மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், மகம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தியான அடியார்கள் & மகான்கள்


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், மகம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தியான அடியார்கள் & மகான்கள் -

நட்சத்திரம் - மகம்
மகம் நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - கேது
மகம் நட்சத்திர அதிதேவதை  - பித்ருக்கள் (தெய்வீக பிதாக்கள்)
மகம் நட்சத்திர யோனி - ஆண் எலி
மகம் நட்சத்திர கணம் - ராக்ஷச கணம்
மகம் நட்சத்திர பூதம் - நெருப்பு (தீ)
மகம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - சிம்மம் ராசியின் விண்மீன் மண்டலத்தில் நீண்டு வளைந்த ஆறு நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்தில் சூரியனை போல நூறு மடங்கு அதிகமாக ஒளிரும் ஒரு நட்சத்திரமும் உள்ளது அதாவது one of the brightest stars in the night sky பெயர் ரெகுலஸ் லியோனிஸ் (ரோமானிய பெயர்) சூரியனிடம் இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளது.
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - சிம்ம ராசியில் பாகை 120:00:00 முதல் 133:20:00 கலை வரை இருப்பாக உள்ளது.
மகம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - சூரியன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பத்தாவது நட்சத்திரமாக இருக்கும் மகம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய முன்னோர்களின் பண்புகள் பல பெற்றிருப்பார்கள், தலைமைக்குரிய பண்புகள் பல பெற்றிருக்கலாம், மரபு மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்க கூடிய குணங்கள் பெற்றிருக்கலாம். குடும்ப பெருமை, தற்பெருமை மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். தன்னை விரும்புபவர்களிடமும் மற்றும் தன்னால் விரும்பபடுபவர்களிடமும் தாராளமாக அல்லது அர்ப்பணிப்பாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் அதாவது ஆங்கிலத்தில் சொல்வதானால் Being generous or dedicated to those who love him and who he likes too. பாரம்பரியமாக  விழா மற்றும் சடங்குகளுக்கு...



0 Response to "மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், மகம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தியான அடியார்கள் & மகான்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger