மேஷ இராசி பற்றி
ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ரம் கூறும் கூற்று…
இந்துஜோதிடசாஸ்திரத்தில்ஜோதிடத்தின்முக்கிய அடிப்படை
கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட
பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான
விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து
தரபட்டுள்ளது.
இரத்தம்சிவப்புநிறத்தை கொண்டது மேஷம் இராசி
முக்கியத்துவம்வாய்ந்த தோற்றம் பெரிய உடலமைப்பு காட்டும் இராசி
நான்குகால் இராசி பின்இரவில்வலுவாகஇருக்கும் இராசி
தைரியத்தைகுறிக்கும் இராசி கிழக்கு திசையை சார்ந்த இராசி
கடகம்& மேஷம், கடகம்vs மேஷம்- இராசிக்குள்
ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் கடகம்
இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மேஷம் இராசியாக இருந்தால்
அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல்
பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
கடகம்& மேஷம், கடகம்vs மேஷம் -
இந்தமேஷகடகராசிக்காரகளுக்குமிடையேஒருநட்போ அல்லது காதலோ அமையும்போதுஅந்த கூட்டு சற்று எதிர் தன்மை கொண்ட அமைப்பு, மேஷம்சற்று செருக்கு மற்றும்அவசரத்தன்மைஉள்ள ராசி கடகம்
பாசத்தன்மையும் மற்றும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் ராசி. மேஷராசி துடுக்கானா வேகமான நடத்தை கடக இராசி
சிலசமயங்களுக்கு உணர்ச்சி கொந்தளிப்புக்கு விட்டுச்செல்லும். கடக இராசிக்காரர்கள் பொதுவாகவணிகநடவடிக்கைகள்மற்றும்உறவுகளுக்குள்ளான
முடிவுகளை கொஞ்சம் அதிக நேரம்எடுத்து தான் முடிவுகளை
எடுப்பார்கள் ஆனால் மேஷமோ சீக்கிர ஆலோசனை உடனடி முடிவுகளை எடுப்பார்கள்.
நன்றாக அமைந்தால் மேஷத்தின் வெளிப்படையான உறவுகளின் அணுகுமுறைகள் கடக
இராசிக்கு ஒத்துபோக கூடியதாகவும் கடகத்தின் அனைவரையும் அரவணைத்து செல்லும்
அணுகுமுறைகள் மேஷ இராசிக்கு பயன் தரக் கூடியதாகவும் அமையும். கடக ராசியிடம் மனநிலைஊசலாட்டம்அதிகமாக இருக்கும் அந்த சமயம் மேஷத்தின்அதிகஆக்கிரமிப்புதன்மையும் வெளிபட்டால் சிலசமயங்களில்பிரச்சனைகள்ஏற்படலாம்இதனால்இரண்டுராசிகளும்தங்கள்நண்பர்கள்எண்ணங்களைஅதிக நேரம் பொறுமையாக கேட்கவேண்டும் ஒவ்வொருவரின்
பார்க்கும் நோக்கங்களையும் கேட்டு பகிரவேண்டும்.
மேஷம்ராசியின்சவால்களை எதிர்கொள்ளும் திறனும் பாதுகாப்பு உணர்வும் கடக ராசியின் அரவணைப்பு
உணர்வு மற்றும்வீட்டு அக்கறை இந்த இரண்டும் நல்லவிதமாக சேர ஒருவரை ஒருவர் அவர்களைபாதுகாப்பாகவும்நன்குகவனித்துகொள்ள உதவும் இதன் மூலமாக சந்தோஷம், விருந்தோம்பும்பண்புமற்றும்உறவுப்பாதுகாப்பு ஏற்படும். பொதுவாக கடக இராசிக்கு கற்பனைத் திறன்கள் அதிகம்
அதனால் மேஷ ராசிக்காரர்கள் அது உபயோகம் மற்றதாக இருந்தாலும் அதை அன்போடு அணுக
வேண்டும். மேஷ ராசிக்காரர்கள் கடகத்தை போல் அதிக
உணர்ச்சிவசப்படுபவர்கள் இல்லை ஆனால் ஏதேனும் ஒரு உணர்ச்சி ஆழமாக
வெளிபடுத்தக்கூடியவர்கள் அதனால் அவர்களிடம் கடக இராசிக்காரர் மென்மையாக பக்குவமான
சமயங்களிலில் தான் உணர்வசமான கருத்துகளை பேச வேண்டும்.
கடகம் நண்டுஇராசி என்பதால் ஆழமான உள்ளுணர்வு உள்ளவர்கள் அதனால்அவர்களின்ஆலோசனைகள்மேஷத்திற்க்குதிட்டமிடல்பற்றாக்குறையால் வரும் சிறுதவறுகள்தடுத்துமோசமானமுடிவுகளைதவிர்க்கஉதவும். மேஷத்திற்கு 4 ஆம் கேந்திர ராசியாக கடகமும் கடகத்திற்கு
மேஷம் 10 ஆம் கேந்திர ராசியாக இருப்பதால் இரண்டும்
நல்லவிதமாக சேர இருவருக்குள்ளும் மதிப்பு மற்றும் மரியாதை தரக்கூடிய பயனுள்ள உறவாக
அமையும், இது ஆண் பெண் உறவானால் அது ஒத்த கொடுத்து
வாங்கல் உள்ள பாச உணர்வான பிணைப்பாக இருக்கும்.
மேஷம் இராசிநாதன் செவ்வாய்மற்றும்கடகம்சந்திரன் இராசிநாதன் ஆகும்இந்தகிரகங்களில் செவ்வாய் அதீதஆர்வமுடையகுணம்மற்றும்செயல்திறனையும்சந்திரன்பெண்மைசக்தி மற்றும் தேடும்திறன்குறிக்கின்றன, செவ்வாயும் சந்திரனும் நட்பு கிரகங்கள் இதனால் இருவருக்கும்
கற்றுக்கொள்ளும் ஆர்வம், உணர்ச்சிப்பசப்பானபழக்கம், வலுவானமுயற்சிகளை செய்யும் நம்பிக்கை ஆகியவையின் கலவையாக
இருக்கும், பாதிக்க பட்டால் பாராட்டுகிற தன்மை போய் உணர்ச்சிப் போராட்டம் அதிகம் இருக்கும்.
மேஷம்ஒருநெருப்பு இராசியாகும் மற்றும்கடகம்ஒருநீர்த்தன்மை கொண்ட இராசியாகும்
அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இது ஒரு வித்தியாசமான
சிறந்த குணக் கலப்பாகும் அதாவது கடகம் மேஷத்திற்குமெதுவாகமற்றும்மென்மையானஇருக்ககற்றுக்கொடுக்கும் மாறாக மேஷம் கடகத்திற்கு வாழ்க்கையை பயனுள்ள வகையில் அணுக கற்றுக்கொடுக்கும், அதே நேரத்தில்மிகவும் அதிகமாக பழகும்
போது நெருப்பும் நீரும் அதிமாக சேர கொதிப்பு ஏற்படுவதை போல ஒரு கொந்தளிப்பான உறவு
அணுகமுறைகளை ஏற்படுத்தும் அதனால் இருவருக்கும் சமமான பழக்கமே உதவும்.
கடகம்
மேஷம் இரண்டும் சர இராசியாகும் அதனால் நண்பர்களும் அல்லது காதலர்களும் அடிக்கடி பயணகங்கள், சந்திப்புகள் செய்யக்கூடியவர்கள், தளர்ந்து விடாமல் பொறுப்பாக சவாலைசந்திப்பார். பாதிக்க பட்டால் ஆதிக்க மனபான்மைகள்,பொறுப்புக்களைமறைக்கும் தன்மை, உணர்ச்சிவயப்பட்ட
நிலைகள் காரணமாக உறவுகள் பிரிவில் முடிய வாய்ப்பாகும்.
மேஷ லக்னம் பற்றிய அடிப்படை :- மேஷம் சர லக்னம் மேஷம் ஒற்றை பட ராசி லக்னம் மேஷம் நெருப்பு லக்னம் மேஷம் ஆண் லக்னம் மேஷம் தர்ம லக்னம் மேஷம் பித்த லக்னம் மேஷம் கிழக்கு திசை லக்னம் மேஷம் க்ஷத்ரிய லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் ஆவார் அவரே மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார் இருந்தாலும் லக்னத்திற்கு அதிபதியாவதால் செவ்வாய் மேஷ லக்ன ஜாதகருக்கு 60% சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழவில் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே செவ்வாய் தசையில் முதலில் 60% நன்மையான பலன்களும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களையும் தரவல்லார், செவ்வாய் மேஷ லக்ன ஜாதகருக்கு முழுமையான பாவரல்ல.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆவார் அவரே ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் அதிபதியாவர் எனவே மேஷ லக்ன ஜாதகருக்கு இவரின் நிலையை வைத்தே குடும்ப, மண வாழ்க்கையின் மகிழ்ச்சி வெற்றியை காண முடியும், சுக்கிரன் மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே எனவே இவர் மேஷ லக்ன ஜாதகருக்கு நடுநிலையானவர் எனவே சுக்கிரன் இருக்கும் நிலைகளை வைத்து நன்மை தீமைகளை மாறிமாறி தருவார். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு - தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கும், ஆறாம் வீடு - ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கும் அதிபதி புதன் ஆவர் எனவே புதன் மேஷ லக்ன ஜாதகருக்கு 85% பாவரே, அதாவது 85% தீமையான பலன்களையும் தரவல்லார், மேஷ லக்ன ஜாதகருக்கு இவர் பாவர்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நான்காம் வீடு - சுக, வண்டி, வீடு ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன் ஆவார் கேந்திராதிபதி தோஷம் அடையாதவரை மேஷ லக்ன ஜாதகருக்கு சந்திரன் சுப தன்மையுடைய சுபர் நன்மையே செய்வார்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் திரிகோண ஸ்தானாதிபதி ஆவதால் மேஷ லக்ன ஜாதகருக்கு நல்ல யோகமான பலன்களை தரவல்ல யோகர் ஆவர்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்பதாம் வீடு - தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பன்னிரண்டாம் வீடு - நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார் ஒரு திரிகோண ஸ்தானாதிபதி ஆனாலும் அவரே பாதி மறைவு ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார் இருந்தாலும் 9 ஆம் திரிகோண ஸ்தானாதிபதி அதிபதியாவதால் சுப தன்மையுடைய சுபர், 75% நன்மையான பலன்களும் 25% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு
தசையில் முதலில் 75% நன்மையான பலன்களும் பிற்பாதியில் 25% தீமையான
பலன்களையும் தரவல்லார்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாவது வீடு - கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும்,
பதினோராம் வீடு - லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார் மேலும் மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பாதகங்களை ஏற்படுத்திய பிறகு மேஷ லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் தரவல்லார் எனவே சுப தன்மையுடைய சுபரே.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது