கன்னி லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…

கன்னி லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்

 
முதல் பாடலின் விளக்கம் -
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் மீனம் ஆகும் அதற்கு நாயகன் குரு (வேதன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக அவருக்கும் அமையும் வாழ்க்கை துணை தளர்ந்து போகாத குணம் உடையவராகவும், தானம் கருணை செய்யும் பண்பு உடையவராகவும், கல்வி தகவல் அறிவு நிறைந்தவராகவும், இறைவனின் மேல் பக்தி உள்ளவர்களாகவும் இருப்பார், அழகானவராகவும், இயல் இசைகளில் நாட்டம் உள்ளவராகவும், சமமான தேக பின் சற்று குண்டான தேகம் ஆனவராக மாறக்கூடியவராக இருப்பார் இவ்வாறாக இவருக்கும் அமையும் வாழ்க்கை துணை இருப்பார், கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவும் புதனும் சேர்ந்திருக்க கூடாது அப்படி சேர்ந்திருக்காமல் இருந்தால் நன்மைகள் அதிகமாகி தெய்வ பலமும் கிடைக்கும் குலம் விருத்தியும் ஏற்படும் இதற்கு.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
குரு (வேதன்) பகவான் சுப பலத்தை கூறுகிறேன் கேட்பாய் ஆக குரு (அந்தணன்) எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் தனியாக இருந்தால் சிறப்பில்லை, கேந்திரங்களில் சுப கிரகங்களுடன் சேராது இருக்க வேண்டும்,  லக்கினத்தில் 3ஆம், 6ஆம், 9ஆம், 11ஆம், 12 ஆகியவை சுப பல ஸ்தானங்கள் இங்கு அமருவதால் இல்வாழ்க்கை உயரும், நல்ல பிள்ளை செல்வம் ஏற்படும், கலைமகளின் (சரஸ்வதி) அருளும் உண்டு ஆனால் அந்த குரு (வீதகன்) பகவான் தீயகிரகங்களின் சேர்க்கை தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் அப்போது மேற் சொன்ன நன்மைகள் ஏற்படும் மாறி நின்றால் மிதுனம் (இருவர்) லக்கினத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானத்திற்கு சொன்ன தீய பலனை இதற்கும் சொல்ல வேண்டும். - மிதுனம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி ...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 

0 Response to "கன்னி லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger