ரிஷப இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…
ரிஷப இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…
இராகு - கேது பெயர்ச்சி
வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை
இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன
இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி -
07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில்
இருந்து மிதுன இராசிக்கும் மற்றும்
கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து
அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை
வரை இந்த ராசியில் இருப்பார்கள்.
இராகு - கேது பெயர்ச்சியின்
இராசி சக்கர வரைபடம் -
இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால்
இராகு - கேது பொருத்த வரை அந்த
கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை
வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும்
பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும்
மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில்
பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை
ஏற்படுத்தும்.
இருந்தாலும் அடிப்படையாக 12
இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை
தற்போது பார்போம். அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின்
சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும்
வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி
விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே
தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக
நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள
வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது
அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.
ரிஷப ராசியின் இராகு - கேது பெயர்ச்சி
பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் ரிஷபத்தில்
இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை ரிஷப இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 3 ஆம் இராசியில் இருந்த இராகு 2 இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார் அது போல 9 ஆம்
இராசியில் இருந்த கேது 8 ஆம்
இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் ராகு கேதுவால் கல்வி மற்றும் சாஸ்திர வலிமை கூடும். புனித நூல் அல்லது ஸ்தலங்கள் தொடர்பு உண்டாகும். பூர்வபுண்ணியத்தால் சில புண்ணிய கொடைகள் சில
கிடைக்கும். சிலருக்கு திடீரென
செல்வ செழிப்பு அல்லது பண வரவுகள் உண்டாகும் அதை காப்பாற்றி கொள்வது என்பது அவர்
அவர் திசாபுத்தியின் பொருத்து அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு. மன தைரியத்திற்கு தடை கொடுத்து வந்த சம்பவங்கள்
மாறி புதிய உத்வேகம் கிடைக்கும். இதுவரை நடந்து வந்த பொறுப்பற்ற
அல்லது போலியான செயல்கள் இனி குறைந்து
வரும்.
இந்த இராசியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வரகிற பந்தயங்களில் சில
கலவரங்களுக்கிடையில் வெற்றி. புதிய
இல்லத்திற்கு மாறி குடிபுகும் தேவைகள். தொல்லை கொடுத்தவந்த பகைவர்கள் சற்றி ஒதுங்கி போவதால் இவர்களுக்கு நன்மை
உண்டாகும். உங்களுக்கு இதுவரை மறைந்து கிடந்த ரகசியங்கள் தெரிய அல்லது பேசத் தயங்கிய காரியங்களை துணிவாக பேச புரிய வைக்ககூடிய காலங்கள் உண்டாகும். உங்களுக்கு தடுமாற்றம் கொடுத்து வந்த விஷயங்களும் இனி நன்கு தெரிய அல்லது
புரியக்கூடிய காலங்கள் உண்டாகும். உங்களின் தந்தைக்கு அல்லது
சகோதர உறவுகளுக்கு தாமதபடுத்தி கொண்டிருந்த விஷயங்கள் விலகி அவர்களுக்கு
அதனால் நன்மை உண்டாக்கலாம். சிந்தனைகளை
விஸ்தரிக்கும் சம்பவங்கள் மேலும் புதிய பயண யோசனைகள் பிறக்கும் காலங்கள் ஆகும்.
தூரத்தில் உள்ளவர்களை அழைத்து இணைந்து நடத்தக்கூடிய சில உற்சாகம் தரும் விழாக்கள் இந்த காலக்கட்டங்களில்
அமையலாம். இராகுவை போல்
கொடுப்பார் இல்லை என்பது ஜோதிட வழக்குமொழி இராகு 2 ஆம் இராசிக்கு வருவதால் நல்ல திசாபுத்திகள் நடப்பவர்கள் சிலருக்கு அசையாச் சொத்துக்கள் சேர்க்கைகள்
உண்டாகும். பொது அறிவு மற்றும்
வெளிப்புற மதிப்புகளை உணரும் வாய்ப்பு உண்டாகலாம். வெளிநாட்டிற்கு போக
முயற்சிப்பவர்களுக்கு அதற்க்கான வாய்ப்புகள் உண்டாகும் மேலும் ஏற்கெனவே
வெளிநாட்டில் இருப்பார்களுக்கு சாதுரியமாக தந்திர நடந்து கொண்டால் அதில் வெற்றிகளை
ஈட்டலாம். நாளைக்கு நம்மை
காப்பதற்கான தெய்வீக செயல்பாடுகளில் ஈடுபட்டு நன்மை தேடி கொள்வது. மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து
அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.
தீய பலன்கள் -
இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்திற்கு சற்று செலவுகள் வரலாம். குடும்ப காரியங்களில் அல்லது குடும்ப விழாக்களில் மற்றவர்கள் கூறுவதாலோ அல்லது இவரே
நினைப்பதாலோ அடிக்கடி ஏதேனும் மாற்றங்களை செய்து கொண்டிருக்க வேண்டி நிலைகள்
உருவாகும் அதனால் வீண் அலைச்சல் அல்லது மனவுளைச்சல். அடிக்கடி மாறக்கூடிய உறுதிமொழிகளை நிங்கள் குடும்ப உறுபினர்களுக்கு
கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவரை சுற்றி உள்ள சூழல்கள்
அடிக்கடி மாறும் அதனால் புரிவதற்கு சூழல் கடினமாகும். நன்மை தந்து வந்த நிதி ஆதாரங்கள் சில மறையலாம். இராகு வாக்குஸ்தானம் ஆன
2 ஆம் இராசிக்கு வருவதால் உணர்ச்சி
துடிதுடிப்பை குறைத்துக் கொண்டு இனி பேசி வர வேண்டும் அதே போல வணிகத்தில் புதிய
வாக்கு மற்றும் ஒப்பந்தங்களை எச்சரிக்கை உணர்வுடன் கொடுக்க வேண்டும். திட்டங்கள் தீட்டி கடைசி கிடப்பில் போட்ட கதை
போல பல நடவடிக்கைகள் வரவுசெலவால் பாதிக்கும். எதார்த்தம் அல்லது மனசாட்சிக்கு புறம்பாக
நம்பிக்கையற்ற நிலைமையில் கூடிய சில காரியங்களில் ஈடுபடக்கடிய கட்டாயம் உண்டாகலாம். நம்பிக்கையை மீறக்கூடிய அல்லது ஒற்றுமையை குலைக்க கூடிய சில
பேச்சுக்கள் வரலாம்.
காரணமில்லாத அல்லது திடீரென வரக்கூடிய வகையில் வட்டி உயர்வு மற்றும்
கடன்பட்டவர்களுக்கு கடனை அடைப்பதற்க்கான சூழல்கள் திடீரென மாறும். உங்களுக்கு இருந்த
அதிர்ஷ்டம் சில அடுத்தவருக்கு
மாறும் அதே போல உங்களுக்கு இருந்த
அதிகாரங்கள் கூட சில அடுத்தவருக்கு
மாறலாம். வீட்டுப் பத்திரங்கள் அடமான கடன்களின் வைத்திருப்பவர்களுக்கு அதை அடைப்பதற்கு பல தடைகள். நீர்
சார்ந்த காய்சல் அல்லது பரவும் நோய்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரையேனும் தாக்கும்
வாய்ப்புகள் உண்டாகலாம். நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோயின்
வலிமையை குறைக்க புதிய முயற்சி எடுக்கலாம். கற்றுக்கொண்ட அனுபவ விஷயம் சில நேரங்களில்
மறக்கும். ஆழமாக பலவற்றை யோசித்து
ஆனால் அதற்க்கான காலம் வரும் போது யோசிக்காத விஷயல்களை பேசி குழப்பம் உண்டாக்கலாம். மேலே சொன்னவை எல்லாம் அவர் அவர் ஜாதக பலத்தை
பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் அளவுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ரிஷப இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…"
கருத்துரையிடுக