மேஷ இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

மேஷ இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம்


இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

மேஷம் ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 

நல்ல பலன்கள் -
சந்திரன் மேஷத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை மேஷ இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 4 ஆம் இராசியில் இருந்த இராகு 3 இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார் அது போல 10 ஆம்  இராசியில் இருந்த கேது 9 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு கேதுவால் தடுத்து வரப்பட்ட வீடு மற்றும் உடைமை சுகம், கல்வி, வாகனம் வசதி, பதவி மற்றும் பணி உயர்வு, தொழிலால் பெறும் லாபம் மற்றும் புகழ், அரசாங்க ஒத்துழைப்பு, இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்தல் போன்றவற்றிற்கு இருந்த தடைகள் ஆகியவை நீங்கி இனி வரும் காலங்களில் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

அதே போல இந்த இராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகாரர்களுக்கு தனது இலட்சியங்கள் நிறைவேறாமல் காத்திருந்தவர்களுக்கு அதற்கு உண்டான காலம் கிடைக்கும். சுற்றத்தார்களுடன் இருந்த பிணக்குகள் குறையும். தான் தெரிவித்த கருத்துக்களுக்கும் மற்றும் ஆணைகளுக்கும் மதிப்பு தராது இருந்தவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஒப்பந்தம் செய்து இருந்த தொழில் வாய்ப்புகள் வேகம் எடுக்கும். புதிய ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு. சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 3க்கு வருவது நன்மை விளைவிக்கும் அதாவது எடுத்த காரியத்தை விரைவில் செய்து முடிக்க தேவையான வேகமும் விவேகமும் கிடைக்கும் குறிப்பாக புதிய நன்மை தேடி அடைவற்க்காக விசாரித்தல், புதிய பரிசோதனை முயற்சி செய்து பார்ப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம். அதே போல கேது 9 ஆம் இராசிக்கு வருவதால் குடும்ப தொழில் மற்றும் பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களுக்கு அனுகூலம் அல்லது சில உறுதித்தன்மை கிடைக்கலாம். சமரசம் செய்வது அல்லது அனுபவங்களை பயன்படுத்துவது போன்றவற்றிகு தெளிவான நல்லிணக்கம் கிடைக்கலாம். முரண்பட்ட ஜோடிகள் சமாதானம் ஆகலாம்.

அதே போல இந்த இராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகாரர்களுக்கு கைவிடாது வலிமையாக தொடர்ந்து போராட வைக்கும் அதனால் காரிய வெற்றிக்கான வாய்ப்புள் அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிலைமை வந்தாலும் அதனால் நன்மைகள் விளைவது. சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு செய்யும் சேவையால் மதிப்பு உயர்வது. தேவதாபக்தி மிகும் அதனால் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு வரலாம். நாலு பேருக்கு உபதேசம் செய்ய அதில் ஆர்வம் உண்டாகும். சிறப்பான சில எண்ணங்கள் உயர்வு மற்றும்  திடசித்தம் கிடைக்கும். முக்கியமாக ஆவலும் மற்றும் உற்சாகமும் அதிகமாகும், இளம் பருவத்தினருக்கு புதிய friendship forming நடக்கலாம், நடுவயதினருக்கு ஆங்கிலத்தில் சொன்னால் modification of the thinking principles தமிழில் சொன்னால் சிந்திக்கும் விதத்தை  அதன் பாணியை மாற்றியமைக்கும் சூழ்நிலைகளை அமையும்.

தீய பலன்கள் -
இதுவரை இருந்த கஷ்டங்கள் தான் அதிகமாக விலகும் அதனால் மேஷ இராசிக்கு இந்த முறை தீய பலன்கள் குறைவு தான். சூரியன் கிழக்கில் மெதுவாக உதிப்பதை போல பாக்கியங்களும் மெதுவாக தான் வரும். சகோதர சகோதரிகளின் விஷயத்தில் மட்டும் ஏற்கெனவே இருக்கும் சிக்கல்கள் உடனடியாக தீராது. அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிலைமை வரும். அன்றாட நினைவாற்றல் என்பது குறைவு படும் அதே சமயத்தில் தெய்வீக அறிவாற்றல் பலப்படும். கொஞ்ச கவனம் தப்பினாலும் சீக்கிரம் சாதாரண விடயங்கள் கூட பிரச்சினைக்குரிய தாக மாறும் அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் வேண்டி தலைவலி வரும். ஆயுதங்கள் வைத்திருக்கும் பணியில் இருப்போர்கள் அதை உபயோகிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் அவசர நடவடிக்கை எடுத்தால் விளைவு கடுமையாகும்.

தேவையற்றவர்களின் தொடர்பால் உங்களின் இயல்பார்ந்த குணம் மாற வாய்ப்பு உண்டு பின்பு அதனால் சற்று மோசமான விளைவுகள் வந்த பிறகு தான் உங்களுக்கு தெரியும். ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களை செய்தாலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டு முடிவுகளை ஆராய்ந்தாலோ மனகுழப்பங்கள் மிகுந்து கலவை எண்ணங்களால் அவசரப்பட்டால் காரியங்கள் சிதறலாம். சண்டைகளில் அல்லது குழுவுக்குள் நடக்கு விவாதங்கள் மற்றும் விமர்ச்சனங்களில் நுழைந்தால் உங்களின் மதிப்பு தான் கெட்டுப்போகும். துணிவான அல்லது துரிமான நடவடிக்கை எடுக்க போவதற்கு முன் ஆன்மீக கிரகமான கேது 9ல் வந்திருப்பதால் உங்களின் உள்வுணர்வில் தெய்வீகமாக தோற்றக்கூடிய சில எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தெய்வீக அருள் இருக்கிறதா என்று ஆய்ந்து பின் நடவடிக்கை எடுக்கலாம். நான் மேலை சொன்னது போல சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 3க்கு வருவதாலும் கேதுக்கு ஞானபலம் தரும் 9 ஆம் இராசியில் வருவதாலும் நன்மை விளைவிக்கவே வாய்ப்பு அதிகம்.




0 Response to "மேஷ இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger