ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 42 - பராக்கிரம யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 42 - பராக்கிரம யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில
யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த
ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
பராக்கிரம யோகம்
ஜென்ம லக்னத்திற்கு மூன்றாம் ஸ்தானத்தின் அதிபதி
இராசி சக்கரம் மற்றும் நவாம்சத்தில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
ஆட்சி, உச்ச, நட்பு இராசிகளில் இருந்தால் அதனால் பாரக்கிரம யோகம் ஏற்படும், இதில் முக்கியமானது அப்படி மூன்றாம்
ஸ்தானாதிபதி வலுப்பதுடன் அந்த ஜாதகத்தில் செவ்வாயும் அதே போல இராசி சக்கரம்
மற்றும் நவாம்சத்தில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று வலுவான
நிலையில் கட்டாய இருக்க வேண்டும்.
இதன் பலன்கள் -
மூன்றாம் ஸ்தானத்திற்கு பாரக்கிரம ஸ்தானம் என்று
சிறப்பு பெயர் உண்டு பாரக்கிரம என்றால் தைரியம், வீரம், சக்தி ஆகும் இந்த
யோகத்தின் மூலமாக ஒருவர் மற்றவர்களை காக்கும் ஆற்றல், எந்த சூழ்நிலையிலும் சேவை செய்யும் திறமை, பணி நிமிர்த்தம் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்யவும் அதில் வலிமையான
உழைப்பு காட்டவும் முடியும், மனதை
அல்லது மக்களை ஒருங்கிணைக்கும் பக்குவமும் வைத்திருப்பார்,
துணிவான அல்லது துரிமான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவர்.
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 42 - பராக்கிரம யோகம்…"
கருத்துரையிடுக