மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மிதுனம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,  மிதுனம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…


இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -  

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.
 
மிதுனம் ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் மிதுனத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை மிதுன இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 2 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது தங்களின் இராசிக்கே இப்போது வந்து சேர்கிறார் அது போல 8 ஆம்  இராசியில் இருந்த கேது 7 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு கேதுவால் தடுத்து வரப்பட்ட ஒருவருடைய பணம் விஷயங்களில் உண்டாகும் நன்மைகள். குடும்ப சொத்தால் உண்டாகும் நன்மைகள். உயர்கல்வி மற்றும் கற்கும் வலிமை. ஆன்மீக ரீதியான தொழில் செய்பவர்களுக்கு கைகூடிவராமல் இருந்த நன்மைகள். நிதி மற்றும் நிர்வாக ஆலோசனை கொடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு கைகூடிவராமல் இருந்த நிதி சார்ந்த நன்மைகள். தொழிலில் வராமல் தடுத்து வரப்பட்ட வெகுமதிகள் போன்ற அனைத்து விஷயங்களில் இருந்த அனைத்து தடைகளும் இனி நீங்கி நல்ல பலன்கள் வர ஆரம்பிக்கும் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

புதிய ஆதாயங்களை கண்டுபிடிப்பது. வர வேண்டிய கடன் பாக்கி வருவதற்க்கான வாய்ப்பு உண்டாகலாம். இதுவரை செய்து வந்த தெய்வீக காரியங்களுக்கான நன்மைகள் மெல்ல வரத் தொடங்கும். மனதை வாட்டி வந்த கவலைகள் மற்றும் அவமானங்கள் சற்று விலகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தடுத்து வரப்பட்ட பணவரவுகள் இனி நீங்கி பணவரவாக வாய்ப்பு உண்டாகலாம். தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது கேது 7ல் வருவதால் ஒவ்வொரு காரியங்களையும் கவனிக்கும் விதம் மற்றும் கவனித்த காரியங்களை முடிப்பதற்கான தொடர்புகளை விரிவாக்குவது உண்டாகும். அதில் அனைவரை அரவணைத்துக்கொள்ளுதல் மற்றும் ஒன்றாக சேர்த்தலில் வெற்றி உண்டாக வாய்ப்பு மற்றும் திறன்கள் மிக செய்யும். தனுசு ராசிக்கு வரும் கேது தங்களின் லட்சியங்களை நேராக்க அல்லது சீர்தூக்கி பார்க்க உதவும்.

தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது ராகு வருவதால் ஆதாயம் பெற வேண்டி புதிய பயணங்கள் மற்றும் புதிய நண்பர்கள் அல்லது புதிய மனிதர்கள் பழக்கங்கள் உண்டாக்கலாம். தொழில் துறையினர்களுக்கு தன்னிலையில் இருந்து சற்று வளைந்து கொடுத்து போய் அதனால் லாபம் ஈட்ட வேண்டிய நிலைமை உண்டாகும் இருந்தாலும் நல்ல திசாபுத்திகள் கொண்டவர்களுக்கு அதனால் எதிர்பாராத புதிய தொழில் வாய்ப்புகள் திடீர் லாபம் உண்டாகும், தனது வியாபார எல்லையை விரிவாக்க செய்ய வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் அதிகமாக பேரம் பேசும் படி சூழ்நிலைகள் அமையலாம் - மிதுனராசி). ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த வர்த்தக கண்காட்சி பலன் அமையும். எதையும் கற்று கொள்ளவோ அல்லது தெரிந்துகொள்ளவோ தயாராக இருக்க வேண்டும். அதே போல The youngsters may attain the new update in their style, dress, appearance. அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
துன்மார்க்கர்கள் தொடர்பு உண்டாக வாய்ப்பு உண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் This period new persons approach a relationship with you, therein some wicked person also approaches may happen so should be cautious. திருமண விஷயத்தில் எடுக்கும் முயற்சிகள் காலதாமதமாக தான் கைகூடி வரும். ஆடம்பரமாக அல்லது ஊதாரித்தனமான செலவு செய்ய ஆசை தூண்டும் அதை கட்டுப்படுத்தாமல் செலவு செய்தால் பணப்பை (Money wallet) மதிப்பு இழக்கும். கிண்டல் குறும்புதனமான செயல்களை சற்று ஒத்திவைத்துக்கொள்ள வேண்டும். அதிக நண்பர்கள் அதிக நேரத்தை வீணாக்குவார்கள். ஏற்கெனவே பேசிவைத்த முடிவுகளை அல்லது விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாற்ற பார்ப்பார்கள். சிலர் புதிய குழப்பத்தை தூண்டிவிட்டு அதில் உங்களையும் பலியாக்க பார்ப்பார்கள்.

தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது ராகு வருவதால் இந்த இராசிகாரர்களுக்கு அவர்களின் வளங்களை மற்றவர் பறிக்க பார்க்கும் சூழ்நிலைகள் நெருக்கடிகள் வரலாம். அதிக அலைச்சல்கள். அதே போல ஒரு காரியத்தை பூர்த்தி செய்வதற்க்காக தேவையற்ற சில தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். அதே போல அருகில் இருப்பவர்களுடன் முரண்பாடுகளை தூண்டும் பேச்சுக்கள் வரலாம் சமாதானத்தை ஏற்படுத்த இணக்கத்துடன் பேச வேண்டும். உணவை விற்கும் தொழில் துறையனர்களும் மற்றும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வரிச்சுமையால் லாப பாதிப்பு அல்லது உணவில் தேவையற்ற கலப்படங்கள் உண்டாகி தங்களின் புகழுக்கு இழுக்கு உண்டாக்க முயற்சிக்கலாம். வெயில்கால பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு அதற்கான மூலப்பொருட்களை ஏற்படுத்த அதிகமாக மெனக்கெட வேண்டிய நிலை உண்டாகும்.

7ல் கேது வருவதால் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தேவையற்ற வாதங்களை தவிர்க்க வேண்டிய காலம் தொடர்ந்து வாதவிவாதங்கள் செய்தால் கடைசி ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ள தவிர்க்க வேண்டிய சூழல் வந்து போகும். ஏதாவது கருத்தை தனது வாழ்க்கை துணை கேட்டால் அவர்களுக்கு ஒத்துப்போகும் விதமாக தலையை ஆட்டுவது தான் தற்போதைக்கு புத்திசாலித்தனம். கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபக்குறைவு உண்டாகலாம். பொழுதுபோக்கு அல்லது திரைப்படம் போன்ற களிப்புட்டும் விஷயங்களுக்கு போவதற்கும் தடை மற்றும் அந்த பொழுதுபோக்கு அல்லது திரைப்படம் துறை வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமான பற்றாக்குறைபாடு. துணி வியாபாரம் பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு கவனம் தப்பினால் முதலை போட்டு விற்க வைக்க அதிக காலம் காத்திருக்க வேண்டி வரலாம் அதிகமான முதலீட்டை குறைப்பது நல்லதாகும். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.



0 Response to "மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மிதுனம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்… "

கருத்துரையிடுக

Powered by Blogger