திலும் எங்கே சேர்கிறார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who feel the ache? And Who feel the disease?
Who! If I am, Why doesn't realize by sleep?
Anyone where to join when they sleep and swoon
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பாடலின் விளக்கம் -
யார் உடலின் வலியை உணர்பவராக இருக்கிறார். யார் உடலின் நோயை உணர்பவராக இருக்கிறார். அவ்வாறு அவைகளை உணர்வது நான் என்றால் ஏன் தூக்கத்தின் போது அந்த வலி மற்றும் நோயை அந்த நானால் உணர முடிவதில்லை. எவரும் தூக்கத்தின் போதும் மற்றும் மூர்ச்சை அடைதலின் போதும் எங்கே செல்கிறார் அல்லது சேர்கிறார். உடலியக்கமும் மற்றும் உயிரியக்கமும் உள்ள போதும் ஒருவரால் அவரின் அறிவு என்று கருதி கொண்டிருக்கும் அவரின் அறிவியக்கத்தை நிர்வகிக்க முடியவில்லை எனில் அப்படி உள்ள அறிவியக்கத்தின் மூலத்தை ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 13...

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 13...
ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(13)
யாருக்கு இன்பம், துன்பம்; யாருக்கு புகழ், இகழ்
யாருக்கு உயர்வு, தாழ்வு; யாருக்கு சினம், பொறாமை
யாருக்கு விருப்பு, வெறுப்பு; வெறும் பாவனையாம்
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who feel pleasure and pain? Who feel fame and Shame?
Who feel rise and down? Who feel anger and envy?
Who feel like and dislike? Just a conception
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். உயர்வையையும் தாழ்வையையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். விருப்பையும் வெறுப்பையும் அனுபவிப்பனாய் உள்ளவர் யார். இப்படிபட்ட உணர்ச்சிகளும் அந்த உணர்ச்சிகளை அனுபவிப்பவனும் எல்லாம் வெறும் பாவனையாம் (கற்பிதம், புனைவு, கருக்கொள்ளுதல்) இந்த இடத்தில் பாவனை என்ற சொல்லின் பூரண அனுபவ அறிவு அல்லது பூரண அனுபவ விளக்கம் பெற இதை விரிவாக சொன்னால் விளங்கலாம் ஆனால் சுருக்கமாக உரைப்பதானால் மனம் என்ற மலர் மலராமல் இருக்கும் குழந்தைகளையும் மனம் என்ற மலரின் தன்மை செம்மையானவர்களுக்கும் (ஞானி, மகான்) முன் சொன்ன உணர்ச்சிகளால் பாதிக்கபடுவதில்லை அதனால் அவர்களின் மனம் என்ற மலர் இனிமையான வாசனைகளை பூரணமாக பரப்புவதாக இருக்கிறது அதனால் தான் ஞானிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் எப்போது ஒரு வித ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டே உள்ளது. நீங்கள் புகழ்ந்தாலும் இகழ்தாலும் அதன் (குழந்தை, ஞானி) தன்மை மாறாமல் இருக்கும்.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 12...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(12)
யாருக்கு ஆண், பெண், அலி பேதங்கள்
யாருக்கு பெயர், சாதி; யாருக்கு இனம், மதம்
யாருக்கு ஊர், நாடு பேதங்கள்? மழலையாகி
பார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who take differences between male, female, transgender?
Who take differences between name, caste, race, religion?
Who take differences between city, country? having as Childhood
Look within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
ஆண் பெண் அலி போன்ற பால் பேதங்களை காண்பவர் யார், பெயர் சாதி இனம் மதம் போன்ற பேதங்களை காண்பவர் யார், ஊர் நாடு போன்ற பேதங்களை காண்பவர் யார்,  இந்த பேதங்கள் சத்திய வஸ்து வாக இருக்குமானால் ஒவ்வொருவரும் தனது மழலை பருவத்தில் இது போன்ற பேதங்களினால் மகிழ்ச்சி அடையவோ அல்லது துக்கமடையவோ செய்வதிருக்க வேண்டும் ஆனால் இது போன்ற பேதங்களின் உணர்வே அற்றவராகவே மழலை பருவத்தில் ஒவ்வொருவரும் இருந்திருப்பார் எனவே பேதங்கள் அற்ற அந்த சத்திய வஸ்துவை ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 11...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(11)
யார் உயிராய் வெளிப்பட்டார், உயிரை வெளிப்படுத்தினார்
யார் உயிராய் இருந்தார், யார் உயிரை இருக்க வைத்தார்
யார் உயிரை கவர்ந்தார், உயிராய் ஓடும் வேளையிலே
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who appeared living being? Who revealed living being?
Who live the being? Who put there a being?
Who take over to your life? When you live a being
Blend within the heart It Sivam! It Sivam! 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையில் வெளிப்பட்டுள்ளார், யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையை வெளிப்படுத்தி உள்ளார், யார் ஒவ்வொரு உயிர் என்ற நிலையில் இருக்கிறார், யார் ஒவ்வொரு உயிரையும் உயிர் என்ற நிலையில் இருக்க வைத்துள்ளார், யார் ஒவ்வொரு உயிரையும் மீண்டும் கவர்கின்றார் (seizing), உயிர் என்ற நிலையில் இருக்கும் வேளையிலே ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்று உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.

மேலே இதற்கு முன் சொல்லப்பட்ட பாடல்களுக்கு காரண கர்த்தனாக தோன்றுவது உயிர் என்று முதலில் உணரப்படும் பின் அந்த உயிரும் சுயமாக எதையும் எடுத்துக்கொள்ள உரிமையில்லாதது என்பதை காட்டவே 11வது பாடலின் நோக்கம்.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 10...

ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 10...

ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம்  இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.

(10)
யார் விந்துவாய் திரண்டார், கருவாய் நின்றார்
யார் விந்துவை திரட்டினார், கருவை நிறுத்தினார்
யார் ஓட்டினார், கூட்டினார், சினையாக்கினார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!

Who stand semen alive in the body? Who stand ovum alive in the body? 
Who made semen from the body? Who made ovum from the body?
Who drove semen and combined both? Who develop the Zygote?
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் உயிர்சக்தி பெற்ற விந்துவாகவும் விந்துக்களின் திரவமாகவும் திரண்டு இருப்பது,  பெண் சினைப்பையில் உண்டாகும் உயிர்சக்தி பெற்ற சினை முட்டையாக உருவாகி நின்றது யார், ஒரு ஆணின் உடலில் இருந்து விந்துவையும் விந்துக்களின் திரவத்தையும் திரட்டியது யார், ஒரு பெண்ணின் உடலில் இருந்து சினை முட்டைகளை உருவாக்கியது யார், இந்த இரண்டையும் அது உருவான நோக்கத்தை நோக்கி ஓட்டியது யார், அந்த நிகழ்வில் உருவாக தக்க உயிரை சினை முட்டையில் கூட்டியது யார், அதை ஒரு முழு துடிப்புடன் கூடிய உயிர்உடல்கருவாக செய்தது யார், ஒருவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து நின்றால் உணர்வார் அது சிவமே அது சிவமே என்று.

சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும் ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.

Heart என்பது பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில் இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம் என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும் தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.

Powered by Blogger