"ஆரோக்கியம் பாஸ்கரா இச்சதி" - யோக தின சிறப்பு பதிவு…
"ஆரோக்கியம்
பாஸ்கரா இச்சதி" இதன் பொருள் 'உடலில் ஆரோக்கிய பலத்தை தரும் பொறுப்பை உடையவர் சூரிய தேவன் ஆகும்' பாஸ்கார என்றால்
சூரியனின் வேறு ஒரு பெயர் ஆகும் சூர்ய
காயத்ரியில் இந்த சொல்லை காண முடியும்.
சூர்ய காயத்ரி
"ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||"
வேதங்களில் ஆரோக்கியமான வளமைக்கு உடல்நலத்தை உயர்த்துவதற்கும் சூரியனை
வழிபடு என்கிறது அதை ஹத யோக பாலதீபிகா, ஆதித்யா ஹ்ரூதயம் என பல பண்டைய நூல்கள் வர்ணித்துள்ளன அதற்க்காக தனியாக
சூரிய நமஸ்காரம் என்ற ஒரு நடைமுறையையே நம்முன்னோர்கள் கொடுத்துள்ளனர் இன்றை வேகமாக
வாழ்வியல் சூழலில் வேலையின் நெருக்கடி மற்றும் 11 மணி பின் இரவு தூக்கம் காரணமாக தாமத காலை விழிப்பு போன்ற காரணங்களால்
எல்லாராலும் யோகாசனங்கள் முடியாது போகிறது ஆனாலும் ஒவ்வொருவரின் ஆரோக்கிய மற்றும்
உயிர் சக்தியின் பலத்தை தரும் சூரிய தேவனின் பலத்தை நாம் நமது ஜாதகத்தின் மூலமும்
தெரிந்து கொள்ளலாம்.
இது பொதுவான பதிவு என்பதால் சூரியன் எங்கிருந்து எப்படியான பலத்தை பெறும்
போது அது நமது ஆரோக்கிய மற்றும் உயிர் சக்திக்கு உதவும் என்பதையும் பொதுவான பதிவாக
மட்டும் பதிவிக்கிறேன்...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to ""ஆரோக்கியம் பாஸ்கரா இச்சதி" - யோக தின சிறப்பு பதிவு…"
கருத்துரையிடுக