துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், துலா ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…


துலாம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,

ராசிு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்


இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.


துலாம் ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 
நல்ல பலன்கள் -
சந்திரன் துலாம் இராசியில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை துலா இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 10 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 9 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 4 ஆம்  இராசியில் இருந்த கேது 3 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் சர்ப்ப கிரகமான கேது உபஜெய இராசியான 3 க்கு வருவதால் ஒருசில விஷயங்களை தவிர மற்றவற்றில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பொதுவாக வீட்டை பற்றி இருந்த துக்கங்கள் மெல்ல விலகும். செய்து முடிக்க வேண்டிய காரியங்களை கோயில் தரிசனம் முடித்து செல்ல தன்னம்பிக்கை பெருகும் அதனால் மனதில் வைராக்கியம் பிறந்து வென்று காட்டக்கூடிய செயல்வீரம் உண்டாகும். திருமண வாய்ப்பு கூடி வரும். மாணவர்களுக்கு தடைபட்டிருந்த கல்வி வசதிகள் நீங்கும். சிலசில சலிப்பை தந்த உற்றார் பெற்றோருடன் இருந்த உறவு தளர்வு நீங்கி மேன்மை அடையும்.

வியாபாரத்தில் இருந்த தளர்வுகள் இனி மெல்ல நீங்கும். தொழிலில் இருந்த பகைவர்களின் கொட்டம் இனி நீங்கும் முடிவெடுக்க முடியால் வாட்டிய காரியங்கள் மற்றும் போட்டியாளர்கள் கொடுத்த தொல்லைகள் இனி மெல்ல நீங்கும். தொழிலில் செய்த முதலீட்டின் நிலையில் இருந்த தளர்வுகள் இனி மெல்ல நீங்கும். அலுவலகத்தில் இருந்த கண்ணியம் மற்றும் அதிகாரம் விவகாரங்களில் ஏற்பட்டிருந்த இக்கட்டுகள் நீங்கும் முக்கியமாக தேவையில்லதாதவர்கள் அல்லது அந்நியர்களின் தலையீடுகள் இனி விலகும். கேது 3 ஆம் இராசிக்கு வருவதால் அறிவாற்றல் வளரும் பணத்தின் முக்கியத்துவமும் புரியும் அதே நேரத்தில் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஆன்மிக பக்கவமும் கிடைக்கும்.

இராகு இந்த மிதுன இராசியில் இருந்து அது தங்களின் ராசிக்கு 9ஆம் ராசியாக ஆவதால் கூட்டாக பயிற்சி எடுத்தல் அல்லது நல்ல காரியத்திற்க்காக கூட்டு ஒத்துழைப்பாக செயல்படுதல் போன்ற விஷயங்கள் நடக்கலாம், மேலும் தங்களின் சாமர்த்தியத்தை அல்லது வித்தைகளை மற்றவருடன் சேர்ந்து வளர்த்துக் கொள்ள உதவலாம். அதே போல தொழிலில் அல்லது குடும்பத்தில் இரண்டு தரப்பனிருக்கும் இடையே ஒரு தூதுவர் போல் செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைக்கலாம் அதில் நீங்கள் உற்சாகமாக அதே நேரத்தில் நல்லவிதமாக செயல்பட நன்மைகள் விளையும். வீட்டை அல்லது நிலத்தை விற்றுக் கடனையோ அல்லது மற்ற செலவையோ சரிகட்ட நினைத்தவர்களுக்கு இருந்த இக்கட்டுகள் விலக ஆரம்பிக்கும். மற்றவர்களுக்கு ஆன்மீக சேவை செய்வதால் நல்ல புண்ணியங்கள் சம்பாதிக்கும். ஆண்டவன் மீது பாரத்தை போட்டு துணிவான நடவடிக்கைகள் எடுத்து துணிவே துணை வந்து அது தன்னை தானே காத்து அதில் வெற்றி கொள்ளும் காலம்.  அயல்நாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உண்டாகலாம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
தங்களின் இராசியில் இருந்து சர்ப்ப கிரகமான கேது உபஜெய இராசியான 3க்கு வருவதால் ஆன்மீக கிரகம் ஆவதால் ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அதை தவிர 9 ஆம் இராசிக்கு இராகு தற்போது வருவது அவ்வளவு நல்லதல்ல. ஆன்மீக பலம் குறைந்வர்களுக்கு சேற்று சகதியில் சிக்கிய கதிதான். ஆடம்பரமாக அல்லது ஊதாரித்தனமான செலவை செய்ய வைக்க காட்டாயம் வரும். வித்தை கற்றக் கொண்டவர்கள் தங்களுக்கு எதிராக மாறி நம்மை மிரட்டும் அல்லது சோதிக்கும் காலமாக மாறும். பங்காளிகள் மற்றம் தந்தை வழி உறவுகாரர்களிடம் ஏற்கெனவே பிரச்சினைகள் இருக்குமானால் இந்த காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக தம்பதியர்கள் அல்லது ஜோடிகள் தங்களுக்குள் இரண்டுவிதமான கருத்துகளை தவறாக யோசித்து கொண்டு அதை விவாதம் ஆக்குவதை தவிர்க்க வேண்டும்.

இந்த காலங்களில் பணம் புரட்டுதல் அவ்வளவு எளிதில் முடியாது அலக்கழித்தல் அதிகம் நடக்கும். தகுதியில்லாத இடத்தில் மூக்கை நுழைத்து சமரசப் பேச்சுக்கள் நடத்த கூடாது.  இந்த காலங்களில் சிறிதாக செய்யம் அதர்மமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கண்ணுக்கு தெரிந்திருந்தும் கையில் எடுக்க முடியாமல் மனம் வாடும் சூழ்நிலை தோன்றும். ஆசிரியர்களுக்கு மற்றும் கல்வியாளர்களுக்கு கெட்ட பெயரை தரும் வாய்ப்புகள் வரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தர்மம் தவறினால் கடைசியில் அவமானமும் மனச்சோர்வும் வாட்டும். கிசுகிசுகளுக்குள் சிக்கும் படி தூண்ட படுவீர்கள் வாயை அடக்கினால் நல்லது இல்லையேன்றால் வம்புகள் வாசலில் பொன்னான காலம் வீண். மற்றவர்களுக்கு ஆலோசனை தரும் தொழில் இருப்பவர்கள் தங்களின் தர்மநியாய நெறி தவறாமல் இருக்க வேண்டும்.

உடனே பலம் தரும் என்று கூறி ஏமாற்ற பார்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். ஏற்கெனவே தங்களின் குரு உபதேசத்த காரியங்களை விட்டு வேறு காரியங்களில் ஈடுபடுவதை முன்யோசனை செய்து தேவை கருதி கவனமாக ஈடுபட வேண்டும். பலன் கருதா பயணங்கள் ஆரம்பத்தில் ஏற்படும். அநாகரீக நடத்தை அல்லது இடங்களில் அதிக நேரத்தை செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். 9ஆம் இடம் வலுவாக இருந்தால் சென்ற பிறவியில் செய்த புண்ணியம் வந்த பாவத்தில் இருந்து நம்மை காப்பாற்றும். முக்கியமாக இந்த காலத்தில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வது பெரும் புண்ணியத்தை தேடித்தரும் அவர்களின் நன்றியுணர்வால் நமக்கு நல்ல சூழ்நிலைகள் உருவாகும். குரு துரோகம் செய்தவர்களுக்கு அதற்கான  தண்டனைக் காலம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், துலா ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்… "

கருத்துரையிடுக

Powered by Blogger