மகரம் இராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் பாகை மற்றும் நவாம்ச இராசி…

மகரம் இராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் பாகை மற்றும் நவாம்ச இராசி

இராசி சக்கரத்தில் 12 இராசி மண்டலகளிலும் ஒவ்வொரு இராசி மண்டலத்துக்கும் மூன்று நட்சத்திரங்களின் பங்களிப்பும் மற்றும் அந்த ஒரு நட்சத்திரத்தை 4 பாகங்களாக பிரித்து அப்படி பிரிக்கபட்ட 9 பாகங்களை அதை தான் ஜோதிட மொழியில் 9  பாதங்கள் என்று கூறுகிறோம்,

உதாரணமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து 4 பாதங்கள் பின் இரண்டு நட்சத்திரங்களில் இருந்து மீதி 5 பாதங்கள் சேர்க்கபட்டு மொத்தம் 9 பாதங்களாக தொகுத்து அதை தான் இராசி என்கிறார்கள் முன்னோர்கள்,

இராசி என்றால் தொகுதி, தொகுப்பு, சந்திர ஷேத்திரம், ஆகாய வட்ட பாதை என்றெல்லாம் பொருள்கள் உண்டு எனவே இது தான் ஜோதிடத்தின் அடிப்படை, உங்களுக்கு பாடம் சொல்லித் தருவது எனது நோக்கமில்லை அதற்கு பதிலாக பல அன்பர்கள் ஜோதிடத்தின் அடிப்படை கூறுகளை தெரிந்து கொள்ள விரும்புவதால் எளிமையாக பதிவு செய்கிறேன்.

ஒரு இராசி மண்டலத்தில் 30:00:00 பாகை:கலை: விகலை உள்ளது ஒவ்வொரு நட்சத்திரத்தில் 13:20:00 பாகை:கலை: விகலை உள்ளது ஒவ்வொரு நட்சத்திர பாதத்தில் 3:20:00 பாகை:கலை: விகலை உள்ளது, ஒரு இராசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு நவாம்ச வர்க்கத்தில் ஒவ்வொரு இராசியை அடையும் இதன் எளிமையான அட்டவனை தான் இது,

ஒருவர் கோயிலில் அர்ச்சனை செய்வதற்க்காக தனது ஜென்ம நட்சத்திரம் இராசியை சொல்லுவார்கள் உதாரணமாக ஒருவர் திருவோணம் நட்சத்திரம் மகர இராசி என்று சொல்கிறார் என்றால் அவரின் ஜாதகத்தில் மனக்காரகன் ஆன சந்திரன் திருவோணம் நட்சத்திர ஆகாய மண்டலத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்திருப்பார் என்று அறிந்து கொள்ளவேண்டும்.

மகர இராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் 9 பாதங்கள் பாகைகளின் விவரம் மற்றும் அந்த பாதம் உள்ள நட்சத்திரம் அடையும் நவாம்ச இராசி அட்டவனை -

ராசி
அதிபதி
நட்சத்திர பாதம்
அதிபதி
பாகை - கலை
பாகை - கலை
நவாம்ச ராசி
மகரம்
சனி
உத்திராடம் 2
சூரி
270:00:00
273:20:00
மகரம்
மகரம்
சனி
உத்திராடம் 3
சூரி
273:20:00
276:40:00
கும்பம்
மகரம்
சனி
உத்திராடம் 4
சூரி
276:40:00
280:00:00
மீனம்
மகரம்
சனி
திருவோணம் 1
சந்
280:00:00
283:20:00
மேஷம்
மகரம்
சனி
திருவோணம் 2
சந்
283:20:00
286:40:00
ரிஷபம்
மகரம்
சனி
திருவோணம் 3
சந்
286:40:00
290:00:00
மிதுனம்
மகரம்
சனி
திருவோணம் 4
சந்
290:00:00
293:20:00
கடகம்
மகரம்
சனி
அவிட்டம் 1
செவ்
293:20:00
296:40:00
சிம்மம்
மகரம்
சனி
அவிட்டம் 2
செவ்
296:40:00
300:00:00
கன்னி
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மகரம் இராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அதன் பாகை மற்றும் நவாம்ச இராசி…"

கருத்துரையிடுக

Powered by Blogger