கந்தர் அனுபூதி பகுதி 8 - கந்தரனுபூதி பாடல் 13 ன் விளக்கம்...

கந்தரநுபூதி பாடல் 13 ன்  விளக்கம்...   
கந்தர் அனுபூதியின் பாடல் 13. முருகன், தனிவேல் பாடலின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 13 ஆம் பாடலின் பொருள் விளக்கம்.

பாடல் 13

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ரிஷப இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

ரிஷப இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று
இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.

வெண் வெள்ளி வெள்ளை நிறத்தை கொண்டது ரிஷப இராசி
நீளமான நான்கு கால் கொண்ட இராசி
இது இரவில் வலிமையாகி தெற்கு திசையை சார்ந்த இராசி
இது கிராமங்களை காரகத்துவமாக கொண்ட இராசி
இது வணிகர்களை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இது பூமி பூதத்க்குரிய இராசி பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி
இது சுக்கிரனை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

அமாவாசை என்பதன் விளக்கமும் அதன் வழிபாடும்…

அமாவாசை என்பதன் விளக்கமும் அதன் வழிபாடும்… 
அமாவாசை என்பதற்கான சொல் விளக்கும் பார்ப்பதற்கு முன் வானியல் ரீதியாக அமாவாசை நிகழ்வு என்பது எப்படி விளக்கபடுகிறது என்று பார்ப்போம் பூமியைச் சுற்றிவருகின்ற சந்திர கிரகம் பூமிக்கும் மற்றும் சூரியனுக்கும் இடையில் வரும் நிகழ்வே அமாவாசை ஆக அழைக்கபடுகிறது. நமது ஜோதிட ரீதியாக அமாவாசை நிகழ்வை என்பதை காண்பதற்கு இராசி சக்கரத்தில் சுற்றி வரும் சூரிய சந்திரர்கள் ஒவ்வொன்றும் சூரியனும் சந்திரனும் பாகையில் பூமியின் பார்வையில் சந்தித்து கொள்ளும் நாள் அன்று நிகழும் திதியே அமாவாசை திதியாகும். 
அமாவாசை என்பதற்கான சொல் விளக்கும் என்பது அமா (amā अमा) என்றால் வீட்டிற்கு - வீட்டில் அதாவது சொந்த இடத்திற்கு - இடத்தில் என்று பொருள், வாசய (vāsya वास्य) என்றால் வந்து சேர்ந்தல் அல்லது குடியேறுதல் என்று பொருள், ஆக மொத்தமாக அமாவாசை என்பதற்கு சொந்த இடத்திற்கு - சொந்த இடத்தில் வந்து சேர்ந்தல் அல்லது குடியேறுதல் என்று பொருள் படும்.....
https://www.youtube.com/watch?v=-67xdU0cBbI
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கடகம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில...


ஜாதகத்தில் கடக ராசியில் சந்திரன் இருந்தால்...
ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் அமர்ந்தால் -

இயற்கையாக இது சந்திரனுக்கு ஆட்சி ஆளுகை தன்மையை ஏற்படுத்தும் இராசி எனவே கற்பனைத்திறன் மிக்கவர், பார்பதற்கு அழகானவர், நல்ல ஆதரவான தாய் தந்தை பெற்றவர், கல்வி கலைகள் எல்லாம் நன்றாக வரும், நீர் வளம் நில வளம் பெற்றவர், வியாபாரம் செழிக்கும், குறிப்பாக விற்பனை வியாபாரங்கள் நன்கு நடக்கும், அனைவராலும் விரும்ப படுபவராகவும் இருப்பார், தன் துணை பாலினத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டவர். புத்திசாலி, சாமர்த்தியசாலி, ஏதேனும் வித்தையில் ஜோலிப்பார், நல்ல ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பொதுவாக பாசமானவர் அதிலும் முக்கியமாக தாயின் மீது மிக பாசமான நபராக காட்டிக்கொள்வார். நீர் தேகமான உடல் தோற்றம், சமூகத்தில் ஒத்திசைவான ஆளுமை புரிவதில் வல்லவர். ஒரு காரியத்தை அல்லது பொருளை வளர்த்து கொண்டுபோவதில் காப்பதிலும் சமர்த்தர். Safe environment உடன் வழக்கம்போல வாழ்க்கையானது ஒடிக் கொண்டிப்பதில் அக்கறை காட்டுவார். பாரம்பரியத்துடன் கூடிய வீட்டு சூழலுடன் பெற்றோரால் வளர்க்கபட்டால் பெற்றோரின் தேவைகளை அறிந்து தானும் அதுபோல் நடந்து கொள்வார். தன் சூழலும் தன்னை சார்ந்தவர்களின் சூழலும் பாதிக்கபடும் சூழ்நிலை உண்டாகுமானால் சீக்கிரம் பதட்டமடைய ஆரம்பித்து விடுவார். குறிப்பு நடிகர் விஜய் ஜாதகம் அதில் நடிகர் விஜயின் இராசி இந்த கடக இராசி தான்

புனர்பூசம் நட்சத்திரத்தில் இருந்தால் -  சுதந்திரமானவர்கள். தரம் பார்த்து தான் நடந்துகொள்வார். ஆக்கப்பூர்வமான சக்தி ஓட்டம் இருக்கும். கணக்கு போட்டுத்தான் எதையும் செய்வார் ஆனால் செல்ல பாச உறவுற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. சமூகத்தில் ஒத்திசைவான ஆளுமை புரிவதில் வல்லவர். பெரும்பாலும் மௌனமாக அதே சமயம் ஆர்வத்துடனும் இருப்பார்

பூசம் நட்சத்திரத்தில் இருந்தால் -  உயர்ந்த அறிவு அல்லது சிறந்த கலைகளின் மீது ஆர்வம் நிறைய இருக்கும். கேட்டல் திறன் அதிகம் இருக்கும். தான் செய்த விஷயத்தில் சுய திருப்தியுடன் தனக்கு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை. கல்வி கலைகள் எல்லாம் நன்றாக வரும். தன்னை சுற்றி இருப்பவர்களை ஊக்குவிப்பதில் வல்லவர். குறிப்பு நடிகர் விஜய் பிறந்த நட்சத்திரம் இதுவாக இருக்க வாய்ப்பு அதிகம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் இருந்தால் -  புத்திசாலி, சாமர்த்தியசாலி, ஏதேனும் வித்தையில் ஜோலிப்பார். தற்காப்பான நடத்தைகளிலும் மற்றும் தொடர்பிலும் வல்லவர். இவருக்கும் கேட்டல் திறன் அதிகம் இருக்கும். அதே போல காரியமாக பேசுவதிலும் கெட்டிக்காரர்கள். எடுத்த காரியத்தில் உறுதியாய் பற்றி நிற்பதில் முக்கியத்துவம் காட்டுவார். சுந்தர் பிச்சை ஜாதகம் இவரின் நட்சத்திரம் இதுவாக இருக்க வாய்ப்பு உண்டு ( சுந்தர் பிச்சை கூகுளின் முதன்மை செயல் அலுவலர் ஆக பணியாற்றியவர்)

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குறிப்பு - சந்திர பகவான் இரண்டரை நாட்களில் ஒரு ராசியில் இருந்து பயணிக்க கூடியவர் அதனால் அந்த காலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் இந்த இராசியில் தான் இருப்பார் அதனால் சொல்லபட்ட பலன்கள் பொதுவானது தனி ஜாதக பலம் பலவீனம் பொறுத்து மாறுபடும் மேலும் கிரகம் ஒரு இராசியில் பல சூட்சம பலங்கள் பலவீனங்கள் வலிமையடையும் முறைகள் உள்ளன மற்ற கிரக தாக்கம் உள்ளன எனவே அதை ஒட்டியும் மேலே சொல்லபட்ட பலன்கள் மாறி நடக்கும்.


கடகம் & மிதுனம், கடகம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

கடகம் & மிதுனம், கடகம் vs மிதுனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்
ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் கடகம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மிதுனம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

கடகம் & மிதுனம், கடகம் vs மிதுனம் -



பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் மகம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் மகம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் மகம் நட்சச்திரம் வரை எண்ண 6 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம்  உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் மகம் நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் மகம் நட்சச்திரம் எண்ண 6 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் மகம் நட்சச்திரம் எண்ண 6 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் மகம் நட்சச்திரம் மிருகப் பிரிவு எலி ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வருவதால் யோனிப் பொருத்தம் இல்லை.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் சிம்ம இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 3 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் சிம்ம இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனுக்கு சூரியன் நட்பு உறவுமுறை சூரியனுக்கு புதன் சம உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் சிம்ம இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் மகம் நட்சச்திரம் பாத ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் மகம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் மகம் நட்சத்திரம் சிலேத்தும நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் மகம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் மகம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 5 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் முழுமை பெறாததால் எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் அஸங்கம் (சேர்க்கை இல்லை).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.
இரத்தம் சிவப்பு நிறத்தை கொண்டது மேஷம் இராசி
முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் பெரிய உடலமைப்பு காட்டும் இராசி
நான்கு கால் இராசி பின்இரவில் வலுவாக இருக்கும் இராசி
தைரியத்தை குறிக்கும் இராசி கிழக்கு திசையை சார்ந்த இராசி
அரசு அரசர்களின் மதிப்புடைய இராசி.
சுதந்திரம், மலைத்தொடர் தொடர்புடைய இராசி
ரஜோ குணம் இராசி பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி
நெருப்பு இராசி செவ்வாயை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்


Powered by Blogger