சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், சிம்மம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்..

சிம்ம இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -



இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.


சிம்ம ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் சிம்மத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை சிம்ம இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 12 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 11 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 6 ஆம்  இராசியில் இருந்த கேது 5 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் நான் ஏற்கெனவே சொன்னது போல சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 11க்கு வருவது ஒரளவுக்கு மேல் நன்மை விளைவிக்கும். காரியங்களில் வெற்றி அடைவதற்கு இதுவரை இருந்து வந்த மெத்தனம் மெல்ல விலகும் ஆனால் 5ல் கேது வருவதால் பெரிய யோகம் என்பது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் இருப்பவர்களுக்கு தான் வரும். தொழிலில் துறை மற்றும் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தகுதியை உயர்த்தும் கற்றல் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி உண்டாக்கும். அதே போல 5ல் கேது வருவதால் பூர்வபுண்ணிமான திசாபுத்தி நடப்பவர்களுக்கு வேலையில் அதிகாரம் அல்லது ஆற்றல் மிகலாம்.  இலக்குகள் பெரிதாகும்.

ஆன்மீக அனுபவ அறிவு மிகும். சொற்பொழிவு மற்றும் பேச்சு மூலம் வாழ்பவர்களுக்கு நல்ல சிந்தனாசக்திகள் பிறக்கும். பணப்புழக்கமான தொழிலில் இருப்பவர்களுக்கு இராகு இராசிக்கு 11 ஆம் இராசியில் வருவதால் திடீர் பணவரவுகளால் பல புதிய மாற்றங்கள் நிகழும் அவர் அவர்களுன் ஜாதகத்தில் திசாபுத்தி பலமானதாக இருந்தால் பெரிய பணவரவுக்கு கூட வாய்ப்பு உண்டு. மூத்தவர்களால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பழைய சேவைகள் புதிய சேவையாக வடிவம் மாறும் அதனால் தொழிலில் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு பராமரித்தல் செய்யும் விவசாயிகளுக்கு இருந்த பாரம் சற்று குறையும். பங்குசந்தை அல்லது பங்குவர்த்தகங்களில் இருப்பவர்களுக்கு லாபத்தை அருவடை செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

புதிய வாகனங்கள் அமைத்து கொள்ளல். விடுமுறை நாட்களில் ஆன்மீக ஸ்தல யாத்திரைகள் பல அமைந்து வரும். ஆக்கப்பூர்வமான சில படைப்பாற்றல்கள் உங்களிடம் இருந்து வெளிப்படும். நடக்க போகும் காரியங்களை நன்றாக பகுத்துணர்ந்து பார்க்கும் தெளிவு இந்த காலகட்டங்களில் உண்டாகும். பொருள் விநியோகம் (distribution) செய்யும் தொழில்களில் இருப்பவர்களுக்கு விரைவான நடவடிக்கைகள் அல்லது முடிவுகள் நல்ல பலன்கள் தரும். விரும்பிய ஆடை ஆபரண அலங்கார சேர்க்கைகள் பல உண்டாகும். செய்த தானதர்மங்கள் சற்று பலன் கொடுக்கும் காலம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 11க்கு வருவதாலும் 5ல் கேதுவும் வருவதாலும் ஒருசில விஷயங்களை தவிர மற்றவற்றில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புரியாத புதிய நண்பர்கள் அமையும் நிலை உண்டாகலாம். மன அமைதி பெறுவதில் சில தடைகள் இருக்கும் அதனால் தூக்க குறைவு. திருமண பாக்கியம் அமைக்க காரியங்கள் சற்றி காலம் தள்ளிக்கொண்டு போகும். அதே போலத்தான் குழந்தை பாக்கியம் உண்டாக சற்றி காலம் தள்ளிக்கொண்டு போகும். விவசாயிகளுக்கு விவசாய அபிவிருத்தி காரியங்களை சரியாக முடிக்க முடியாமல் செலவுகள் திட்டமிட்டபடி நடக்கும் வாய்ப்பு குறையும். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு சில தடைகள் அல்லது சவால்கள் வரலாம். 5ல் கேது வருவதால் தற்காலத்தில் வாழ்க்கை சற்றி எளிமையாயிருத்தால் முடிவுகளை நிதானமாக எடுத்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். கர்வமாக நடந்து கொண்டாலோ அல்லது அது போல ஏதேனும் செயலில் ஈடுபட்டாலோ பின்னால் நீங்கள் தான் தடுமாற்ற அடைய வேண்டி வரும்.

சட்ட மற்றும் சமய ஒழுங்குமுறை தவராமல் இருக்க வேண்டிய காலம்.  நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் ஆண்டவன் சந்நிதி ஆறுதல் தரும். இருக்கும் செல்வாக்கை தவறான இடங்களில் காட்டுவதை தவிர்க்க வேண்டி காலம். வேகத்துடன் மட்டுமல்ல விவேகத்துடனும் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் என்பதை மறக்க கூடாது. கூட்டாக வேலை செய்கிற போது நம்மை சுற்றி நூறுகாதுகள் இருப்பதாக நினைத்து கொண்டு கவனமாக பேச வேண்டும். ரகசியங்களை காக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களில் விளையாட்டுத்தனமாக அல்லது கிண்டலாக நடந்து கொண்டீர்கள் என்றால் அவர்களின் இருந்து அந்நியபட்டு விடுவீர்கள். சிற்றின்ப இன்ப மற்றும் போதை பொருட்களின் பக்கத்தில் இருப்பவர்களுக்கும அதன் இச்சை மேலும் அதிகப்படும். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், சிம்மம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்.."

கருத்துரையிடுக

Powered by Blogger