விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், விருச்சிகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

ிி ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,

ிிராசிு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.
இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம்
இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.


விருச்சிக ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 
நல்ல பலன்கள் -
சந்திரன் விருச்சிக இராசியில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை விருச்சிக இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 9 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 8 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 3 ஆம்  இராசியில் இருந்த கேது 2 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் ராகு கேதுவால் இதுநாள் வரை தடுத்து வரப்பட்ட மூதாதையர்களின் செய்த புண்ணிய காரியங்களால் பெறும் லாப-நஷ்டம். கற்ற அல்லது கற்கும் கல்வியின் பயன்கள். மாணவர்கள் கல்வி பெற உதவி. திருமணம் அமைய இருந்த தடைகள். நீண்ட தூரப் பயணத்தால் ஏற்பட்ட தொழில் விரயம். மனநிம்மதியாக தெய்வ வழிபாடு செய்ய இருந்த தடைகள். நல்ல நம்பிக்கைகள் பெறுதல். தொழில் பேச்சுக்கள் கைகூடிவரும் வாய்ப்பு போன்றவற்றிற்கு இருந்த தடைகள் ஆகியவை நீங்கி இனி வரும் காலங்களில் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தொலைவில் இருந்து நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். ஜாதகத்தில் சுப திசாபுத்தியை உடையவர்களுக்க உடனடியாக நல்ல பலன்கள் தோன்ற ஆரம்பிக்கும்.  கேது 2ல் வருவதால் இந்த காலங்களில் ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி அதர்மம் மிகும் காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட நான் வருவேன் என்று சொன்னாரோ அது போல இந்த காலங்களில் ஒரு  Supernatural power (எதையும் சமாளிக்கும் ஆற்றல்) எங்கிருந்தோ உருவாகி அவரை காக்கும் அதாவது ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு மட்டும். அதே போல தனுசு ராசிக்கு கேது வருவதால் உங்களின் லட்சியங்கள் அல்லது கருத்துகளை தெளிவாக எடுத்து பேசும் படி சூழல்கள் அமையலாம். அதே போல ஒரே நோக்கத்தோடு சீரிய முறையில் நீங்கள் கூறும் வாதங்கள் சரியாக செல்லுபடியாகும்.

9 ஆம் இராசியில் இருந்த இராகு விலகி விடுவதால் உங்களை அவமானபடுத்திய அல்லது உங்களது மனத்தை வருத்திய காரியங்களில் இருந்து மெல்ல சாந்தி பிறக்கும். மறைவாக அல்லது புரியாமல் இருந்த விஷயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு தீர்வு கிடைக்க வழிபிறக்கும். திட்டமிட்டிருந்தும் செய்ய தயங்கிய காரியங்களுக்கு துணிவு மற்றும் மனோதிடம், அதை நல்ல செயல்திறத்துடன் முடிக்க வாய்ப்பு உண்டாகும் ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான பணபற்றாக்குறைகள் மட்டும் உடனே போகாது. போட்டியாளர்களை சாமாளிக்க தேவையான தைரியம் பிறக்கும் திறமை கூடும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமை கூடும் மற்றும் நல்ல வாய்ப்பு உண்டாக்கும் காலம் கனிய ஆரம்பிக்கும். சகோதர சகோதரிகள் ஆகிய உடன்பிறப்புகளுக்குள் இருந்த தயக்கங்கள் சற்று குறையும். மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு 8க்கு வருவதால் அவமதிப்பு மற்றும் சின்ன சின்ன விபத்துகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கேது 2க்கு வருவதால் அதிகமான வரி அல்லது வட்டியால் அல்லது செலவீனங்களால் குடும்பத்தின் பணச்சுமை அதிகமாகலாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இராசி சிறுபிள்ளைகளுக்கு படிக்கும் சக்தி சிறிய அளவில் குறைவு உண்டாகலாம். கேது 2ல் வருவதால் இந்த காலங்களில் கடுமையாக பேசுவதையோ அல்லது பிடிவாதமான பேச்சு போன்றவற்றை தளர்த்தி கொள்ள வேண்டும். குடும்பத்திற்குள் சுகமான பேச்சு வார்த்தைகள் குறையும் அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருக்க பார்பார்கள். பணம் விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. அனுபவத்திற்கு பின் தான் இலாபம் ஆதாயம் கிடைக்கலாம் அதனால் பொறுமை தேவைபடும். வரும் ஆண்டுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது உடைமைகள் பழையதாகி புதிய செலவை தரலாம் அல்லது பழசை சகித்து கொண்டு பயன் படுத்துபடி ஆகலாம்.

இராகு எட்டுக்கு வருவதால் மோசடி பேர்வழிகள் அல்லது போலி வேடதாரிகள் உங்களை தேவையில்லாமல் அதிகமாக தொடர்பு கொள்ளலாம் அதனால் இந்த ஆண்டுகளில் தனிபட்ட விவரங்கள் தேவையில்லாமல் யாருக்கு தெரிவித்து விடாதீர்கள். அதே போல வீட்டினை பூட்டி வெளியில் செல்லும் காலங்களில் சரியான பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள வேண்டிய காலம். சரியாக தெரியாத அல்லது அரைகுறையாக குழப்பும் காரியங்களில் இந்த காலத்தில் ஈடுபடுவதை குறைத்து கொள்ள வேண்டும். கேது 2ல் வருவதால் இந்த காலங்களில் உங்களின் பேச்சுக்கும் அதனால் விளையும் நன்மைக்கு இடையில் ஒரு வித புகைப்படலம் விழுவதால் நீங்கள் ஒரு நோக்கில் சொல்வதை அவர்கள் வேறு நோக்கில் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாக்கும் அதனால் எதையும் ஒன்று இரண்டு முறை ஆழமாக அல்லது அழுத்தமாக சொல்ல வேண்டி வரும்.

கேது 2ல் வருவதால் இந்த காலங்களில் இந்த இராசிகாரர்கள் பங்குச்சந்தை, தங்கம், நிலம் மாதிரியான முதலீடுகள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதிகமான பணம் முதலீடுக்கு போய் அதனால் பணதட்டுப்பாடு (liquid cash demand) அல்லது பணமுடக்கம் உண்டாகும். தங்களின் இராசிக்கு 9 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 8 ஆம் இராசிக்கு வருவதால் 9ல் இருந்து தொல்லை கொடுத்த இராகுவின் தாக்கம் குறையும் இருந்தாலும் வயதானவர்களுக்கு சில உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நோய் தொற்றுகளை அதிகபடுத்தும். மற்றவர்களின் குறைபாடுகளை உங்களால் தான் என்று உங்கள் மீது குற்றம் சாற்ற பார்பார்கள். கூட்டாளிகள் பணத்தை இந்த காலகட்டத்தில் உங்கள் கையில் அதிகமாக புலங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.  மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், விருச்சிகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger