ரிஷப இராசி பற்றி ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ரம் கூறும்
கூற்று…
இந்துஜோதிடசாஸ்திரத்தில்ஜோதிடத்தின்முக்கிய அடிப்படை
கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட
பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான
விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து
தரபட்டுள்ளது.
வெண் வெள்ளி வெள்ளை நிறத்தை கொண்டது ரிஷப இராசி
நீளமானநான்குகால்கொண்ட இராசி
இது இரவில் வலிமையாகி தெற்கு திசையை சார்ந்த இராசி
இதுகிராமங்களை காரகத்துவமாக கொண்ட இராசி
இதுவணிகர்களைபிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இது
பூமி பூதத்க்குரிய இராசி பின்னாலிருந்துஉயர்ந்துஉயரும் இராசி
கடகம்& ரிஷபம், கடகம்vs ரிஷபம் - இராசிக்குள்
ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் கடகம்
இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ ரிஷபம் இராசியாக இருந்தால்
அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல்
பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் நான்காம் வீடு -சுக, வண்டி, வீடுஸ்தானம், தாய்ஸ்தானத்திற்குஅதிபதிசூரியன்ஆவார் இவர் ராஜகிரகம் அதனால் சுக போக, வண்டி, வீடு ஆகிய வசதி வாய்ப்புகள்
அமைந்தால் சிறப்பாகவே அமையும், அகங்காரத்தன்மை
ஏற்படுத்தக்கூடிய கிரகம் சூரியன் என்பதால் அதிகாரம் தலைக்கு ஏறலாம், இருந்தாலும் ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு80% நன்மையானபலன்களும்20% தீமையானபலன்களையும்தரவல்லார்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்குகேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் ஏழாம்
வீடு - களத்திரஸ்தானம், வணிகஸ்தானத்திற்கும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் பன்னிரண்டாம்வீடு -நட்டஸ்தானம், மோட்சஸ்தானத்திற்கும்அதிபதி செவ்வாய் ஆவார், ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு இல்லற சுகத்திற்கு முக்கிய
காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் எனவே வலுப்பெறாவிட்டாலும் கெட்டுவிடக்கூடாது இவர் 60% சுபதன்மையுடையசுபர்அதாவதுஜாதகரின்வாழவில்60% நன்மையானபலன்களும்40% தீமையானபலன்களையும்தரவல்லார்,அதுவேதிருமணமணமகன், மணப்பெண்தேடும் காலங்களில் செவ்வாய்திசை புத்தி வந்தால் திருமணம் கைகூடும்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என
அழைக்கபடும் ஆயுள்ஸ்தானம், மர்மஸ்தானம்,துரதிர்ஷ்டஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும், பதினோராம்வீடு -லாபஸ்தானம், சமூகஸ்தானத்திற்கும்அதிபதிகுருபகவான்ஆவார், ஸ்திரலக்னம்எனவர்ணிக்கப்படகூடியரிஷபலக்னத்திற்கு3,8 ஆம்வீடுகள்மாரகஸ்தானம்ஆகும் அதனால் குரு மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதனால் ரிஷபலக்ன
ஜாதகருக்கு 85%
பாவரே,அதாவது85% தீமையானபலன்களையும்தரவல்லார், ரிஷபலக்ன
ஜாதகருக்கு இவர் பாவர்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு -தர்மஸ்தானம், பாக்யஸ்தானம், தந்தைஸ்தானத்திற்கும், பத்தாவதுவீடு- கர்ம, காரிய, ராஜ்யஸ்தானத்திற்கும்அதிபதிசனிபகவான்ஆவார்மேலும்ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி
தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷபலக்னாதிபதி
சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர், அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே
தொழில் வெற்றி,
புகழ், அதிர்ஷ்டங்கள்,முன்னேற்றத்தையும் தரவல்லார்
எனவே சுப தன்மையுடைய சுபரே.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது