27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...
27 நட்சத்திரங்களின்
யோனி இன மிருகங்கள்...
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களையும் அதன் பால் உணர்வு, குணத்தன்மை ரீதியாக 14 வகை மிருகங்களாக பிரித்து கொடுத்துள்ளனர் நம்
ஜோதிட முன்னோர்கள், அதில் அந்த 14 வகை மிருகங்ளிலும் பெண், ஆண்
வகை நட்சச்திரமாகவும் பிரித்து கொடுத்துள்ளனர் அதன் விவரங்கள் கீழே உள்ளன, சிலர் இதை கிண்டல் தன்மையோடு அணுகலாம் அதாவது
மனிதர்களை போய் விலங்களோடு ஒப்பிட்டு மதிப்பு குறைவாக காண்பதுவா என்று நினைக்கலாம், விஞ்ஞானிகள் மனிதன் சில குரங்கு இனத்தின்
வழிதோன்றல் என்று சொல்கிறார்கள் அதனால் அது பொய்யாவதில்லை அதனால் மதிப்பு குறைவாக போவதுமில்லை. ஆன்மீகத்தில் திருவாசகம் சிவபுராணத்தில்
மாணிக்கவாசகர் -
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர
ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ
நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப்
பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்...
என்று மனித நிலைக்கு நாம் முன்னேறுவதர்க்கு முன்பே பல
மிருக பரிமாண வளர்ச்சியை கடந்து வந்துள்ளோம் என்பதை உணர்த்துகிறது மற்றும் வைணவத்திலும் மகாவிஷ்ணுவின் அவதார வரிசைகளை மனித பரிமாண வளர்ச்சியை ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகளையும் படித்துள்ளேன் ஆக இந்த ஆன்மீக உண்மையையும் ஒப்பிட்டு
பார்த்தால் இப்படி பிரித்ததில் மதிப்பு குறைவாக காண்பதற்கு ஒன்றுமில்லை என்பதை
உணரலாம். யோனி என்றால் மூலஆதாரம், தோற்றம், மரபுவழி, கருவாய் என்று அர்த்தங்கள் வரும்.
1
|
அசுவினி
|
ஆண் குதிரை
|
2
|
பரணி
|
பெண் யானை
|
3
|
கார்த்திகை
|
பெண் ஆடு
|
4
|
ரோஹிணி
|
ஆண் நாகம்
|
5
|
மிருகசீரிடம்
|
பெண் சாரை
|
6
|
திருவாதிரை
|
ஆண் நாய்
|
7
|
புனர்பூசம்
|
பெண் பூனை
|
8
|
பூசம்
|
ஆண் ஆடு
|
9
|
ஆயில்யம்
|
ஆண் பூனை
|
10
|
மகம்
|
ஆண் எலி
|
11
|
பூரம்
|
பெண் எலி
|
12
|
உத்திரம்
|
எருது (காளை)
|
13
|
ஹஸ்தம்
|
பெண் எருமை
|
14
|
சித்திரை
|
ஆண் புலி
|
15
|
சுவாதி
|
ஆண் எருமை
|
16
|
விசாகம்
|
பெண் புலி
|
17
|
அனுஷம்
|
பெண் மான்
|
18
|
கேட்டை
|
ஆண் மான்
|
19
|
மூலம்
|
பெண் நாய்
|
20
|
பூராடம்
|
ஆண் குரங்கு
|
21
|
உத்திராடம்
|
பெண் கீரி
|
22
|
திருவோணம்
|
பெண் குரங்கு
|
23
|
அவிட்டம்
|
பெண் சிங்கம்
|
24
|
சதயம்
|
பெண் குதிரை
|
25
|
பூரட்டாதி
|
ஆண் சிங்கம்
|
26
|
உத்திரட்டாதி
|
பசு
|
27
|
ரேவதி
|
பெண் யானை
|
0 Response to "27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்..."
கருத்துரையிடுக