கடகம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில...


ஜாதகத்தில் கடக ராசியில் சந்திரன் இருந்தால்...
ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் அமர்ந்தால் -

இயற்கையாக இது சந்திரனுக்கு ஆட்சி ஆளுகை தன்மையை ஏற்படுத்தும் இராசி எனவே கற்பனைத்திறன் மிக்கவர், பார்பதற்கு அழகானவர், நல்ல ஆதரவான தாய் தந்தை பெற்றவர், கல்வி கலைகள் எல்லாம் நன்றாக வரும், நீர் வளம் நில வளம் பெற்றவர், வியாபாரம் செழிக்கும், குறிப்பாக விற்பனை வியாபாரங்கள் நன்கு நடக்கும், அனைவராலும் விரும்ப படுபவராகவும் இருப்பார், தன் துணை பாலினத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டவர். புத்திசாலி, சாமர்த்தியசாலி, ஏதேனும் வித்தையில் ஜோலிப்பார், நல்ல ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பொதுவாக பாசமானவர் அதிலும் முக்கியமாக தாயின் மீது மிக பாசமான நபராக காட்டிக்கொள்வார். நீர் தேகமான உடல் தோற்றம், சமூகத்தில் ஒத்திசைவான ஆளுமை புரிவதில் வல்லவர். ஒரு காரியத்தை அல்லது பொருளை வளர்த்து கொண்டுபோவதில் காப்பதிலும் சமர்த்தர். Safe environment உடன் வழக்கம்போல வாழ்க்கையானது ஒடிக் கொண்டிப்பதில் அக்கறை காட்டுவார். பாரம்பரியத்துடன் கூடிய வீட்டு சூழலுடன் பெற்றோரால் வளர்க்கபட்டால் பெற்றோரின் தேவைகளை அறிந்து தானும் அதுபோல் நடந்து கொள்வார். தன் சூழலும் தன்னை சார்ந்தவர்களின் சூழலும் பாதிக்கபடும் சூழ்நிலை உண்டாகுமானால் சீக்கிரம் பதட்டமடைய ஆரம்பித்து விடுவார். குறிப்பு நடிகர் விஜய் ஜாதகம் அதில் நடிகர் விஜயின் இராசி இந்த கடக இராசி தான்

புனர்பூசம் நட்சத்திரத்தில் இருந்தால் -  சுதந்திரமானவர்கள். தரம் பார்த்து தான் நடந்துகொள்வார். ஆக்கப்பூர்வமான சக்தி ஓட்டம் இருக்கும். கணக்கு போட்டுத்தான் எதையும் செய்வார் ஆனால் செல்ல பாச உறவுற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. சமூகத்தில் ஒத்திசைவான ஆளுமை புரிவதில் வல்லவர். பெரும்பாலும் மௌனமாக அதே சமயம் ஆர்வத்துடனும் இருப்பார்

பூசம் நட்சத்திரத்தில் இருந்தால் -  உயர்ந்த அறிவு அல்லது சிறந்த கலைகளின் மீது ஆர்வம் நிறைய இருக்கும். கேட்டல் திறன் அதிகம் இருக்கும். தான் செய்த விஷயத்தில் சுய திருப்தியுடன் தனக்கு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை. கல்வி கலைகள் எல்லாம் நன்றாக வரும். தன்னை சுற்றி இருப்பவர்களை ஊக்குவிப்பதில் வல்லவர். குறிப்பு நடிகர் விஜய் பிறந்த நட்சத்திரம் இதுவாக இருக்க வாய்ப்பு அதிகம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் இருந்தால் -  புத்திசாலி, சாமர்த்தியசாலி, ஏதேனும் வித்தையில் ஜோலிப்பார். தற்காப்பான நடத்தைகளிலும் மற்றும் தொடர்பிலும் வல்லவர். இவருக்கும் கேட்டல் திறன் அதிகம் இருக்கும். அதே போல காரியமாக பேசுவதிலும் கெட்டிக்காரர்கள். எடுத்த காரியத்தில் உறுதியாய் பற்றி நிற்பதில் முக்கியத்துவம் காட்டுவார். சுந்தர் பிச்சை ஜாதகம் இவரின் நட்சத்திரம் இதுவாக இருக்க வாய்ப்பு உண்டு ( சுந்தர் பிச்சை கூகுளின் முதன்மை செயல் அலுவலர் ஆக பணியாற்றியவர்)

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குறிப்பு - சந்திர பகவான் இரண்டரை நாட்களில் ஒரு ராசியில் இருந்து பயணிக்க கூடியவர் அதனால் அந்த காலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் இந்த இராசியில் தான் இருப்பார் அதனால் சொல்லபட்ட பலன்கள் பொதுவானது தனி ஜாதக பலம் பலவீனம் பொறுத்து மாறுபடும் மேலும் கிரகம் ஒரு இராசியில் பல சூட்சம பலங்கள் பலவீனங்கள் வலிமையடையும் முறைகள் உள்ளன மற்ற கிரக தாக்கம் உள்ளன எனவே அதை ஒட்டியும் மேலே சொல்லபட்ட பலன்கள் மாறி நடக்கும்.


0 Response to "கடகம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில..."

கருத்துரையிடுக

Powered by Blogger