தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், தனுசு ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2020 ஆண்டின் பலன்கள்…


தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,  தனுசு ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2020 ஆண்டின் பலன்கள்…


இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.


இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

தனுசு ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 
நல்ல பலன்கள் -
சந்திரன் தனுசு இராசியில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை தனுசு இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 8 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 7 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 2 ஆம்  இராசியில் இருந்த கேது 1 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் இராசிக்கு கேந்திரத்தில் இராகு வருவது அவ்வளவு விசேஷம் அல்ல அதனால் நல்ல பலன்கள் குறைவு படும். இருந்தாலும் இராகு நல்லவிதமாக ஒருவர் ஜாதகத்தில் அமைந்து இருந்தால் இந்த காலகட்டத்தில் நிறைய நண்பர்களின் பழக்கம் உண்டாகும். நண்பர்கள் உடன் சுகமாக ஊர்உலகம் சுற்றி வருவது. புதிய யுக்திககளை தனது தொழில் புகுத்துதல். வாட்டி வந்த பணக் கவலைகள் ஒரளவுக்கு தீர ஆரம்பிக்கும். இந்த காலங்களில் சமயத்திற்கு தக்கபடி தன்னை மாற்றி வினையமாக செயல்படுகிற ஆற்றல் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய கற்பனை சக்தியை தூண்டி விடும்.

மேலே சொன்ன நல்ல பலன்கள் அவர் அவர் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் பலமாக இருந்தால் மேலே சொன்ன நல்ல பலன்கள் சிறப்பாக நடக்கும். பணம் விஷயங்களில் இருந்த தாமதம் மற்றம் சோம்பலாக நடந்து பணச்சேர்க்கை காலம் இனி மெல்ல நீங்கும் அதனால் ஆதாயம் எதிர்பார்க்கலாம். பொது அறிவு மற்றும் வெளிப்புற மதிப்பு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் பல தொடங்குவீர்கள். பேச்சு வார்த்தைகளில் இருந்த சுணக்கங்கள் குறையும். உணவு தட்டுபாடுகள் சற்று நீங்கி வேண்ட உணவை குடும்பத்திற்கு வாங்கி கொடுக்கும் ஆற்றல் சிறிது சிறிதாக உண்டாகும். கேது தங்களின் இராசிக்கே பெயர்ச்சி ஆகி இருப்பதால் ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு புனிதர்களின் தொடர்பு மற்றும் மெய் அறிவாற்றல் வளர வாய்ப்பு, எதிலும் ஒருவித ஆழமான உள்ளார்ந்த பார்வையோடு நடந்து கொள்ள தெய்வீக அருள் உண்டாகும். அது மட்டுமில்லாமல் அது தனுசு ராசியாக இருப்பதால் கலைகளை கற்கும் முயற்சி (சாஸ்திர விருத்தி) உண்டாக வாய்ப்பு. தங்களின் இயக்கம் அல்லது நடவடிக்கைகளில் மேல்நோக்கி அல்லது உயர்வான தன்மைகள் இனி வெளிப்படலாம்.

இந்த காலங்களில் தொழிற்சச்சரவுகளை தந்திரமாக கையாளப் பார்பீர்கள் அவர் அவர் ஜாதகத்தில் திசாபுத்தி நன்றாக இருந்தால் அதில் நல்ல வெற்றி. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அந்த வெளிநாடுகளில் செல்வாக்கு மற்றும் புதிய அறிமுகங்கள். உங்கள் ஆளுமை திட்டங்களை மற்றவர்களுடன் கலந்து அவர்களின் இலக்குகளையும் சேர்த்து ஒருங்கிணைத்து செல்ல தக்க வழிகளை ஆலோசிக்க கூடிய எண்ணங்கள் உருவாகும். தங்களுக்கு 7ல் மிதுன ராசியில் ராகு வருவதால் ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் ஆசைகளும் அன்பும் நேசமான நினைப்புகளும் வந்து இருவருக்குள்ளும் சுகம் தரும் ஒருங்கிணைப்பு உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய பணபுழக்கம். எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில் இருப்பவர்களுக்கு தரகினால் தொழில் லாபம் கைகொடுக்கும். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு கேந்திரங்களில் வருவது அவ்வளவு விசேஷம் அல்ல அவரவர் ஜாதகத்தில் சுப திசாபுத்தியில்லாமல் இருந்தால் சற்று சோதனை காலம் தான் இதனால் நிலையான கொள்கையிலோ அல்லது நிலையான மனதிலேயோ இருக்க போராட வேண்டி வரலாம். அப்புறத்தில் இருக்கும் மனிதர் ஒன்று சொல்லுவார் பக்கத்தில் இருக்கும் மனிதர் வேறுவிதமாக சொல்லுவார் இருவருமே பிடிகொடுக்காமல் நழுவி நழுவி பேசுவார்கள். கணவன் ஆனால் மனைவியிடத்தும் அதே போல மனைவி ஆனால் கணவனிடத்தும் அவர்களின் தற்போதை மனம் மற்றும் நடந்து கொள்ளும் முறை கண்டு தான் பேச வேண்டும் வழவழவென்று பேசினால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியது தான். பங்குச்சந்தை மற்றும் முதலீடு வர்த்தகம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் புதியவர்களாக தெரிபவர்கள் தரும் ஆலோசனைகளை நம்புதலை தீர்க்கமாக யோசித்தான் முடிவெடுக்க வேண்டும்.  இந்த காலகட்டங்களில் புதிதாக முதலீடு சார்ந்த வர்த்தக முயற்சிகளை நன்கு ஆய்வு செய்தபின் ஈடுபடலாம்.

கேது தங்களின் இராசிக்கே பெயர்ச்சி ஆகி இருப்பதால் ஆன்மீக பலம் இல்லாதவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் தெய்வீக அருள் குறைவு படுவதால் தொழிலில் மெத்தனமாக அல்லது அலட்சிய போக்கோடு இருப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும் இது போன்ற தோற்றம் எளிதில் உங்கள் மீது விழுந்து விடலாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் கீழ்த்தரமான குணம் அல்லது ஒழுங்குமுறை தவறி பழகி உள்ளவர்களின் நேரத்தை செலவு செய்யும் சில சூழல் ஏற்பட்டால் அதில் உங்களது உடைமை மற்றும் உங்களின் தார்மீக எல்லைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் மேலும் உங்களின் குறிக்கோள் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல தேவையில்லாமல் உங்களின் சக கூட்டாளிகளை தவறாகவோ அல்லது கிண்டலடிக்கும் விதமாகவோ யாராவது பேசினால் அவர்களை பார்த்து உடன் நீங்களும் அது போல பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்த காலங்களில் கூட்டாளிகளுடன் சேர்ந்து தரகு (கமிஷன்) தொழில் இருப்பவர்களுக்கு தரகு (கமிஷன்) தொகையை உடன் பகிர்ந்து கொள்வதில் ஏதேனும் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட பார்க்கலாம்.

வீட்டில் யாருக்கேனும் தொற்று நோய்கள் ஏற்பட்டால் சீக்கிரம் உங்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டாக்கும் காலம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரக்குகள் விநியோகம் அதாவது Goods & Distribution சேவைகளில் இருப்பவர்கள் வெளி ஊர்களுக்கு சரக்குகளை (Goods) எடுத்து கொண்டு போகும் போது அடிக்கடி தனது பயணத்தை சரிபார்த்து கொள்ள வேண்டும். சுற்றி இருக்கும் சிலர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளவார்கள் உங்களால் கண்டிக்கவும் முடியாது அதன் விளைவுகளும் மோசமாக இருக்கலாம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், தனுசு ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2020 ஆண்டின் பலன்கள்… "

கருத்துரையிடுக

Powered by Blogger