ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
ரோஹிணி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் பொதுகுணங்கள்...
நட்சத்திரம் -
ரோஹிணி
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் -சந்திரன்
நட்சத்திர அதிதேவதைகள்
- பிரம்மா, சரஸ்வதி
நட்சத்திர யோனி - ஆண் பாம்பு
நட்சத்திர கணம் - மனுஷ கணம்
நட்சத்திர பூதம் - நீர்
இராசி இருப்பு - ரிஷபம்
இராசி இருப்பு பாகை - 40:00:00
முதல் 53:20:00 பாகை வரை
இராசி நாதன் - சுக்கிரன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில்
பிறந்தவர்களுக்கு ரோஹினி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும் ஜென்ம இராசி ரிஷப
இராசியாகும்.
ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு
காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண
இயக்கத்தை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
ரோஹிணி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
பால்,
பால் சார்ந்த இனிப்புகளில் பிரியம், முட்டை கலந்த பிஸ்கட் கேக்களில் பிரியம், இறைச்சி, மீன் போன்ற அசைவ
உணவுவகைகளில் அளவான பிரியமே உள்ளவர்கள், பழங்கள் அதன் சாறுகள் சேர்த்த உணவுகள் பிடிக்கும்,
உருளைகிழங்கு மரவள்ளிகிழக்கு போன்ற கிழங்கில் செய்த உணவுகள், சோளம் பட்டாணியால் செய்த உணவுகள், நெய் சேர்த்த அல்லது பெரித்த பால் இனிப்புகள், பாதாம் முந்திரியால் செய்த பலகாரங்கள், பருப்பு பயாசம், இனிப்பு பனியாரம், நீராகரங்கள், கள்ளு, பழச்சுவை சேர்ந்த ஐஸ்கீரிம்கள், மாவில் வேகவைத்த இட்லி போன்ற உணவுகள் மற்றும் வாசனை கீரை வகைகள் ஆகியவை
பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்களாக இருக்கும்.
ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த
பெண்ணுக்கு வரும் பாடல் -
விருத்தி ரோகிணி உதித்தோள் பெருத்தமேனி தாய்தந்தை
புருடன் மேல் வாஞ்சை வாசனை ரூபம் மயிரழகும் சந்ததி
பெருக்கமும் கலைநாட்டம் பால்விருத்தியாள் மதிநின்ற
கருநிறை கெடில் சதிகள் சஞ்சலங்கள் உடையாளாக்கும்
- சோதிட அங்க சாரம்
ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த
அடியார்கள் & மகான்கள் -
திருநாளை போவார்
நேச நாயனார்
மங்கையர்க்கரசியார்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்... "
கருத்துரையிடுக