ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
ஆயில்யம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - ஆயில்யம்
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் -
புதன்
நட்சத்திர அதிதேவதை - நாகர்கள்
நட்சத்திர யோனி - ஆண் பூனை
நட்சத்திர கணம் - ராக்ஷச கணம்
நட்சத்திர பூதம் - நீர், காற்று
நட்சத்திரத்தின் இராசி இருப்பு - கடகம் ராசியின் விண்மீன் மண்டலத்தில் ஆறு நட்சத்திர
கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கடக ராசியில் பாகை 106:40:00 முதல்
120:00:00 கலை வரை இருப்பாக உள்ளது.
இராசி நாதன் - சந்திரன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில்
பிறந்தவர்களுக்கு ஆயில்யம்
நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம
இராசி கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும்
உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை
பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
ஆயில்யம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் ஒன்பதாவது நட்சத்திரமாக இருக்கும் ஆயில்யம்
நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் செழுமையாக பேசும் சாமர்த்தியசாலிகள் மற்றும் விரோதிகளையும் நட்பு
பாராட்ட வைக்கும் தன்மை கொண்டவர்கள் என்று ஜாதக அலங்காரம் என்று நூல் கூறிகிறது.
எதிர்பாராத தாக்குதல் அல்லது எதிர்பாராத குணங்கள் சில திடீரென வரலாம். தன்னைவிட
வலிமையானவர்களானாலும் தனக்கு இருக்கும் சக்தியை கொண்டு எவருடனும் போட்டியிட
பயபடமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலர் ஆழ்ந்த பார்வை அல்லது ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யும் திறன்
பெற்றிருப்பார்கள். கண், நெற்றி, புருவம் இம் மூன்றில் இரண்டு மற்றவர்களை
காட்டிலும் தனித்துவமாக இருக்கும். மற்றவர்களை ஏளனம் செய்வதிலோ அல்லது கிண்டல்
செய்வதிலோ ஆர்வமானவர்களாக இருக்கலாம்....
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."
கருத்துரையிடுக