கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கடகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,  கடகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…


இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.
இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம்


இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

கடக ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் கடகத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை கடக இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசியில் இருந்த இராகு தற்போது தங்களின் இராசிக்கு 12 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 7 ஆம்  இராசியில் இருந்த கேது 6 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு தங்களது சொந்த இராசியில் இருந்து கொடுத்த வந்த சோதனைகளும் மற்றும் வேதனைகளும் மெல்ல மெல்ல நீங்கும். கேது 7 ஆம்  இராசியில் இருந்து கொடுத்த வந்த திருமண தாமதம், சிறிய அளவில் இருந்த கணவன் மனைவி சிக்கல்கள், நண்பர்களுக்கிடையே இருந்த சிறிய அளவான கசப்புகள். உப்பு விற்க போனால் மழை வந்த கதை போல் இருந்த காலம் இனி நீங்கி நல்ல பலன்கள் பெருக ஆரம்பிக்கும் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தன்னையும் செய்யவிடாமல் அடுத்தவனும் செய்யாமல் முன்னே இழுத்தால் பின்னே போவதும் பின்னே இழுத்தால் முன்னே போவதுமாக இருந்த காலங்கள் விலகி காரியங்கள் ஒத்துவரக்கூடிய படி அமையும் வாய்ப்புகள் உண்டாகும். தாழ்வாகவும் மற்றும் அவமானமாகவும் கருத்தி வந்த விஷயங்கள் இனி மெல்ல விலகும். இந்த இராசி ஆள்வோர் மற்றும் நிர்வாகிகளின் அதிகாரத்தை சுற்றி படர்ந்து இருந்த இருள் இனி மெல்ல விலகும். துணிவான மற்றும் எதிர்த்து போராட இருந்த தடைகளும் இனி மெல்ல விலகும். நீர் ராசியான தங்களின் ராசிக்கு 12ல் காற்று ராசியில் ராகு பெயர்வதால் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்க்கான காலம் கனிந்து வரலாம். தொழில் போட்டிகள் அல்லது எதிர்ப்புகள் இனி குறையலாம் அதே போல எதிர்ப்புகளை நிதானமாக எதிர் கொள்ள வேண்டும்.

முக்கியமாக மணமகன் அல்லது மணமகள் தேடும் படலத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட சலிப்புகள் மாறும் அதனால் உற்சாகம் கொடுக்கும் வகையில் வரன்கள் வரவு உண்டாகலாம். கூட்டுத்தொழிலில் புதிதாக முதலீடோ அல்லது திட்டமோ செயல்படுத்த இருந்த காலதாமதங்கள் இனி நீங்கும். திசாபுத்தி பலமானதாக இருந்தால் புதிய பண உதவிகள் கூட கிடைக்கலாம். தொழில் துறைக்குள் போடபட்ட கலந்துரையாடல்கள் கனிந்த வராத விஷயங்கள் இனி கைகூடிவர வாய்ப்பு மற்றும் சமாதானத்திற்கும் வாய்ப்பு உண்டாகலாம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சொந்த இராசியில் இருந்த வந்த இராகுவும் 7ல் இருந்த வந்த கேதுவும் விலகுவதால் இதுவரை இருந்த வந்த கஷ்டங்கள் தான் அதிகமாக விலகும் அதனால் கடக இராசிக்கு இந்த முறை தீய பலன்கள் குறைவு தான். மேலும் நல்ல மாற்றங்களும் எதிர்பார்க்கலாம் இருந்தாலும் அலைச்சல்கள் மட்டும் குறையாது. உங்களின் தனிபட்ட திசாபுத்தி மோசமானால் மருத்துவ செலவுகளே அல்லது கல்வி செலவுகளே அல்லது விழா கால செலவுகளே மிகுந்து வந்து பணம் வீணாக வாய்ப்பு உண்டாகலாம். இந்த இராசி அரசு அதிகாரிகளை வாட்டும் இடமாற்றங்கள் அல்லது வீண் அலைச்சல்கள் நிகழ ஆரம்பிக்கும்.  புதிய இடமாற்றங்கள் புதிய செலவுகளை ஏற்படுத்தும். அந்நியர் அல்லது புதிய பழக்கமற்ற மனிதர்களின் கை ஓங்குவதால் சற்று வளைந்து கொடுத்து போக வேண்டி வரும். ஆடம்பரமாக அல்லது ஊதாரித்தனமான செலவு செய்ய ஆசை தூண்டும் அதை கட்டுப்படுத்தாமல் செலவு செய்தால் பணப்பை (Money wallet) மதிப்பு இழக்கும். 6ல் கேது வருவதால் தங்களின் உச்சபட்ச அறிவுக்கு திறமைக்கு தக்க சாவல்கள் வரும் விவேகமுள்ளவர்களும் நிதானமுள்ளவர்களுமே சாமாளிக்க முடியும்.

காலத்துக்தக்க தந்திரசாலியாக செயல்பட முடியாதவர்கள் சற்று பாதிக்கபடலாம். 12ல் ராகு வருவதால் நிம்மதியாக தூக்கும் நேரத்தின் காலஅளவு குறையலாம். இந்த இராசி ஓய்வூதியம் வாங்கும் நபர்களுக்கு பற்றாக்குறையான காலகட்டம் உருவாகும். திடீரென சில புதிய மருத்துவ செலவுகள் வந்து போகலாம். வாழ்க்கையில் சில உறவுகளில் உள்ள வரம்புகள் மீறி நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு அல்லது பகைத்து கொள்ளலாம். எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். தனது உடலை தானே வருத்திக் கொள்வது போன்ற அலைச்சல் அல்லது அது போன்ற சூழல்கள் வரும். விரைவாக முடிக்க வேண்டும் என்று சில விஷயங்களை அல்லது சில நபர்களை மறந்து போய் விடுவது போன்ற பலன்கள் உண்டாகும். கொசுவால் பரவும் தொற்று நோய்களின் தொல்லைகள் வரலாம். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.



0 Response to "கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கடகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger