கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், Chandran Kanni in Tamil, Moon Virgo in Tamil, ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால் வரும் பொது பலன்கள்..
ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால் -
இயற்கையாக இந்த கன்னி ராசியில்இருக்கும் சந்திரனுக்கு நட்பு பலத்தை ஏற்படுத்தும் ராசியாக கன்னி இராசி இருக்கிறது
மேலும் புதனுக்குரிய ராசியான கன்னியில் இருக்கும் சந்திரனால் புதனுக்குரிய பல
பண்புகள் இந்த ராசிக்காரருக்கும் சில இருக்கும் அதாவது ஜாதகத்தில்
கன்னியில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் புதனுக்குரிய பல பண்புகளான இளமையானஎண்ணம், பொதுமக்களின் செல்லம், செல்வாக்கு, சூழலுக்குதக்க மாற்றம், பல்வேறு
பட்ட விஷயங்களிலும் ஈடுபாடு, நுண்ணறிவு, புத்திசாலிதனம், விழிப்புணர்வு. புதிய உணர்வுக்கு, அறிவுக்கு முக்கியத்துவம் தருவது.புரிந்துகொள்ளும் திறன், பேச்சாற்றல்இது போன்ற புதனுக்குரிய பல பண்புகள் இவர்கள் பெற்றிருக்கலாம். அது
போக சந்திரன் கன்னியில் இருக்க பிறந்தவர்கள் சாந்தமான சுபாவத்துடனும்
மற்றும் பாசம் கலந்த நடத்தையாலும் மற்றவர்களுடன் எளிதில் கலந்து பழக கூடியவர்கள்....
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள்...
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்
பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - பூரம்
பூரம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் -
சுக்கிரன்
பூரம் நட்சத்திரத்தின் அதிதேவதை- பாகாதேவதா
பூரம் நட்சத்திரத்தின் யோனி - பெண் எலி
பூரம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம்
பூரம் நட்சத்திரத்தின் பூதம் - நிலம், நீர்
பூரம் நட்சத்திரத்தின்இராசி இருப்பு - சிம்மம் ராசியின்
விண்மீன் மண்டலத்தில் சிங்கத்தின் மார்பு உடல் பகுதியை போல் காணப்படுகிற இரண்டு
பெரிய நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
பூரம் நட்சத்திரஇராசி சக்கரத்தில் இருப்பு பாகை - சிம்ம ராசியில் பாகை 133:20:00 முதல்
146:40:00 கலை வரை இருப்பாக உள்ளது.
பூரம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - சூரியன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு பூரம் நட்சத்திரம் ஜென்ம
நட்சத்திரமாகும்.
ஜென்ம இராசி சிம்ம இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும்
உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை
பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
இராசி சக்கரத்தில் பதினொன்றாவது நட்சத்திரமாக இருக்கும் பூரம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிபத்ய நட்சத்திரமான இது படைபாற்றல்
நடசத்திரமாகும் எனவே இந்த நட்சத்திரத்தில் சந்திரனிருக்க
பிறந்தவர்கள் நுண்ணறிவு திறன்கள் சில இருக்கலாம்
முக்கியமாக கலையறிவான விஷயங்களில் மேலும் மற்றவரிடம் அன்பு காட்டுவது மற்றும்
பிரியமாக பேசுவது போன்றவற்றில் மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.... மீதி காணொளியில் உள்ளது
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், மகம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தியான அடியார்கள் & மகான்கள் -
நட்சத்திரம் - மகம்
மகம் நட்சத்திர ஆதிபத்ய
கிரகம் - கேது
மகம் நட்சத்திர
அதிதேவதை- பித்ருக்கள்(தெய்வீகபிதாக்கள்)
மகம் நட்சத்திர யோனி - ஆண் எலி
மகம் நட்சத்திர கணம் - ராக்ஷச கணம்
மகம் நட்சத்திர பூதம் - நெருப்பு (தீ)
மகம் நட்சத்திரத்தின்இராசி இருப்பு - சிம்மம் ராசியின்
விண்மீன் மண்டலத்தில் நீண்டு வளைந்த ஆறு நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த
நட்சத்திர மண்டலம் இருக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்தில் சூரியனை போல நூறு
மடங்கு அதிகமாக ஒளிரும் ஒரு நட்சத்திரமும் உள்ளது அதாவது one of the brightest
stars in the night sky பெயர் ரெகுலஸ் லியோனிஸ் (ரோமானிய பெயர்) சூரியனிடம்
இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளது.
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - சிம்ம ராசியில் பாகை 120:00:00 முதல்
133:20:00 கலை வரை இருப்பாக உள்ளது.
மகம் நட்சத்திரத்தின் இராசி
நாதன் - சூரியன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில்
பிறந்தவர்களுக்கு ஆயில்யம்
நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம
இராசி கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும்
உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை
பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
இராசி சக்கரத்தில் பத்தாவது நட்சத்திரமாக இருக்கும் மகம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் தலைமுறை
தலைமுறையாக வரக்கூடிய முன்னோர்களின் பண்புகள் பல பெற்றிருப்பார்கள், தலைமைக்குரிய
பண்புகள் பல பெற்றிருக்கலாம், மரபு மற்றும் கலாச்சாரத்தை பராமரிக்க கூடிய குணங்கள்
பெற்றிருக்கலாம். குடும்ப பெருமை, தற்பெருமை மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்கு
அதிக முக்கியத்துவம் தரலாம். தன்னை விரும்புபவர்களிடமும் மற்றும் தன்னால்
விரும்பபடுபவர்களிடமும் தாராளமாக அல்லது அர்ப்பணிப்பாக நடந்து கொள்ளக்
கூடியவர்களாக இருப்பார்கள் அதாவது ஆங்கிலத்தில் சொல்வதானால் Being generous or
dedicated to those who love him and who he likes too. பாரம்பரியமாகவிழா மற்றும் சடங்குகளுக்கு...
நீங்கள் சூரிய வம்சமா அல்லது சந்திர வம்சமா
அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா - ஜோதிட துணுக்குகள் பகுத..
எப்போது
இரண்டு கோஷ்டிகள் இருந்து கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக்
கொண்டிருக்கிறோம் அதாவது அரசியல், தொழில், நடிப்பு, நிர்வாகம், சட்டம் போன்ற
பலவேறு துறைகளில் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் அது போல நவகிரகங்களையும் 12
இராசிகளையும் இரண்டு கோஷ்டிகள் ஆக்கி அந்த இரண்டு கோஷ்டிகளின் பலம் பலவீனத்தை
பார்க்க பயன்படுத்துவது தான் ஹோரை சக்கரம். சூரிய கோஷ்டிகளின் பலம் மற்றும் சந்திர
கோஷ்டிகளின் பலம் ஆக இந்த இரு கோஷ்டிகளின் பலத்தை காட்டும் வர்க்க சக்கரமாக உள்ளது
இந்த ஹோரை சக்கரம் (ஹோரா சக்கரம்). அதென்ன கோஷ்டிகள் சற்று விளக்கமாக சொன்னால்
நவகிரகங்களில் சூரியனின் தலைமையில் ஒரு கோஷ்டி, சந்திரனின் தலைமையில் ஒரு கோஷ்டி
என்று பிரித்து பார்ப்பது. அதாவது சூரியனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் செவ்வாய்,
குரு, கேது கிரகங்கள் அணி நிற்கும், சந்திரனின் தலைமையில் உள்ள கோஷ்டியில் சனி,
சுக்கிரன், ராகு கிரகங்கள் அணி நிற்கும் இதில் புதனை நடுநிலையானவர் என்று சொல்லும்
வழக்கமும் உண்டு.
சரி
இவ்வாறு எதற்க்காக நாம் கோஷ்டி ஆக்கி பார்க்க வேண்டும் அதாவது ஒவ்வொரு உயிர்களும்
இரண்டு தன்மையால் ஆனது சூரிய தன்மை மற்றும் சந்திர தன்மை இதில் சூரிய தன்மை ஜீவனை
பிரதிபலிக்கும் சந்திர தன்மை மனதை பிரதிபலிக்கும், சூரிய தன்மை நான் என்ற விஷயத்தை
பிரதிபலிக்கும் சந்திர தன்மை எனது என்ற விஷயத்தை பிரதிபலிக்கும், சூரிய தன்மை
அறிவை பிரதிபலிக்கும் சந்திர தன்மை அன்பை பிரதிபலிக்கும் இது இந்திய ஆன்மீக
தத்துவம், சார் இதெல்லாம் எனக்கு புரியாது சார் நேரா விஷயத்துக்கு வாங்க சார்
என்று கேட்பவர்களுக்காக நேராக விஷத்திறக்கே வருகிறேன் அதாவது
சூரிய
ஹோரை சூரிய கோஷ்டிகள் என்பவர்கள் சூரிய வம்சம் சூரிய அம்சம் நிறைந்தவர்கள் அதாவது தைரியம்,
போராட்ட குணம், கூட்டு ஆற்றல், கோபம், அசட்டு துணிவு, ஆளுமை, வழிநடத்தல், சுய
தனித்தன்மை மற்றும் மரியாதை, ரோஷம் இது போன்ற வகையினால் ஆன குண அம்சங்கள்
நிறைந்தவர்கள்
சந்திர
ஹோரை சந்திர கோஷ்டிகள் என்பவர்கள் சந்திர வம்சம் சந்திர அம்சம் நிறைந்தவர்கள்
அதாவது கலை, அழகுணர்ச்சி, கற்பனை, சுவை, உள்ளுணர்வு, உணவு நாட்டம், சாந்தம்,
ஆதரவு, அரவணைப்பு இது போன்ற வகையினால் ஆன குண அம்சங்கள் நிறைந்தவர்கள்
இதெல்லாம் சரி புரியுதுங்க நான் சூரிய வம்சமா அல்லது சந்திர
வம்சமா அதாவது சூரிய அம்சமா அல்லது சந்திர அம்சமா சொல்லுங்க என்று உங்களுக்கு
கேட்க தோன்றலாம் நீங்கள் உங்களுடை விரிவான ஜாதக புத்தகத்தை எடுத்துக் கொண்டீர்கள்
என்றால் அதில் ஹோரை சக்கரம் D-2 Chart என்று சுருக்கமாக சிலர் அழைக்கிறார்கள்
அதில் ஒவ்வொரு கிரகங்களும் எந்த எந்த அதாவது
சூரிய ஹோரையில் உள்ளதா அல்லது சந்திர ஹோரையில் உள்ளதா, சூரிய அம்சத்தில்
உள்ளதா அல்லது சந்திர அம்சத்தில் உள்ளதா என்று விளக்கி அந்த ஹோரா வர்க்க
சக்கரத்தில் கொடுத்து இருப்பார்கள் அதில் சிம்ம ராசி என்பது சூரிய ஹோரையை
பிரதிபலிக்கும் மற்றும் கடக ராசி சூரிய ஹோரையை பிரதிபலிக்கும்.
உங்களது
லக்னமும் மற்றும் லக்னாதிபதியான கிரகமும் மற்றும் சூரியன், சந்திரன் , சூரியன்
அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி கிரகம் மற்றும் சந்திரன் அமர்ந்திருக்கும்
ராசிக்கு அதிபதி கிரகம் ஆக மொத்தம் 5 கிரகங்கள் மற்றும் லக்னம் அமர்ந்திருக்கும்
சேர்த்து 6 இவர்கள் அதிகபட்சமாக எந்த அம்சத்தில் அதாவது எந்த ஹோரையில் அதிகமாக
இருக்கிறார்களோ அதை பொருத்து ஒருவர் சூரிய வம்சம் சூரிய அம்சம் நிறைந்தவரா அல்லது
சந்திர வம்சம் சந்திர அம்சம் நிறைந்தவரா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
கிரகங்கள் சூரிய ஹோரையில் அதிகமாக அமைக்க பெற்றவர்கள் நான் மேலே சொன்ன சூரிய குண
அம்சம் நிறைந்தவர்கள் அதே போல கிரகங்கள் சந்திர ஹோரையில் அதிகமாக அமைக்க
பெற்றவர்கள் நான் மேலே சொன்ன சந்திர குண அம்சம் நிறைந்தவர்கள்
லக்னம்
சூரியன்
ஹோரை
சந்திரன்
சூரியன்
ஹோரை
சூரியன்
சூரியன்
ஹோரை
புதன்
சந்திரன்
ஹோரை
சுக்கிரன்
சந்திரன்
ஹோரை
செவ்வாய்
சந்திரன்
ஹோரை
வியாழன்
சந்திரன்
ஹோரை
சனி
சூரியன்
ஹோரை
ராகு
சூரியன்
ஹோரை
கேது
சூரியன்
ஹோரை
இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமென்றால் இதோ ஒரு உதாரணம் மேலே
இருப்பது எனது ஹோரை சக்கரத்தில் கிரங்களின் நிலை இதில் லக்னம் இருப்பது சூரிய ஹோரையில்,
லக்னாதிபதி சனி இருப்பது சூரிய ஹோரையில், சூரியன் இருப்பது சூரிய ஹோரையில்,
சந்திரன் இருப்பது சூரிய ஹோரையில், சூரியன் அமர்ந்திருக்கும் ராசிக்கு அதிபதி
கிரகம் சந்திரன் இருப்பது சூரிய ஹோரையில் மற்றும் சந்திரன் அமர்ந்திருக்கும்
ராசிக்கு அதிபதி கிரகம் சூரியன் இருப்பது சூரிய ஹோரையில் ஆக மொத்தம் 5 கிரகங்கள்
மற்றும் லக்னம் உள்பட இருப்பதுசூரிய
ஹோரையில் எனவே எமக்கு சூரிய வம்சம் சூரிய அம்சம் சற்று அதிகம் உள்ளவராக நான்
இருப்பேன் இவ்வாறாக ஒவ்வொரும் தங்களது அம்சத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆயில்யம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - ஆயில்யம்
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் -
புதன்
நட்சத்திர அதிதேவதை- நாகர்கள்
நட்சத்திர யோனி - ஆண் பூனை
நட்சத்திர கணம் - ராக்ஷச கணம்
நட்சத்திர பூதம் - நீர், காற்று
நட்சத்திரத்தின்இராசி இருப்பு - கடகம் ராசியின் விண்மீன் மண்டலத்தில் ஆறு நட்சத்திர
கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கடக ராசியில் பாகை 106:40:00 முதல்
120:00:00 கலை வரை இருப்பாக உள்ளது.
இராசி நாதன் - சந்திரன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில்
பிறந்தவர்களுக்கு ஆயில்யம்
நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம
இராசி கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும்
உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை
பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
இராசி சக்கரத்தில் ஒன்பதாவது நட்சத்திரமாக இருக்கும் ஆயில்யம்
நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் செழுமையாக பேசும் சாமர்த்தியசாலிகள் மற்றும் விரோதிகளையும் நட்பு
பாராட்ட வைக்கும் தன்மை கொண்டவர்கள் என்று ஜாதக அலங்காரம் என்று நூல் கூறிகிறது.
எதிர்பாராத தாக்குதல் அல்லது எதிர்பாராத குணங்கள் சில திடீரென வரலாம். தன்னைவிட
வலிமையானவர்களானாலும் தனக்கு இருக்கும் சக்தியை கொண்டு எவருடனும் போட்டியிட
பயபடமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலர் ஆழ்ந்த பார்வை அல்லது ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யும் திறன்
பெற்றிருப்பார்கள். கண், நெற்றி, புருவம் இம் மூன்றில் இரண்டு மற்றவர்களை
காட்டிலும் தனித்துவமாக இருக்கும். மற்றவர்களை ஏளனம் செய்வதிலோ அல்லது கிண்டல்
செய்வதிலோ ஆர்வமானவர்களாக இருக்கலாம்....
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது