நீங்கள் சூரிய வம்சமா அல்லது சந்திர வம்சமா அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா - ஜோதிட துணுக்குகள் பகுதி


நீங்கள் சூரிய வம்சமா அல்லது சந்திர வம்சமா அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா - ஜோதிட துணுக்குகள் பகுத..

எப்போது இரண்டு கோஷ்டிகள் இருந்து கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதாவது அரசியல், தொழில், நடிப்பு, நிர்வாகம், சட்டம் போன்ற பலவேறு துறைகளில் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் அது போல நவகிரகங்களையும் 12 இராசிகளையும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கி அந்த இரண்டு கோஷ்டிகளின் பலம் பலவீனத்தை பார்க்க பயன்படுத்துவது தான் ஹோரை சக்கரம். சூரிய கோஷ்டிகளின் பலம் மற்றும் சந்திர கோஷ்டிகளின் பலம் ஆக இந்த இரு கோஷ்டிகளின் பலத்தை காட்டும் வர்க்க சக்கரமாக உள்ளது இந்த ஹோரை சக்கரம் (ஹோரா சக்கரம்). அதென்ன கோஷ்டிகள் சற்று விளக்கமாக சொன்னால் நவகிரகங்களில் சூரியனின் தலைமையில் ஒரு கோஷ்டி, சந்திரனின் தலைமையில் ஒரு கோஷ்டி என்று பிரித்து பார்ப்பது. அதாவது சூரியனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் செவ்வாய், குரு, கேது கிரகங்கள் அணி நிற்கும், சந்திரனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் சனி, சுக்கிரன், ராகு கிரகங்கள் அணி நிற்கும் இதில் புதனை நடுநிலையானவர் என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

சரி இவ்வாறு எதற்க்காக நாம் கோஷ்டி ஆக்கி பார்க்க வேண்டும் அதாவது ஒவ்வொரு உயிர்களும் இரண்டு தன்மையால் ஆனது சூரிய தன்மை மற்றும் சந்திர தன்மை இதில் சூரிய தன்மை ஜீவனை பிரதிபலிக்கும் சந்திர தன்மை மனதை பிரதிபலிக்கும், சூரிய தன்மை நான் என்ற விஷயத்தை பிரதிபலிக்கும் சந்திர தன்மை எனது என்ற விஷயத்தை பிரதிபலிக்கும், சூரிய தன்மை அறிவை பிரதிபலிக்கும் சந்திர தன்மை அன்பை பிரதிபலிக்கும் இது இந்திய ஆன்மீக தத்துவம், சார் இதெல்லாம் எனக்கு புரியாது சார் நேரா விஷயத்துக்கு வாங்க சார் என்று கேட்பவர்களுக்காக நேராக விஷத்திறக்கே வருகிறேன் அதாவது

சூரிய ஹோரை சூரிய கோஷ்டிகள் என்பவர்கள் சூரிய வம்சம் சூரிய அம்சம் நிறைந்தவர்கள் அதாவது தைரியம், போராட்ட குணம், கூட்டு ஆற்றல், கோபம், அசட்டு துணிவு, ஆளுமை, வழிநடத்தல், சுய தனித்தன்மை மற்றும் மரியாதை, ரோஷம் இது போன்ற வகையினால் ஆன குண அம்சங்கள் நிறைந்தவர்கள்

சந்திர ஹோரை சந்திர கோஷ்டிகள் என்பவர்கள் சந்திர வம்சம் சந்திர அம்சம் நிறைந்தவர்கள் அதாவது கலை, அழகுணர்ச்சி, கற்பனை, சுவை, உள்ளுணர்வு, உணவு நாட்டம், சாந்தம், ஆதரவு, அரவணைப்பு இது போன்ற வகையினால் ஆன குண அம்சங்கள் நிறைந்தவர்கள்

இதெல்லாம் சரி புரியுதுங்க நான் சூரிய வம்சமா அல்லது சந்திர வம்சமா அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா சொல்லுங்க என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம் நீங்கள் உங்களுடை விரிவான ஜாதக புத்தகத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அதில் ஹோரை சக்கரம் D-2 Chart என்று சுருக்கமாக சிலர் அழைக்கிறார்கள் அதில் ஒவ்வொரு கிரகங்களும் எந்த எந்த அதாவது சூரிய ஹோரையில் உள்ளதா அல்லது சந்திர ஹோரையில் உள்ளதா, சூரிய அம்சத்தில் உள்ளதா அல்லது சந்திர அம்சத்தில் உள்ளதா என்று விளக்கி அந்த ஹோரா வர்க்க சக்கரத்தில் கொடுத்து இருப்பார்கள் அதில் சிம்ம ராசி என்பது சூரிய ஹோரையை பிரதிபலிக்கும் மற்றும் கடக ராசி சூரிய ஹோரையை பிரதிபலிக்கும்.

உங்களது லக்னமும் மற்றும் லக்னாதிபதியான கிரகமும் மற்றும் சூரியன், சந்திரன் , சூரியன் அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி கிரகம் மற்றும் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி கிரகம் ஆக மொத்தம் 5 கிரகங்கள் மற்றும் லக்னம் அமர்ந்திருக்கும் சேர்த்து 6 இவர்கள் அதிகபட்சமாக எந்த அம்சத்தில் அதாவது எந்த ஹோரையில் அதிகமாக இருக்கிறார்களோ அதை பொருத்து ஒருவர் சூரிய வம்சம் சூரிய அம்சம் நிறைந்தவரா அல்லது சந்திர வம்சம் சந்திர அம்சம் நிறைந்தவரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். கிரகங்கள் சூரிய ஹோரையில் அதிகமாக அமைக்க பெற்றவர்கள் நான் மேலே சொன்ன சூரிய குண அம்சம் நிறைந்தவர்கள் அதே போல கிரகங்கள் சந்திர ஹோரையில் அதிகமாக அமைக்க பெற்றவர்கள் நான் மேலே சொன்ன சந்திர குண அம்சம் நிறைந்தவர்கள்


லக்னம்
சூரியன் ஹோரை
சந்திரன்
சூரியன் ஹோரை
சூரியன்
சூரியன் ஹோரை
புதன்
சந்திரன் ஹோரை
சுக்கிரன்
சந்திரன் ஹோரை
செவ்வாய்
சந்திரன் ஹோரை
வியாழன்
சந்திரன் ஹோரை
சனி
சூரியன் ஹோரை
ராகு
சூரியன் ஹோரை
கேது
சூரியன் ஹோரை
 
இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமென்றால் இதோ ஒரு உதாரணம் மேலே இருப்பது எனது ஹோரை சக்கரத்தில் கிரங்களின் நிலை இதில் லக்னம் இருப்பது சூரிய ஹோரையில், லக்னாதிபதி சனி இருப்பது சூரிய ஹோரையில், சூரியன் இருப்பது சூரிய ஹோரையில், சந்திரன் இருப்பது சூரிய ஹோரையில், சூரியன் அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி கிரகம் சந்திரன் இருப்பது சூரிய ஹோரையில் மற்றும் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி கிரகம் சூரியன் இருப்பது சூரிய ஹோரையில் ஆக மொத்தம் 5 கிரகங்கள் மற்றும் லக்னம் உள்பட இருப்பது  சூரிய ஹோரையில் எனவே எமக்கு சூரிய வம்சம் சூரிய அம்சம் சற்று அதிகம் உள்ளவராக நான் இருப்பேன் இவ்வாறாக ஒவ்வொரும் தங்களது அம்சத்தை தெரிந்து கொள்ளலாம்.


0 Response to "நீங்கள் சூரிய வம்சமா அல்லது சந்திர வம்சமா அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா - ஜோதிட துணுக்குகள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger