மேஷம் காட்டும் தொழில்கள் - உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும்…
உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும் - மேஷம் காட்டும் தொழில்கள்…
ஜோதிடத்தில்
ஒவ்வொருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் தொழில் வலிமையை பார்க்க பலவிதமான முறைகளை
வழிகாட்டி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் அதை பின்பற்றி பல புதிய தொழிலின்
காரகத்துவங்களை கண்டு அறிய உதவியாக இருக்கிறது, ஒருவரின் ஜாதகத்தில் தொழில் வலிமையை காட்டும் ஸ்தானங்களாக கேந்திரங்கள்
லக்னம் 4,7, 10 ஆம் ஸ்தானங்கள்
உள்ளன, அதன் தொழில் யோகத்திற்கு
உதவும் ஸ்தானங்களாக 5,9 உள்ளன, தொழிலின் பயிற்சிக்கு 3,9
ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில் கடன் நிலைமை காட்டும் 6,8 ஆம் ஸ்தானங்கள் உள்ளன, தொழிலில்
வரவை காட்டும் 2, 11 ஆம் ஸ்தானங்கள்
உள்ளன, தொழிலில் செலவை காட்டும் 8, 12 ஆம் ஸ்தானங்கள் உள்ளன இப்படி ஒருவரின்
தொழில் வலிமை அறிய இவ்வளவு அமைப்புக்கள் இருந்த போதும் அதற்கு ஆதார ஸ்தானமாக
இருப்பது 10 ஆம் ஸ்தானம் என்னும்
கர்ம ஸ்தானம் ஆகும்,
தொழில்
வலிமை, எந்த வகை தொழில் போன்றவற்றை
காட்டும் ஆதார ஸ்தானம் ஒருவரின் இராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்த எண்ண வரும் 10 வது ராசி ஸ்தானம் ஆகும், இந்த 10 வது ராசி ஸ்தானம் மற்றும் இந்த 10 க்கு 10 வது ராசி ஸ்தானம், மற்றும்
ஒருவரின் நவாம்ச லக்னத்திற்க்கு 10 வது
ராசி ஸ்தானம், ஒருவரின் தசாம்ச
லக்னம் மற்றும் அந்த லக்னத்திற்க் 10 வது ராசி ஸ்தானம், சந்திர
லக்ன த்திற்க்கு 10 வது ராசி
ஸ்தானம் என பல இராசி ஸ்தானங்களை பொருத்தே ஒருவரின் தொழில் வலிமை அமையும், அப்படி இருந்தாலும் எப்படியும் இந்த 10 ஆம் ஸ்தானங்கள் நமது 12
இராசி மண்டலத்தை தவிர வேறு ஒன்றிலும் வந்துவிட முடியாது எனவே
ஒவ்வொரு இராசியும் காட்டு தொழில்களை தெரிந்து கொள்வதன் மூலம் யாரின் எந்த 10 ஆம் ஸ்தானம் வலுக்கிறதோ அதை ஒட்டி எவ்வகை
தொழில் என்று அடையாளம் காண உதவும்.
பலநூல்கள்
பல்வேறு வடிவங்களில் இராசிகள் குறிக்கும் தொழில் காரகத்துவங்களை கூறி உள்ளன, இதனால் உங்களை அதிகமாக குழப்பாமல் பலநூல்கள்
கூறியுள்ளதை தொகுத்து உங்களின் 10 ஆம்
ஸ்தானம் (கர்ம ஸ்தானம்) எந்த எந்த இராசியாக இருந்தால் எந்த எந்த தொழில்
காரகத்துவங்கள் வரும் என்று வரிசையாக மேஷம் முதல் மீனம் வரை கூறவுள்ளேன் இனி
ஒவ்வொரு இராசியாக பார்ப்போம், இது
பல நவீன தொழிலில்கள் உருவாகி வரும் காலம் அதனால் நாம் அனுபவத்தின் மூலமும் ஒவ்வொரு
இராசியின் காரகத்துவத்தை உற்று நோக்குவதன் மூலமாக புதிய நவீன தொழிலில்களின்
காரகத்துவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
மேஷம் -
அரசு வேலை, காவல் பணி, ராணுவ
பணி, தீ அணைத்தல் சேவை, சுரங்க பணி, உலோக உற்பத்தி, உலோக பொருட்கள்
தயாரிப்பு விற்பனை, இரும்பு தொழிற்சாலைகள், பொறியியல், எரி எண்ணை ஆலைகள், சர்க்கரை ஆலைகள், அரசு சார் நிறுவனங்கள், ஆடு மாடு பண்ணைகள், மருத்துவன், அறுவை சிகிச்சை, இலக்கிய பணி விளையாட்டு வீரன், செங்கல் சூலை, மட்பாண்ட வேலைகள், கைத் தொழிலில்கள், சமையல் சேவை, உணவுப் பதார்த்த விற்பனை, பராமரிப்பு சேவை, விவசாயம், தொழிற்சங்க பணிகள், இரவு காவலன், வாகன உற்பத்தி விற்பனை, வரி வசூல், பழு துக்கம் அளக்கும் கருவி சேவை, சுத்திகரிப்பு சேவை, விவசாய இயந்திரங்கள் வாடகை சேவை, ரசாயனங்கள், உரங்கள், இயந்திர கருவிகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவை. 10 ஆம் ஸ்தானத்தின்
நிலை கெட்டால் திருடத்தனம், கொள்ளையன், வேசித்தனம், உயிர் கொலை தொழில், கட்டபஞ்சாயித்து, மிரட்டி வரி வசூல்.
இப்போது
நாம் தொழில் என்ற உடன் ஆங்கிலம் தவிர்க்க முடியாது அதனால் இதன் ஆங்கில வடிவம் -
Government
work, police work, military work, fire extinguishing services, mining,
processing, metals production, manufacturing of metal products and sales, iron
factories, engineering, fuel oil mills, sugar mills, state owned enterprises,
cattle and sheep farms, physician, surgeon, literary work, door-keeper,
Security guard, watchman, night police, brick chamber, pottery work, sports,
handmade job, cooking service, maintenance services, agriculture, trade union
activities, the night watchman, auto sales, tax collections, cleaning and
refining Service, agricultural machinery rental service, chemicals,
fertilizers, machine tools and related products, transportation equipment
production and service.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "மேஷம் காட்டும் தொழில்கள் - உங்களின் தொழில் ஸ்தானம் காட்டும் தொழில்களும்…"
கருத்துரையிடுக