கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கும்பம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கும்பம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -

கும்ப ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 
நல்ல பலன்கள் -
சந்திரன் கும்ப இராசியில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை கும்ப இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 6 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 5 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 12 ஆம்  இராசியில் இருந்த கேது 11 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரக்கூடிய நல்ல பலன்கள் என்று பார்க்கும் போது திருமணம் மற்றும் இல்லற இன்பங்கள் அனுபவிக்க இருந்த தடைகள் இனி மெல்ல நீங்க வாய்ப்பு உண்டாக்குகிறது. பங்குசந்தை மற்றும் கொடுக்கல் வாங்கல் தொழிலில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நல்ல காலமாக இது இருக்கும் அதுவே நல்ல திசாபுத்தி உள்ளவர்களுக்கு அதிகமாக லாபத்தை தரவாய்ப்பு உண்டாகும். சங்கடத்தை கொடுத்து வந்த கடன்கள் அதன் பாரம் குறைய ஆரம்பிக்கும்.  பங்காளி பகைவர்களால் ஏற்பட்ட துன்பம் இனி மெல்ல நீங்க வாய்ப்பு உண்டாக்குகிறது. வீண் வம்பை இழந்தவர்கள் இனி விலகி போவார்கள். ஏதேனும் நமது நன்மையோ அல்லது பொருட்களையோ களவாடப்பட்டிருந்தால் அது திரும்பி கிடைக்க வாய்ப்பு உண்டாக்குகிற காலம் இது.

இந்த இராசிகாரருக்கு ஏற்பட்ட வியாதி பாதிப்புகள் மெல்ல சிகிச்சை அடைய வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டிற்கு போக காத்திருந்தவர்களுக்கு அந்த காலம் கனிய ஆரம்பிக்கும். இல்லங்களில் சுப விழாகளுக்கு ஏற்பட்டிருந்த தடைகளும் இனி மெல்ல நீங்க வாய்ப்பு உண்டாக்குகிறது. இரகசியமாக மனத்தில் கவலையை உண்டாக்கி கொண்டிருந்த விஷயங்களுக்கு ஆறுதல் உண்டாகும். காதல் விவகாரங்கள் வெளியில் தெரியும் அதனால் அவரவர் ஜாதகத்தை பொறுத்து அதற்கு நன்மையோ தீமையோ விளையும். விரைவாக முடிக்க வேண்டிய பணிகளை அதே போல விரைவாக முடித்து கொடுக்க வேண்டிய உழைப்பு அதில் வேக ஓட்டம் ஏற்படும். கேது 11 ஆம் தனுசு இராசிக்கு இப்போது வந்து சேர்வதால் பூர்வபுண்ணிய பாரம்பரிய பலங்களினால் தொழில் செய்பவர்களுக்கு பொறுப்புகளில் உயர்வு அல்லது உயர்ந்த கடமைகள் வரும். மேலும் ஆசிரியர் அல்லது பயிற்றுவிப்பாளர், ஆலோசகர்கள். நீதித்துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதை நோக்கமாகக் கொண்டிருந்தால் அதில் தங்களுக்கு சிறப்பான தனித்த அடையாளம் அங்கீகாரம் தொழிலில் கிடைக்கலாம் நான் மேலே சொன்னது பூர்வபுண்ணியமான கேதுவை ஜாதகத்தில் பெற்றிருப்பவர்களுக்கு பொருந்தும் அதுவே கேது பலவீனமாகியிருந்தால் தங்களுக்கு நீதி நியாயம் கிடைக்க தாமதமாகலாம் அல்லது தடைபடலாம்.

இந்த இராசி விவசாயிகளுக்கு வந்த அனாவசியமான செலவுகள் இனி மெல்ல நீங்கும். கலை மற்றும் பொழுதுபோக்குத்துறைகளில் பணி செய்பவர்களுக்கு புதிய மேடை அல்லது வாய்ப்பு அமையும். இந்த இராசி மாணவர்களுக்கு இந்த காலங்களில் மொழி பயிற்சி அதுவும் முக்கியமாக பிறமொழி பயிற்சி எடுத்தால் அது நல்ல வளர்ச்சியை கொடுக்கும். கேது 11 ஆம் இராசிக்கு இப்போது வருவதால் ஆன்மீக புனித இடங்களுக்கு பயணம் அதனால் தானதர்ம புண்ணிய சேர்க்கை உண்டாகும் அதே போல ஆன்மீக புனித இடங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு மேன்மை உண்டாகலாம். நவீன தொழிலில் நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கு புதிய தொழில் நுட்ப வளர்ச்சி உண்டாகும். உங்களுடன் போட்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதில் இருந்து சற்று பின்வாங்கலாம். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியின் பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு கேதுவால் பெயர்ச்சியால் இந்த இராசிகாரர்களுக்கு அதாவது வயதானவர்களுக்கு தங்களுக்கு கிடைத்து வந்த வரவு பணம் சற்று குறைபடும். குழந்தை பாக்கியம் பெறுவதற்க்கான சமயத்தில் இருப்பவர்களுக்கு சற்று உணர்ச்சி துடிதுடிப்பான அல்லது கடுமையான சம்பவங்களை கடக்க வேண்டி வரும்.  செல்வாக்கிற்கு பங்கத்தை உண்டு பண்ணும் காரியங்கள் வர வாய்ப்பு உண்டு. 5 ஆம் இராசியில் ராகு வருவதால் மதுவிற்கு பழக்கபட்டவர்கள் இந்த காலங்களில் மேலும் எச்சரிக்கையாக இருக்க வைக்க வேண்டும் மது மோகத்தை ராகு தூண்டிவிடலாம். காதல் விவகாரங்கள் வெளியில் தெரியும் அதனால் அவரவர் ஜாதகத்தை பொறுத்து அதற்கு நன்மையோ தீமையோ விளையும். மற்றவர்களுக்கு உபதேசித்தால் உங்களின் குறையை தான் அவர்கள் சுட்டிகாட்டுவார்கள் அதனால் வீண் மன வேதனைதான். இராகு மிதுன இராசிக்கு 5 ஆம் இராசியாக வருவதால் நண்பர்கள் அல்லது வேலையில் உடன் பணியாற்றுபவர்கள் வேகமாகவும், விரைவாகவும், சுதந்திரமாகவும் தங்களிடம் பேசுவார்கள் ஆனால் நடவடிக்கையில் நிலையற்ற தன்மையை வெளிபடுத்துவார்கள் அல்லது உங்களின் புத்தி சலனத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

திசாபுத்திகள் சரியில்லாதவர்கள் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வைக்க வேண்டும். இளம் வயதில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்களால் சில ஊதாரித்தனமான அல்லது அவசியம் குறைந்த செலவுகள் அதிகம் வரலாம். வேடிக்கை விளையாட்டுகள் அதாவது முக்கியமாக செல்பேசியில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களால் தங்களின் வேலைத் திறன்களை கெடுத்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது. புதிதாக அமைந்த பணிச்சுமை அல்லது திட்டங்களின் மீது நம்பிக்கை முழுமையாக இல்லாத ஒரு உணர்வுகள் அடிக்கடி வந்து போகலாம்.

கேது 11 ஆம் இராசிக்கு இப்போது வருவதால் உங்களின் லாபத்திற்கு வெட்டு அல்லது வேட்டு வைக்க பார்பவர்களின் கை ஓங்க கூடிய காலம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வைக்க வேண்டும். Ketu now coming to 11 Rasi so that impact your normal incomes, it may either financial gains go down or profit and salary may cut off, so be attentive of your incomes. மதம் அல்லது விழாக்கள் தொடர்பான சடங்குகளால் செலவுகள் புதிதாக வரலாம். இராசிக்கு 5 ஆம் இராசியில் இராகு வருவதால் தேவையற்ற நண்பர்களை கண்டுகொண்டு அவர்களை விலக்கி வைக்க வேண்டிய காலம் இது. நீர் இராசியான உங்களுக்கு இராகுவும் நீர் இராசியிலேயே வருவதால் தண்ணீரால் பரவும் தொற்று நோய்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வைக்க வேண்டும். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியின் பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கும்பம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger