மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.
இரத்தம் சிவப்பு நிறத்தை கொண்டது மேஷம் இராசி
முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் பெரிய உடலமைப்பு காட்டும் இராசி
நான்கு கால் இராசி பின்இரவில் வலுவாக இருக்கும் இராசி
தைரியத்தை குறிக்கும் இராசி கிழக்கு திசையை சார்ந்த இராசி
அரசு அரசர்களின் மதிப்புடைய இராசி.
சுதந்திரம், மலைத்தொடர் தொடர்புடைய இராசி
ரஜோ குணம் இராசி பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி
நெருப்பு இராசி செவ்வாயை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்


படித்த மேதை, படிக்காத மேதை….

 படித்த மேதை, படிக்காத மேதை….

மனித இனத்தின் சிறப்பு எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு அப்படிபட்ட அறிவில் உயர்ந்த படிப்பை அடைந்து அந்த துறையில் ஆழங்கண்டு அதில் அனுபவமும் கண்டு அதில் மேதையாக திகழ்வது என்பது மிகச் சிலராலேயே முடிகிறது அப்படி ஒரு துறையில் மேதையாக திகழ்வது என்பதே பலரின் கனவாக உள்ளது. மேதை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் ஆன்றோர், சான்றோர் என்ற சொல்லின் மூலம் விளக்கப்படுகிறது. மேதையாக அதாவது ஆன்றோர் ஆக திகழ்வதற்கு தேவையான குணங்களாக தமிழின் ஒரு பழம் நூல் ஒன்று இவ்வாறு கூறும்....


கடகம் & ரிஷபம், கடகம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

கடகம் & ரிஷபம், கடகம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் கடகம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ ரிஷபம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.


பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் ஆயில்யம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் ஆயில்யம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம், கிரக பொருத்தம், திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும். நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம், மத்திம பொருத்தம், அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆயில்யம் நட்சச்திரம் வரை எண்ண 5 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம்  இல்லை.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் ஆயில்யம் நட்சத்திரம் ராக்ஷஸ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் இல்லை.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் ஆயில்யம் நட்சச்திரம் எண்ண 5 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் ஆயில்யம் நட்சச்திரம் எண்ண 5 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் ஆயில்யம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பூனை ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் கடக இராசி ஆகும் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் கடக இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் புதனுக்கு சந்திரன் பகை உறவுமுறை சந்திரனுக்கு புதன் நட்பு உறவுமுறை வருவதால் இராசி அதிபதி முழுமையான பொருத்தம் இல்லை.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் கடக இராசி ஆகும் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வராததால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் ஆயில்யம் நட்சச்திரம் பாத ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் ஆயில்யம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் ஆயில்யம் நட்சத்திரம் சிலேத்தும நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் ஆயில்யம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் ஆயில்யம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில் 4 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் முழுமை பெறாததால் எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் அஸங்கம் (சேர்க்கை இல்லை).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


மாணவர்களுக்கு வேண்டுகோள்...

மாணவர்களுக்கு வேண்டுகோள்...

அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தோடு
வருங்கால மாணவர்களுக்கு சிறு வேண்டுகோள் நினைத்த படிப்பை, நினைத்த கல்லூரியை, எதிர்பார்த்த மதிப்பெண்ணை அடைய முடியவில்லை என்ற காரணத்திற்காக தற்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற எனது ஒரு சிறிய வேண்டுகோளே இந்த காணொளி காட்சியில் விளக்கி இருக்கிறது.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம் C.Com

2017 - 2018 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…

2017 - 2018 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சியும் சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…

2017 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி வாக்கியபடி தமிழ் ஆவணி 17 ஆம் நாளும் ஆங்கிலத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி 2017 ஆம் வருடம் காலை 8 மணி அளவிலும், திருகணிதப்படி தமிழ் ஆவணி 27 ஆம் நாளும் ஆங்கிலத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி 2017 ஆம் வருடம் காலை 7 மணி அளவிலும், கன்னி ராசியிலிருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை செய்வார்கள்.

பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும் அதாவது பெயருதல் (moved) என்றால் ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்

பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!

என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார் அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன் திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் அனைவருக்கும் நன்மைகளை செய்யும் இடத்தில் இருந்து பெயராது இருக்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன். இந்த துலாம் இராசிக்கு போகும் குருவால் கோச்சார ரீதியாக மங்களகரமான பலனை பெற போகிறவர்கள் எந்த எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சி மற்றும் பார்வை செய்யும் இராசியின் வரைபடம்

கு + ரு = குரு ஆனது இதில் ’கு’ என்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ‘ரு’ என்றால் வழிகாட்டி என்று பொருள் அதாவது அஞ்ஞானத்தை ஒழித்து உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் இருக்கும் இராசியில் இருந்து 5,7,9 ஆம் இராசிகளை பார்வை செய்வார் அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக கருதப்படுகிறது.



ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு மாற குரு (வியாழன்) ஒரு வருட காலம் எடுக்கும் எனவே இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை இந்த வருட காலம் பெறப் போகும் இராசிகள் கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் அந்த மங்கள அருள் பார்வை உதவப் போகிறது எவ்வாறு என்று பாருங்கள்


கும்ப இராசிகாரர்களுக்கு மற்றும் கும்ப லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். நிதி ஆதாரம் மற்றும் ஆடம்பரமான வசதிகளை ஏற்படுத்தி தரும் வழி உண்டாகலாம், தொழில் வேலைகளில் மூழ்கி போய் ஈடுபாடுடன் செய்து அதனால் முன்னேற்றம் உண்டாக அருள் கிடைக்கும். சம்பள உயர்வு, கூட்டமைப்பால் உதவிகள், விநியோகத் துறை விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் பெருக வாய்ப்பு, சரியான தேவ விசுவாசம் மற்றும் புனித அறிவு பலம் முன்னேற்றம். விற்க தாமத படும் சொத்துக்கள் விற்பனை அடைய அருள் கிடைக்கும். தள்ளிப் போட்டு வைத்துள்ள காரியங்களை எடுத்து நல்லமுறையில் முடிக்க காரிய வெற்றிக்கு குரு பார்வை உதவும். தூரதேச பயணங்கள் சாதகமாக கைகொடுக்கும். புத்துணர்ச்சியான உள்ளுணர்வு அல்லது புதிய யோசனைகள் உண்டாக அருள் கிடைக்கும். தாமதமாகும் குழந்தை பாக்கியம் உண்டாக அருள். ஆன்மீக & சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு காலத்தின் ஒத்துழைப்பு கூடி கிடைக்கும். முதலாளியின் ஆதரவு உண்டாக வாய்ப்பு. தங்களின் இராசிக்கு 3 மற்றும் 5 ஆம் இராசியை குரு பார்பதால் ஊக வணிகம், பங்குச்சந்தை, பொருள் வணிகம் ஆகியவற்றில் லாப உயர்வு உண்டாக வாய்ப்புண்டு. ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

மேஷ இராசிகாரர்களுக்கு மற்றும் மேஷம் லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். பலன் நலன்புரியக் கூடிய செயல் நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பார். மாணவர்களுக்கு பரிச்சையில் பதில் கண்டுபிடிக்க ஞாபக சக்தி உதவி. உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி தந்திடுவார். அறிவுசார் வேலைகளில் இருக்கும் பயத்தை நீக்கி கொடுப்பார். வாக்கு கொடுத்த உறுதிமொழிகளை காப்பாற்ற அருள் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைத்து உடல் தேற வழி பிறக்கும். நீதி விசாரணை வழக்குகளில் தன்னுடை நியாயத்தை விரிவாக பேச வாய்ப்பு. இலக்கிய மற்றும் படைப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய படைப்பாற்றல் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிணக்குகள் நீங்க அருள் கிடைக்கும். கூட்டு வியாபாரம் தொழில் செழிக்க அருட்பார்வை உண்டாகும். மற்றவர்கள் உங்களிடம் சற்று கருணையோடு நடந்து கொள்ளுவார்கள். வாழ்க்கை துணையால் உதவிகள் கிடைக்க வாய்ப்பு. குடும்ப சடங்கு விழாக்கள் எடுத்து அது சிறப்பாக நடக்க அருட்பார்வை இருக்கும். தங்களின் இராசிக்கு 3 மற்றும் 11 ஆம் இராசியை குரு பார்பதால் வணிகத்தில் சில துணிச்சல் ஆன காரியங்களை செய்து அதில் லாப உயர்வு உண்டாக வாய்ப்புண்டு. ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

மிதுன இராசிகாரர்களுக்கு மற்றும் மிதுனம் லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். மனதளவில் பிரிந்து இருந்து தாம்பத்திய ஜோடிகளுக்கு பிரிவு நீங்கி இணைய வாய்ப்புண்டாகும். உற்சாகத்தை தூண்டும் பணவரவுகள். சண்டை சச்சரவுகள் குறைந்து கூட்டாளிகளுடன் இணக்கமான வியாபாரம் நன்மை. இருதலைக்கொள்ளி எறும்பு நிலையை போல இந்த பக்கமும் முடிவெடுக்க முடியாமல் அந்த  பக்கமும் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் ஆற்றல் அல்லது முடிவு தானாக உண்டாகுதல். புதிய வீடு வாசல் புகுதல். வேலைவாய்ப்பு அமைய தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். இந்த இராசி மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை பலப்பட வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகார சச்சரவுகள் தீர வாய்ப்பு. தங்களின் இராசிக்கு 9 மற்றும் 11 ஆம் இராசியை குரு பார்பதால் சந்தை வணிகம், பொருள் வணிகம் ஆகியவற்றில் லாப உயர்வு. நுண்ணறிவுடன் காரியங்களை தீர்மானிக்கும் அருள் கிடைக்கும். உயர்உயர்  கல்வி வளர்ச்சி உண்டாகும். வாழ்க்கை கட்டமைப்பை ஒரு படி உயர்த்து கூடிய வாய்ப்பும் கிடைக்கும். ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

ஜோதிட துணுக்குகள் பகுதி 14 - மது என்ற பெரிய அரக்கனின் பிடி…

ஜோதிட துணுக்குகள் பகுதி 14 - மது (கள், சாராயம்) என்ற பெரிய அரக்கனின் பிடியிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் இதன் பகுதி 1




Powered by Blogger