மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மகர ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மகர ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.


இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம்

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

மகர ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் -
நல்ல பலன்கள் -
சந்திரன் மகர இராசியில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை மகரம் இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 7 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 6 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 1 ஆம்  இராசியில் இருந்த கேது 12 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் திருமண பந்தத்திற்கு அல்லது இல்லற பந்தத்திற்கு உண்டாகியிருந்த அலுப்பு சலிப்பு ஆக நகர்ந்து கொண்டிருந்த சில காலங்கள் இனி நீங்கும் இதை ஆங்கிலத்தில் சொல்லவதானால் So far happen on some boredom or fatigue occasions of marital life or marital proposals, In coming times that reduce or remove for your life. கணவருக்கு அல்லது மனைவியுடன் தொடர்பில் இருந்த தர்மசங்கடங்கள் சற்று மெல்ல தீர்வு உண்டாக்கும் காலம் வரும். வேலை அல்லது வியாபாரத்தில் இருந்த சட்ட விவகாரங்கள் தொல்லை தீர வாய்ப்பு உண்டாகும். இரு பக்கங்களிலும் இருந்த வந்த கேள்விகளும் அது உண்டாக்கிய சர்ச்சைகளும் மெல்ல குறையும். வியாபாரத்தில் பொதுவாக உங்கள் விரோதிகளின் கொட்டம் அடங்கும். அரசியல் ஆளுமை குறைந்திருந்த காலங்கள் இனி மெல்ல மாறும்.

நண்பர்களுடன் இருந்த பிணக்குகள் குறையும். வேலை வாய்ப்பில் இருந்த சுணக்கம் இனி நீங்கும். கேது 12 ஆம் இராசிக்கு வருவதால் தெய்வத்தின் மீது உயர்வான நம்பிக்கை பிறக்கும். மனசாட்சிக்கு பயப்படும் அல்லது மனசாட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் ஆனமீக உதவிகள் கிடைக்கும். அதுவும் தனுசு ராசிக்கு வருவதால் ஒரு நோக்கத்தை அல்லது ஒரு கடமையை நிறைவேற்ற வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் வைப்பீர்கள் அந்த பிரார்த்தனைக்கு உண்டான தெய்வ அருள் தங்களுக்கு கிடைத்தால் குழப்பிக் கொண்டிருக்க கூடிய விஷயங்களை பகுத்துணர்ந்து பார்க்கும் தெளிவு உங்களுக்கு உண்டாகும். உடல்வாகு உள் பாகங்களும் தலைப்பகுதிக்கும் இருந்து வந்த சோம்பல் தன்மை மெல்ல விலகும். பொதுவாக மழையின்மையால் விவசாயத்தில் ஏற்படுத்திய பெரும் சேதங்கள் இனி இந்த இராசிகாரர்களுக்கு மெல்ல விலகும். இனி வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகளை நன்கு கலந்து அனுபவிக்கும் வகையில் அமையும். ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் வரும் காலமாக இருக்கும்.

இராகு தற்போது தங்களின் இராசிக்கு உபஜெய ஸ்தானமான 6 ஆம் இராசியில் வருவதால் குடுபத்தின் ஒற்றுமை உயரும். செய்யக்கூடிய சேவை மற்றும் சேவைபணியாளர்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும் படி வேலைகள் அமையும். எதிரிகளுடன் போட்டியாளர்களுடன் செய்யும் போராட்டங்களில் உங்களுக்கு இனி வெற்றி பெறுவதற்க்கான சாதகமான சூழ்நிலைகள் தோன்றலாம். ஊதாரிதனமாக போன செலவுகளுக்கு இனி சிக்கனமாக கட்டுபாட்டுடன் நடக்கும் பக்குவம் உண்டாகும் அதே போலவே சோம்பேறித்தனமும் குறையும். மாணவர்களுக்கு கல்வி கேள்வி மற்றும் கல்வி ஆய்வு நடத்தும் மாணவர்களுக்கும் அறிவாற்றல் திறம் உயரும். ஆன்மீக புண்ணிய பலம் உள்ள மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு புத்துணர்ச்சி ஆற்றல் உயரும். புனித யாத்திரை பயணங்கள் உண்டாகலாம். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியின் பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு உபஜெய ஸ்தானமான 6 ஆம் இராசியில் வருவதால் இராகுவினால் வரும் தொல்லைகள் குறைந்த ஒரு வித நல்ல பெயர்ச்சி பலன்கள் இந்த முறை அதிகமாகும் இருந்தாலும் 12ல் கேது வருவதால் உங்களின் லட்சியங்களை நிறைவேற்ற விடாமல் சில இரகசிய எதிரிகள் அல்லது எதிர்ப்பான வேலைகளில் சிலர் ஈடுபடலாம் அதனால் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகும் காலம் ஆவதால் நீரால் பரவும் நோய்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதாவது மருத்துவ செலவுகள் கூடலாம். 6ல் இராகு வருவதால் தூய சிந்தனை இல்லாதவர்கள் அல்லது நேர்மையற்றவர்களுடன் போட்டி போடாதீர்கள் அல்லது எச்சரிக்கையாக போட்டி போட வேண்டும். உள்ளூருக்குள் சிற்சில அவமானங்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நிகழ அதை எண்ணி கவலைப்பட வாய்ப்பு உண்டாகும். முதலாளிகளுக்கு தங்களின் தொழில் உள்ள ஊழியர்களின் வேலை நேரத்திற்கு உண்டான ஆர்டர்களை ஏற்படுத்தி தருவதிலும் அதை முறைபடுத்தி கொள்வதிலும் இனி விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும்.

முக்கியமான செலவை செய்யும் நேரத்தில் சிலடையூறுகள் உண்டாகி தவிக்க வேண்டியதாக வரலாம். உணவினில் தகுதி தரம் குறைந்த உணவை அல்லது பழைய காலம் தாழ்ந்த உணவை இக்காலங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். மின்சாரம் மற்றும் வெட்டும் பொருட்களை கையாளும் தொழில் செய்பவர்களுக்கு இக்காலங்களில் மிகுந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உணவை விற்கும் தொழில் துறையனர்களும் மற்றும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வரிச்சுமையால் லாப பாதிப்பு அல்லது உணவில் தேவையற்ற கலப்படங்கள் உண்டாகி தங்களின் புகழுக்கு இழுக்கு உண்டாக்க முயற்சிக்கலாம். அதே போல அசலூரில் சரக்குகளை அனுப்பும் போதும் காவலாக மற்றும் கவனமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

ஆன்மீக பலம் உள்ளவர்களை தவிர மற்ற பலருக்கு கேது 12 ஆம் இராசியில் வருவதால் இக்காலங்களில் பயம் உண்டாக்கும் கனவுகள் மிகுந்து தோன்றும். அரசியல் பகைமையால் தொழிலில் இடம் மாற்றம் அதனால் சிரமத்துக்கு ஆளாக்க பார்க்கும் நிலைமை. அவசரப்புத்தியுடன் நாம் செய்யும் பணிகளை பாதியில் அல்லது சிரமத்துடன் முடிக்க பார்க்க கூடிய காலம் அதனால் தவறு உண்டானால் நாம் தான் பணிந்து போக வேண்டி வரும். அதே போல இந்த இராசியில் இருக்கும் ஒரு நபர் தற்சமயத்தில் தங்களின் அணுகுமுறை அடிக்கடி மாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியின் பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மகர ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger