அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - உலக சர்வாதிகாரி, வில்லன்களின் கதாநாயகன்...
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம் கணிப்பு - உலக
சர்வாதிகாரி, வில்லன்களின் கதாநாயகன்...
அடால்ஃப் ஹிட்லர் (Adolf
Hitler) இவருக்கு அறிமுகமே தேவையில்லை எனவே
தெரிந்ததிலிருந்தே தொடங்குகிறேன் முதல் உலகப் போரில் சாதாரண ராணுவ சிப்பாயாக
இருந்தவர் பின் ஜெர்மனியில் நாசிச கொள்கை உருவாக்கி வளர்த்து ஜெர்மனியின் நாசிக்
கட்சியின் தலைவராகவும் ஆகி பின் ஜெர்மனி நாட்டின் தலைவராகவும் ஆகி இரண்டாம் உலகப்
போரை தலைமை தாங்கி நடத்தியவரானார். இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள தாக்கதாக இருந்தது தன்னம்பிக்கை, மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் மற்றும்
பேச்சாற்றல், ஆளுமை. அவரின் மிக மோசமான அம்சம் வெறிகொண்ட போர்குணம், இனவெறி, அதிகார துஷ்பிரயோகம், அழிக்கும்
எண்ணம் இந்த இரண்டு அம்சத்தையும் இப்போது பார்க்க போகிறோம்.
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜாதகம்
நான் அடால்ஃப் ஹிட்லரின் ஆரம்ப கால சுய வரலாற்று நூலான
மைன் கம்ப் (mein kampf) எனது
போராட்டம் என்ற நூலை சிறிது வாசித்துள்ளேன் முதலில் ஹிட்லரை தீயவர் என்று உலகம்
விமர்சித்து கண்டு கொள்ளும் முன் அவரது மக்களால் அவர் ஏன் தலைமை இனப்போராளியாக
தேசிய போராளியாக இந்த ஹிட்லரை கருதினார்கள் என்பதில் தொடங்குகிறது ஹிட்லரின்
விருவிருப்பான சரிதம். அதாவது
யூதர்கள் மற்றும் மாற்று இனத்தவரால் ஒடுக்கபட்ட நிலையில் அல்லது வேறு வகையில்
சொல்வதானால் இரண்டாம் தர குடிமக்களாக சொந்த நாட்டில் பொரும்பான்மை மக்களாக
வாழ்கின்ற நிலையில் ஜெர்மானிய மக்களின் நிலை இருந்தது இதை அறிந்த ஹிட்லர் தனது
ஆளுமை, பேச்சு, எழுத்து திறத்தால் பொரும்பான்மை மக்களான
ஜெர்மானிய இனக்குழு சார்ந்த மக்களை ஈர்த்தார் இதற்கு நன்கு உதாரணம் அவரின் மைன்
கம்ப் (mein kampf) என்ற
அப்புத்தகம் லட்சக் கணக்கான பிரதிகள் அப்போது விற்றது.
மிகப்பெரிய ஆளுமை திறனும் மக்களை தன் பக்கம் நிறுத்தும்
பேச்சாற்றலுக்குமான யோகங்கள் வாய்க்க பெற்றவர் ஹிட்லர் இவரின் ஆளுமை திறனுக்கும்
பேச்சாற்றலுக்கும் காரணம் 1,2,5,9,10 ஆம் ஸ்தானதிபதிகள் வலிமை பெற்று அமைந்துள்ளனர் அதாவது லக்னாதிபதி பத்தாம்
ஸ்தானதிபதியும் ஆன புதன் 8 ஆம்
ஸ்தானத்தில் ஒன்பதாம்
ஸ்தானதிபதியும்
மற்றும் 2ஆம் ஸ்தானதிபதியும் ஆன
சுக்கிரனுடன் சேர்ந்துள்ளது, மேலும்
லக்னாதிபதி புதன் நவாம்சத்திலும் அதே ராசியில் இருந்து வர்கோத்தமம் பெறுவது. பேச்சாற்றலுக்கான 2,9 ஆம் ஸ்தானதிபதி சுக்கிரன் தனது 2 ஆம் ஸ்தானத்தையே 7ஆம்
பர்வையாக பார்ப்பது மேலும் அதற்கு உதவும் 5 ஆம் ஸ்தானதிபதியான சனி தனது 5 ஆம் ஸ்தானத்தையே 7ஆம்
பர்வையாக பார்ப்பது மிகுந்த பலமாகும். மேலும் தர்மகர்மதிபதிகள் சேர்க்கையால் தர்மகர்மதிபதி யோகம்
அமைக்கபட்டுள்ளது இதெல்லாம் ஆளுமை திறன் மற்றம் வலிமையான பேச்சாற்றுக்கு உதவியது.
இப்படி வலிமையான ஒருவர் ஏன் கொடுமைகளின் பாதையில்
பயணித்தார் என்று தோன்றலாம் தன் வாழ்வில் கடுமையான கொடுமைகளையும் விரக்திகளை
அவமானங்களை அதிகமாக சந்தித்தவர்கள் ஒன்று தன்னை போல் மற்றவர்களுக்கு நிகழக்கூடாது
என்று கருதுவார்கள் அல்லது தான் பெற்ற அந்த கொடுமைகளையும் அவமானங்களை தான்
எதிரியாக கருதும் நபர்களுக்கு திருப்பி தர எண்ணுவார்கள் இதில் இரண்டாவது ரகம்
ஹிட்லர். ஆம் ஹிட்லர்
சிறுவயதிருக்கும் போது அவரையும் அவரின் தாயையும் அடிக்கடி அவரது தந்தை அடித்து
துன்புறுத்தினார் இதற்கு காரணம் கொடுமை ஸ்தானமான 8க்குடையவான செவ்வாய் ஆட்சி பெற்று வலுத்து தந்தை ஸ்தானமான சுக்கிரனும்
லக்னாதிபதியான புதனும் மிக நெருங்கி இருப்பதால் குடிப்பழக்கம் கொண்ட தந்தை
ஹிட்லரையும் அவரின் தாயையும் போதையில் திட்டுவதும் அடிப்பதுமாக இருந்தார் அதனால்
அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பு கொண்டார் இதை சுருக்கமாக சொல்வதானால் ஒரு
குறிப்பு சொல்லுகிறது ஹிட்லரின் வீட்டில் உள்ள நாயையும் ஹிட்லரையும் அவரது தந்தை
ஒரே மாதிரிதான் நடத்துவாராம் பின்னர் 14 வயதிலேயே தந்தை இறந்தும் போனார்.
மேலும் இவரின் 19 வயதிலேயே தாயும் இறந்து போனார் காரணம் 11க்குடைய மாரகாதிபதியான சந்திரன் 4க்குடைய தாய் வீட்டில் அமர்ந்தது மேலும் 4ல் அமர்ந்து கேது 4க்குடையவனான
குருவை தோஷப்படுத்தியது. பள்ளி
படிப்பு சரியாக அமையவில்லை மேலும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சி செய்தார் அனுமதி
தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை அந்த ஆண்டில் தாயார் இறந்து போனார்
அவமானங்களும் தோல்விகளுமாக இருந்தது பொய்யான சான்றிதழ் வைத்து உதவிபணத்தை
பெற்றுவந்தார். 2ஆம் ஸ்தானதிபதி
சுக்கிரனாக இருந்த 10 ஆம்
ஸ்தானபதியுடன் சேர்வதால் ஒவிய ஆர்வம் கொண்டவராக இருந்தார் சில ஒவியங்களை விற்று
வாழ்க்கை நடத்தி வந்தார் பின் அதிலும் சாதிக்க முடியவில்லை இதில் காதல் தோல்வியும்
இடையில் ஏற்பட்டது கடைசியில் நடோடியாக ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனியை வந்து
அடைந்தார் இதுவெல்லாம் அவருக்கு நிகழ்ந்து உச்சமான சூரியனின் திசையில் என்ன பலமான
சூரியன் திசையிலா என்று கருத வேண்டாம் 12க்குடைய சூரியன் உச்சமானது விபரீதி ராஜயோகம் தந்துள்ளது ஆனால் அவரின்
திசையில் கஷ்டப்படுத்துவார் ஏனென்றால் கேதுவின் அசுவினி 3
ஆம் பாதம் மேலும் 8க்குடையவனுடன் அதிக நெருக்கம் ஆகியவையும் ஆகும் மேலும் 4ல் குரு கேது சந்திரன் சேர்ந்தது ஆகியவையும்
ஆகும் ஆனால் இந்த வயதில் தான் தன்னை சுற்றி உள்ள சமூக அரசியல் சூழலை பத்திரிக்கை
மற்றும் புத்தகங்கள் வாயிலாக படித்தறிந்தார் அதனால் அரசியல் ஆர்வம் அவருக்கு ஒரு
விதையாக விழுந்தது.
மேலும் இங்கே முக்கிய நான் முதலில் சொல்ல நினைப்பது இனி
வரும் ஹிட்லரின் ஜாதக அமைப்புகளை படித்து விட்டு நானும் கன்னி லக்னம் எனக்கும் சனி
11ல் தான் இருக்கிறது அல்லது
எனக்கும் 8ல் சூரியனிருக்கிறது
அல்லது புதன் இருக்கிறது என்று நீங்களாக கணித்து தவறான பலன்களை எதை எடுத்து கொள்ள
கூடாது இதை கூர்ந்து கவனியுங்கள் ஜோதிடம் என்பது வெறும் இராசி கட்டம், அம்ச கட்டத்துடன் நின்று விடுவதல்ல அடிப்படையான
விஷயங்களை எளிமையாக்கிய மூல வரைவு தான் இராசி கட்டம் அதன் கணித பிரதி வடிவான
நவாம்சமும் எனவே அதையும் தாண்டி ஜோதிடத்தில் நிறைய உள் கணிதங்கள் உள்ளன எனவே இதை
எல்லாம் அறியாமல் எதையும் பொதுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது அதாவது சாதாரண சாதனையா
பெரிய சாதனையா அல்லது சாதாரண துன்பமா பெரிய துன்பமா போன்றவற்றை கூறும் முக்கிய
விஷயங்களாக இருப்பது இந்த உள் கணிதங்கள் ஆகும். அதில் முக்கியமானவற்றில் ஒன்று இந்த திக்கு சக்கரம்
அடால்ஃப் ஹிட்லர் திக்கு சக்கரம்
அதர்மத்தின் திக்கான தென்மேற்கே இவரின் லக்ன திக்காக
அமைந்துள்ளது மேலும் பாப அதர்ம போர்களின் திக்கான 4 ஆம் திக்கின் அதிபதியும்
ஆயுள்காரகனான சனி பகவான் அவரின் எதிரியான எமனின் திக்கான தெற்க்கை அடைந்து அதனால்
அவர் இருக்கும் பாகையால் சனி திக்கு கடும் பகை அடைகிறார் இதனால் யுத்தத்தால்
கொடூரமாகவும் தன் ஆயுளையும் மற்றவரின் ஆயுளை எடுக்கும் கருணையற்ற திக்கை அடைந்துள்ளார். தெற்கு
எமனின் திக்கு என்பது ஜோதிடமும் வாஸ்து அறிந்தவர்களுக்கு தெரியும் மேலும் எமன்
சனிக்கு கடுமையான பகைவன் என்று நான் ஏற்கெனவே எழுதிய Identifying characteristics of Saturn - சனியின்
தன்மைகளை அடையாளம் காணல்… குறிபிட்டுள்ளேன்.
லக்ன திக்கின் அதிபதிகள் இந்திர திக்கில் வலிமை
அடைந்தும் மேலும் போர்கிரகமான செவ்வாய் யுத்தகளம் யுத்தகள கொலை மரண திக்கான இந்திர
திக்கில் ஆட்சி அடைந்து அமைந்துள்ளார் உடன் சுக்கிரனும் அதே திக்கில்
வலிமையடைந்தால் அளவற்ற அதிகாரத்தை பெற்றும் போர்கடவுள் வர்ணிக்கப் படும்
இந்திரனின் திக்கில் அசுப வலிமையடைந்து உள்ளதால் இரக்கமற்ற சர்வாதிகாரி என்ற
உயரத்தை அடைந்து பிற இன மக்கள் சாவதற்கும் தன் இன மக்கள் சாவதற்கும் வழியாக
இரண்டாம் யுத்தத்தை தொடங்கினான் இது போன்ற பலன்கள் திக்கு சக்கரத்தின் வழிகாணலாம்.
தைரியமும் தன்னம்பிக்கையுமே ஹிட்லரின் பலமும் பலவீனமும்
ஆகும் அதாவது தன்னாலும் தன் இன மக்களாலும் தான் உலகை ஆள முடியும் என்று தீர்க்கமாக
கருதினான் அதனின் படைப்பு தான் அவரின் ஆரிய உயர்வுக் கொள்கை (Aryan Supremacy Theory) அதாவது தன் இனமே
எஜமானுக்குரிய இனம் என்று கருதுகோளை ஆழமாகவும் தைரித்துடனும் முழங்கினான் எனது
கவிதை ஒன்றில் நான் இவ்வாறு எழுதி இருப்பேன்
"யாராக இருந்தாலும் அவர்கள் எங்களால்
இந்த
உலகை ஒரே ஜாதியாலும்
ஒரே
மதத்தாலும் அல்லது
ஒரே
இனத்தாலும் நிரப்பி விடமுடியும் என்று கருதினால்
அது
தோல்வியில் தான் முடியும் ஏனென்றால்
இறைவனின்
படைப்பானது இந்த பூமியில்
பன்முகத்தன்மையால்
நிறைந்துள்ளது இங்கே
அணில்களிலும்
மரங்களிலும் பூக்களிலும்
ஆயிரம்
ஆயிரம் விதவிதமான வண்ணங்களால்
பசுமையாக்கி
இருக்கிறான் இறைவன்
ஒட்டகத்திடமும்
மீன்களிடமும் பறவைகளிடமும்
ஆயிரம்
ஆயிரம் விதவிதமான படைப்புக்களால்
அழகாக்கி
இருக்கிறான் இறைவன்
அவனின்
இயற்கை கோட்பாட்டை மனிதனால் முழுவதுமாக
உருவாக்கவும் முடியாது மாற்றி அமைக்கவும் முடியாது" - சிவதத்துவ சிவம்
தைரிய வீரிய வீர ஸ்தானம் ஆன 3ஆம் ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் அவரின் இன்னும் ஒரு ஸ்தானாமான துர்
ஸ்தானமான 8ஆம் ஸ்தானத்தில்
மேஷத்தில் ஆட்சி பெற்று 8ஆம்
பார்வையாக தனது தைரிய வீரிய வீர ஸ்தானத்தை பார்ப்பதால் அளவுகடந்த தைரியம்
நவாம்சத்திலும் ஆட்சி அடைந்து உள்ளதால் மேலும் வர்க்க கட்டங்களிலும் மூன்று
இடங்களில் உச்சம் அடைந்துள்ளால் அளவுகடந்த துணிவு ஒருவருக்கு செவ்வாயிக்கு அதுவும்
பாபத்தன்மையால் பாதிக்க பட்ட செவ்வாயிக்கு இப்படிபட்ட அளவுகடந்த தைரியம் ஆபத்தை
தான் தரும் அதை தான் இவருக்கும் தந்தது போர் முனையில் இராணுவ வீரனாக இருந்தார்
அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது பின் தெருக்களிலும்
விடுதிகளிலும் இவர் மக்களை திரட்டி "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை
செய்தார்கள். அவர்களை பழி தீர்க்க
வேண்டும்" என்று தைரியமாக
முழங்கினார் ஜெர்மனியரின் ஒற்றுமைக்கும் நவால் வலிமை செய்தார்.
2ஆம்
பகுதியில் மீதி தொடரும்...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
Hello loosu astrologer, First of all go through the world history written by a neutral historian and then judge about Hitler.dont play the second fiddle.nonsense